இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களும் தமிழறிஞர்களும்
பன்னாட்டுக் கருத்தரங்க அறிக்கை
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை, சென்னை ந. சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளை, முனைவர் மா. ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன் இணைந்து நடத்திய பன்னாட்டுக் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களும் தமிழறிஞர்களும் என்னும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் 06.12.2017 அன்று கல்லூரியில் நடைபெற்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர். சு. குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், “மனித வாழக்கையை இயக்குவன இலக்கியங்கள் என்றும் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தின என்றும் குறிப்பிட்டார். மேலும், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் இனமான உணர்வு, பெண்ணியச் சிந்தனை, கடந்தகால கண்ணீர், காதல், வீரம், குடும்ப அமைப்பு, அரசியல் நிலை, பண்பாடு ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளன” என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி. ஏ. வாசுகி அவர்கள் தலைமையுரையாற்றினார். ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் வீ. ரேணுகா தேவி அவர்கள் நோக்கவுரையாற்றினார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி ச. பத்மநாபன் அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. முருகேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் 263 பேராளர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்ட்து. கல்லூரிச் செயலர் டாக்டர் சி. ஏ. வாசுகி அவர்கள் ஆய்வுக் கோவையின் முதல் தொகுதியை வெளியிட மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு. குமரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாவது தொகுதியை ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் வீ. ரேணுகா தேவி அவர்கள் வெளியிட கலாநிதி ச. பத்மநாபன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாவது தொகுதியை ந. சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சு. இராமலிங்கம் அவர்கள் வெளியிட தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியின் மேனாள் தமிழ்ப்பேராசிரியர் சு. ஞானப்பூங்கோதை அவர்கள் பெற்றுக்கொண்டார். விழாவின் நிறைவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் க. பழனிவேல் அவர்கள் நன்றி நவின்றார்.
இலங்கை, மலேயா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
அன்புடன்
பேராசிரியர்.முனைவர் .ரேனுகாதேவி,
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை
No comments:
Post a Comment