-- முனைவர் ப.தேவி அறிவு செல்வம்
பொ.ஆ 2 முதல் பொ. ஆ13 வரை தமிழகத்தில் இருந்த எழுத்துமுறை வட்டெழுத்து. இவற்றுடன் கிரந்த எழுத்து கலந்ததுதான் மலையாள எழுத்து வடிவம். அவ்வாறான வட்டெழுத்துக் கல்வெட்டு மதுரை அருகே அருள்மிகு மணிகண்டீசுவரர் திருக்கோயிலில் உள்ளது.
கோயில் அமைப்பு:
இக்கோயிலில், அருள்மிகு மணிகண்டீசுவரர், அருள்மிகு உமா மகேஸ்வரி, அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்க பெருமாள் ஆகியோருக்கென மூன்று சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. இக்கோயிலானது விமானம் இல்லாத கற்றளியாக உள்ளது. சிவன் கோயிலில் பெருமாளுக்குத் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு:
இக்கோயிலில் எஞ்சியுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி:
தூணி...விருநாழியும்..ம் நில்லிரு குறுணி தயி...(ரா)ணட்டு மந்த் ராதி...ணிரு தூணிய்ங் நெல்லு நூற்றிரு
(நன்றி தொல்லியல் மூத்த அறிஞர் திரு.ராஜகோபால்)
பொ.ஆ950 வாக்கில் சோழருடன் போரிட்டு சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு இது. அவனுடைய அதிகாரி கண்டன் சாத்தன் என்பவர் திரு மாத்தூரில் ஸ்ரீகண்ட ஈசுவரம் என்ற கற்றளி எடுத்து, நிலம் கொடுத்து, அதில் ஒரு பங்கில் வரும் நெல்லினை கோயில் வழிபாட்டுப் பொருள்களைப் பிரித்துக் கணக்கிட்டுக் கொடுத்துள்ளார். இவ்விவரங்களைச் சொல்லும் கல்வெட்டின் ஒரு பகுதியாக இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது(Ref SII 5No.864-866).
---
No comments:
Post a Comment