-- தீனதயாளன்
காதலுக்குமுன்
எதுவும் பெரிதல்ல
எதுவும் ஒரு பொருட்டல்ல
அன்பு சுகம் வேண்டி
தானேயே ஒழியும்
கண்ணீரைப் பொழியும் - ஏன்
செந்நீரையும் சொரியும்.
உடலைத் துடிக்கவிடும்
உயிரைத் தவிக்கவிடும் - ஏன்
வாழ்வையும் தொலைத்துவிடும்.
காதலின் உயர்வுக்கு - பிற
எல்லாம் சிறிதே!
எல்லாம் குறுந்துகளே !
No comments:
Post a Comment