--ந.சுந்தரராஜன்
காண்பன யாதும்
தமிழே
கற்பனவும் தமிழே
பாராளும் ஆங்கிலத்திற்கும்
பண்டைய கிரேக்கத்திற்கும்
இலத்தீனுக்கும்
செம்மை செய்த வடமொழிக்கும்
முந்தையது
பரவிக்கிடக்கும்
பாறைகளில்
அறுபதாயிரம்
கல்வெட்டாக
ஆயிரம் செப்பேடுகள்
பனை ஓலைகளில்
விரவி யாதுமாகி
நிற்பது தமிழ்
தேமதுர
பாசக்கார
மதுரை தமிழாய்
நெல்லை தமிழாய்
மக்கா என
செப்பும்
குமரி தமிழாய்
முக்காலமும் ஆகி
நின்ற நிற்கும்
தமிழ்
ந.சுந்தரராஜன்
சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நாணயவியல் பிரிவு காப்பாட்சியர்
----
No comments:
Post a Comment