Thursday, December 31, 2020
என்னே தமிழின் இளமை! - நெத்துரு
Saturday, December 12, 2020
எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்
Friday, December 11, 2020
திருக்குறள் குறியீடு படங்கள்
நீங்கள் திருக்குறளில் விருப்பம் உடையவரா?
நீங்கள் திருக்குறளில் விருப்பம் உடையவரா? அப்படியானால் சிறு படங்கள் மூலம் குறியிடப்படும் 10 திருக்குறள்களைக் கண்டு பிடியுங்கள் என்று ஒரு எண்ணிப்பார்க்கும் பயிற்சி முகநூல், புலனத்தில் பகிர்ந்திருந்தேன்.
ஆர்வத்துடன் முயன்று பல நண்பர்கள் குறட்பாக்கள் கண்டுபிடித்து எழுதினார்கள். சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தற்போது விடைக்கான குறள் தந்துள்ளேன்.
வாழ்த்துகள்!
சொ.வினைதீர்த்தான்
_________________________
1.
👍🗣️👎🗣️🍎🚫🍏✅
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
2.
💦🌷👱❤️📈
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளததனைய உயர்வு
3.
💰💰👂💰👉💰💰1⃣
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை
4.
🔥🔫🩹🩹🚫👅🔫🤕
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு
5.
👕😔🖐💁♂🤝
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
6.
💬❔❔👄👂👉💬❔💬👁️🧠
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
7.
🧠❔👉🤒🙋♂🤒
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை
8.
🐇🏹🎯🐘🎯❌🗡️👌
கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது
9.
❤️❔🔒😢💓
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
10.
👱🧔❌🌏🤫🚫
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்
----
or reload the browser
or reload the browser
Saturday, December 5, 2020
நிறைவான ஒரு ஒரு நிகழ்வு
-- மாரிராஜன்
நேற்று ( 4.12 .2020 ) நடைபெற்ற ஐரோப்பாவில் நிறுவப்பெற்ற திருவள்ளுவர் சிலைகளின் ஓராண்டு நிறைவு நாள். இந்நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாக ஏற்றுக்கொண்ட நாள். கடந்த வருடம் சரியாக இந்நாளில்தான் ஜெர்மனி அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக ஐயன் திருவள்ளுவரின் இரண்டு வெண்கலச் சிலைகள் இடம்பெற்றன.
தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு நிகழ்வுகளில்.. மகுடமாகத் திகழ்வது இந்நிகழ்வு..
கனவுகள் காண்பது எல்லோருக்கும் எளிது. கண்ட அக்கனவை நிஜமாக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கும். அந்த பாக்கியத்தை சற்று அதிகமாகப் பெற்றவர்தான் தமிழ் மரபு அறக்கட்டளைத் தலைவர் முனைவர். சுபாஷிணி அவர்கள்.
ஐரோப்பா..ஜெர்மனி..
லிண்டன் அருங்காட்சியகத்தில் ஐயன் திருவள்ளுவரின் சிலையை நிறுவ வேண்டும் என்பது சுபாஷிணி அவர்களின் கனவு. இக்கனவு நிஜமாவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.
தமிழகத்தில் சிலை செய்து, தமிழக அரசின் அனுமதி பெற்று, ஜெர்மனி கொண்டுவந்து, அருங்காட்சியகத்தின் வழிகாட்டுதல் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து சிலையை நிறுவி, அதை ஒரு மாபெரும் விழாவாக எடுத்து...எளிதான ஒரு செயல் அல்ல..
எத்தனையோ தடைகள்.....
ஏராளமான பிரச்சனைகள். கடும் மன உளைச்சல். வீண் வம்பர்களின் விமர்சனங்கள்.
தடைகள் அனைத்தையும் உடைத்து, அருங்காட்சியகத்தில் சிலையை நிறுத்தி தான் கண்ட கனவை நிஜமாக்கினார். இவரது இந்த சாதனை மூலம் சரித்திரத்திலும் இடம்பெற்றார்.
சிலை நிறுவிய ஓராண்டு நிறைவு விழாதான் இந்நிகழ்வு.
ஏறக்குறைய மூன்று மணிநேரம், வள்ளுவன் காட்டிய வழியை நினைவு கூர்ந்த நிகழ்வு.
நிகழ்வின் துவக்கமே அசத்தல். திருக்குறள் சிலவற்றுக்கு இராகம் கொடுத்து இசையுடன் பாடி அபிநயம் பிடித்த அற்புதமான நிகழ்வு.
குறளுக்குப் பரதம் ஆடிய அந்த தமிழ் பெண். ஆடலும், பாடலும் பரவசம். இது முன்னமே பதிவு செய்த ஒன்றுபோல் தெரிகிறது. முழுவதையும் பார்க்க ஆவல்.
