—— நூ.த.லோக சுந்தரம்.
உயரத்தில் யானைகள் நெருங்கமுடியாமல் கட்டப்பட்ட கோட்டைகள் காட்டினர் அக்காலத்து அரசர்கள். பகைவர் நாட்டினைப் பிடித்தவன் அவர்களில் அரண் அமைப்பினை இடித்துத் தள்ளி விடுவான். அத்துடன் அப்போதெல்லாம் கட்டிட அமைப்பும் கூட கிடையாது. காட்டு விலங்குகளுக்காக இயற்கையாக வேலிகளை வளர்த்து அதனுள் இருப்பர். மாற்றான் (ஆநிறை கொள்ளுதல் மீட்டல்) போர்த்தொடுத்தால் அவனது அரணை அழித்து எள்ளும் கொள்ளும் விதைத்து விடுவானாம். பிற்காலத்துக் கட்டிடங்களை யானைகளைக் கொண்டு இடித்துத் தள்ளாமல் இருக்க, யானைகள் ஏறமுடியாத சிறு சிறு குன்றுகள் மீது மிக உயர்ந்த மதில்களும் அதனை நெருங்க முடியாத அமைப்புகளும் தோன்றின.
போரிற்குப் பயன்படும் யானை ஏறமுடியாதபடி பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட இறையில்; இறை இல் =மன்னன் இருப்பிடம்
ஏயில் (எயில்) =கோட்டை (ஏ எனும் சொல் உயரம் தொடர்புடைய சொல் (ஏணி, ஏனாதி, ஏகம்பம் , ஏனுகு (யானை தெலுகு)
கோச் செங்கணான் எனும் சோழ மன்னன் காவிரிக்கரையில் யானை எளிதில் ஏற்கமுடியாத கோட்டைகளை = அதாவது கோயில்களை (கோ = இறைவன் மற்றும் தெய்வம்) கட்டிக் கொண்டதாக வரலாறு உண்டு. திருப்பனந்தாள் போன்று பனை மரத்தினடியிலோ ஆரூர் அறநெறி தண்டலை நீள் நெறி போன்று நாட்டின் பெருவழிகளில் வழிபடும் இடங்கள் அமைந்தன என்பதை அவற்றின் பெயர்களே காட்டும்.
"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து"
எனும் தேவாரத்தில் பலவகை கோயில்களை அமைந்தமை காணப்படுகின்றது (பொது ஆண்டு 650 பாடல்). பின்னாளில் கட்டிட அமைப்பு அகழி என்றெல்லாம் பெருகி உள்ளது. ஒன்றுக்குள் ஒன்று என சிதம்பரம் ஸ்ரீரங்கம் போல் 4- 5 பிரகாரங்கள் எனவும் வளர்ந்தது (அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகன் இதன் பிரதி). வெறும் மன்னன் இல்லமாக இருந்தால்தானே இடிக்கின்றனர். அதனால் கோட்டையும், எல்லோரும் வணங்கும் இறைவன் கோயிலாக மாற்றினர். ஆனால் தேவைப்படும் படைகள் தங்கும் (BARRACKS) கொட்டில்களாகிவிடும். வெறும் கருங்கல்லாலான தெய்வத்துக்காக உயர்ந்த மதில்கள் மிக உயர்ந்த கதவுகள் கட்டப்படவில்லை. கொடிமரமும் அரசனது கொடிகட்டி அறிவிக்கும் முயல்வு அவ்வளவே. யோகநிலை குண்டலினி முதுகுத்தண்டுபோல் காண்பது எல்லாம் வெறும் ஏமாற்று வேலையாக (கப்சாலாஜி) மடை மாற்றிக்காட்டும் கற்பனை முயற்சி நிலை.
இராசராசன் காலத்து இருந்த தனித்துவம் பெருமைபற்றி எழுந்த தஞ்சைக்கோயில் இறைவன் கருவறையில் மேலாகக் கட்டப்பட்டது. பின்னாளில் பாண்டியர்கள் விசய நகரத்தார் நாயக்கர் காலத்தில் வெளிமதிலில் நாற்புறமும் உயரத்திலிருந்து வேவுபார்க்கக் கட்டப்பட்டன (மேற்கத்திய நாடுகளில் உயரத்தில் bunkers அமைத்து நோட்டம் விடுவார் என்பதன் முன்னோடி). எங்கெல்லாம் கோயிலால் உள்ளனவோ அவையெல்லாம் குறு மன்னர்களின் கோட்டைகளே. இவை அமைக்கப்பட்டுள்ள இடம் startegic location ஆக இருப்பதைத்தான் காண்கின்றோம். அதாவது பெரும் ஆற்றினைக் கடக்கும் பெருவழியில் மலைக்கணவாய் வாயிலில் (திருவண்ணாமலை) அமைப்பர். திருவரங்கம் காவிரியின் தீவில் உள்ளது.
________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>
No comments:
Post a Comment