—— நூ.த.லோக சுந்தரம், நரசிங்கபுரத்தான்
தமிழகத்தில் உள்ள கோயில்களின் தோற்ற அமைப்பில், சில கோயில்கள் தூங்கானை விமானம் / கஜப்பிரஷ்டம் என வழங்கப்படும் யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு உடைய கோயில்கள். தூங்கானை மாடம் அமைப்பு பிற்காலத்ததாகத்தான் உள்ளன. இவ்வகை பெரும்பாலும் வட தமிழ் நாட்டில் உள்ளன. தொண்டை நாட்டிற்கே உரியது எனக்கூறும் அளவிற்கு மிக அதிகமாகத் தமிழகத்தின் வடபகுதியில் காணப்படுகின்றது இந்தத் தூங்கானைமாடம் அமைப்பு. ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்படாத பணிகளாகத் தெரிகின்றது. அதாவது ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் அமையவில்லை என்பேன். கிட்டத்தட்ட 100 கோயில்கள் இவ்வகையில் காணலாம். சென்னையிலேயே 7 க்கு மேல் உள்ளன. மிகவும் தெற்காக உள்ள கோவில் பெண்ணாகடம் கோவில்.
இதனில் மிகப்பழமையானது திருத்தணி வீரட்டேசுவரர் கோயில். மற்றும் சிறிய அமைப்பு வேறுபாட்டுடன் காண்பது காஞ்சியில் உள்ள சுரஅரேசுவரர் கோயில். இக்கோயிலும் இவ்வகை அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது காவித்துளை போல் (கிட்டத்தட்ட STATE BANK அடையாளம்).
தூங்கானை மாடம் எனில் இங்கு படுத்து தூங்குகின்ற யானை எனும் பொருள் கிடையாது.
தூங்கு = உயரத்தில் உள்ள (தூக்கு >> தூக்கணாங்குருவி>> தொங்கல்)
குலோத்துங்கன் = குலத்தை உயர்ச்சி செய்தவன்
அநேக(து) தங்காபதம் = இமயமலைத்தொடரில் உள்ள தேவாரப் பாடல்பெற்றத்தலம்
கயிலாயமலையே வணங்கப்படுவதுபோல் அந்தத் தொடரில் உள்ள பலவேறு (அநேகம்) மலையுச்சிகளும் கடவுளாகக் கொள்ளப்படும் நிலை (ஏகம் ஒருமை, அநேகம் பன்மை). காஞ்சியில் கயிலாய நாதர் கோயில் அருகேதான் கச்சி அனேகதங்காபதம் எனும் தேவாரப் பாடல்பெற்றத்தலம் உள்ளது.
கோயில் கட்டிட அமைப்பு பற்றி சில கருத்துக்கள்:
வானத்திலிருந்து பார்த்தால் சிவலிங்க வடிவில் தோற்றம் கொள்ளும் வகையில் இக்கோயில்களின் கருவறைக் கட்டப்பட்டுள்ளது. இவை யாவும் மேலிருந்து பார்க்கும் பொது சிவலிங்கவடிவில் தோன்றும் சிவன் கோயில்களாகும் (இதற்கு இணையாக மயிலையில் உள்ள கிருத்துவ தேவாலயத்தினை கழுகுப் பார்வையில் மேலிருந்து பார்த்தால் சிலுவையாகத் தெரியும் என்பதையும் நினைவில் கொள்ளலாம்).
கேரள கோயில்களிலும் கழுகுப்பார்வை சிவலிங்க கருவறைகள் அமைப்பில் பல கோயில்கள் உள்ளன. அதான்று கருநாடகத்தில் உள்ள சாரதா பீட கோயிலமைப்பும் இவ்வைகத்ததே. தூங்கானை மாடக்கோயில்கள் அமைப்பில் இன்னும் நிறையக் கோயில்கள் உள்ளன.
முன்குடுமிஈசுவரர், பொன்விளைந்த களத்தூர்
இக்கோயில் தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது .
இக்கோயில் தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது .
வீரட்டேசுவரர் கோயில்+ திருத்தணி
மிகப்பழைய கடைநிலை பல்லவர்கள் காலத்துப்பணி தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது, விமானமே கருங்கல்லால் ஆனது.
மிகப்பழைய கடைநிலை பல்லவர்கள் காலத்துப்பணி தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது, விமானமே கருங்கல்லால் ஆனது.
பொழிச்சலூர் கோயில்
சென்னை பல்லாவாராம் மேற்கு, சென்னை விமான தளம் தென் கோடிக்கும் தெற்கு.
திருக்கள்ளில் கோயில்
தேவாரப் பாடல்பெற்றத்தலம், தமிழ்நாட்டில் வட கோடி பெரியபாளையம் அருகு (மேலும் வடக்கு ஆந்திரத்தில் காளத்திதான் தொண்டை நாடு)
தூங்கானை மாடக் கோயில்களின் இருப்பிடங்கள்
—— நரசிங்கபுரத்தான்.
மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதம் என தற்பொழுது வழங்கப் பெரும் இடத்தில் உள்ள யானை சிற்பம் அனைவரும் அறிந்ததே. இவற்றில் நகுலன் / சகாதேவன் ரதம் தூங்கானை விமானம் கட்டுமானத்தை உடையது.
மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதம் என தற்பொழுது வழங்கப் பெரும் இடத்தில் உள்ள யானை சிற்பம் அனைவரும் அறிந்ததே. இவற்றில் நகுலன் / சகாதேவன் ரதம் தூங்கானை விமானம் கட்டுமானத்தை உடையது.
பல்லவர் கால முதல் கட்டுமான கோயில் எனப்படும் கூரம் சிவன் கோயில் கூட கஜப்பிரஷ்டம் தான்.
தமிழகத்தில் உள்ள கோயில்களின் வரலாறு தேடும் முயற்சியில் தூங்கானை விமானம் / கஜப்பிரஷ்டம் என வழங்கப்படும் யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு உடைய கோயில்களை பட்டியலிட்டு google map ல் குறித்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள கோயில்களின் வரலாறு தேடும் முயற்சியில் தூங்கானை விமானம் / கஜப்பிரஷ்டம் என வழங்கப்படும் யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு உடைய கோயில்களை பட்டியலிட்டு google map ல் குறித்துள்ளேன்.
https://www.google.com/maps/d/u/0/viewer?mid=1yYKNNBSGo1a0sB7dCfzC5w4DYegjnnPI&ll=13.387569980678185%2C83.19741252292829&z=6
________________________________________________________________________
தொடர்பு:
நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>
நரசிங்கபுரத்தான் <jaisureshkumar@gmail.com>
________________________________________________________________________
தொடர்பு:
நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>
நரசிங்கபுரத்தான் <jaisureshkumar@gmail.com>
உங்கள் விளக்கம் மிகவும் அருமை , தூங்கானைமாடம் என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்து மிகவும் நன்றி ,
ReplyDeleteSir please you mobile number send me sir I need to talk with you
ReplyDeleteகேசாவரம் கைலாசன் ஈஸ்வரமுடைய மஹாதேவர் திருக்கோவிலும் அருமையான தூங்கானைமாடம் காலம் 1097 மூன்று கல்வெட்டு சான்றுடன்.....
ReplyDelete