நிகழ்வின் முன்னோட்டமாக சுபாவின் முன்னுரையைத் தொடர்ந்து..அருங்காட்சியக் காப்பாளர் டாக்டர். ஜார்ஜ் நோவாக் அவர்களின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். வணக்கம் என்று அவர் ஆரம்பித்தது சிலிர்ப்பு.
முன்னாள் மொரிஷியஸ் துணைஅதிபர் திரு.வையாபுரி பரமசிவம் பிள்ளை அவர்களின் உரையும் சிறப்பான ஒன்று.
குறள் பற்றி பேசும் இடத்தில் அவசியம் நான் இருப்பேன் என்ற கொள்கையுடன் இருக்கும் திரு.பாலகிருஷ்ணன். இ.ஆ.ப. அவர்களின் பொழிவு வழக்கமான வள்ளுவத்தைப் பகிரும் அவரின் உரை. தயவு கூர்ந்து வள்ளுவனுக்கு எந்த ஒரு சமய மத போர்வையும் போர்த்தாதீர்கள். வேட்டி கட்டிய தமிழனின் தோழன்தான் வள்ளுவன். அருமையான சொல்லாடல். நோபல் விருதைவிட நான் ஒரு தமிழ் மாணவன் என்பதே எனது மகுடம் என்ற அவரது கருத்திடல் இளம் தலைமுறையினரிடம் சேரவேண்டிய ஒன்று.
திருக்குறளுக்கு ஏராளமான விளக்கவுரை எழுதியாகிவிட்டது. திருக்குறளை திறனாய்வு செய்யவேண்டும் என்று திரு.பாலசந்திரன் இ.ஆ.ப அவர்களின் கோரிக்கை சரியான ஒன்று.
திருவள்ளுவர் சிலையின் உருவாக்கம் குறித்த திரு. சன்னாவின் சுருக்கமான உரை.
அப்புறம்..
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய .. மலர்விழி, குமரன் மற்றும் கார்த்தி.
மிகையில்லா ஆளுமை. அருமை. வாழ்த்துகள்.
மழலைக் குரலில் திருக்குறளைக் கேட்க அவ்வளவு ஆனந்தம்.
அந்தத் தமிழ் பிள்ளைகள் தமிழுடன் வளர்வார்கள். வரும் காலம் அவர்களுக்கே.
மொத்தத்தில்..
உலகத்தமிழர்கள் ஒன்று கூடி வள்ளுவனை ஆராதனை செய்த நிகழ்வு..
" வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு .... " என்ற பாரதியின் வரிகளுக்குப் பொருத்தமானது நேற்றைய நிகழ்வு.
or reload the browser
or reload the browser
or reload the browser
or reload the browser
Thursday, November 26, 2020
கல் முகவடிவங்கள் கண்டுபிடிப்பு - துருக்கி
சுபாஷிணி
நீண்டகால மனித குல நாகரித்தின் சான்றுகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் துருக்கி சிறப்பு முக்கியத்துவம் பெரும் ஒரு நாடு. பண்டைய தொல் நகரமான Stratonikeia, Muğla பகுதியில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் இங்கு கல்முகவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரில் ஏறக்குறைய 2200 ஆண்டுகள் பழமை என அறியப்படுகின்ற இந்த கல்முகவடிவங்கள் பண்டைய தெய்வ வடிவங்கள், விலங்குகள் ஆகியவற்றை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
Sunday, November 22, 2020
பாரி நிலையம் செல்லப்பன்
Thursday, November 19, 2020
நாயக்கர் காலத்து கல்திட்டை மற்றும் நடுகற்கள்
or reload the browser
Wednesday, November 18, 2020
ஆலகிராமத்தின் பண்டைக்காலச் சிற்பங்கள்
Thursday, November 12, 2020
பெருந்தொற்றுகளின் காலம்: புதுச்சேரியின் அனுபவங்கள்!
Tuesday, November 10, 2020
மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம்
மாற்றுப்பாலினம் & பாலீர்ப்பு கொண்டோர் இணையவழிக் கருத்தரங்கம்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வையத்தலைமை கொள் பிரிவு அக்டோபர் 30, 2020 தொடங்கி நவம்பர் 1, 2020 வரை மூன்று நாட்கள் ஏற்பாடு செய்து நடத்திய இணைய வழி விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இக்கருத்தரங்கம் 'கலையும் வரலாறும்', 'பண்பாடும் மானுடவியலும்' மற்றும் '
மூன்று நாட்களும் கருத்தரங்க நிகழ்வுகளைத் தோழர் ஆனந்தி, முனைவர் பாப்பா, தோழர்
தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர்
1948இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனம் மனிதர்கள் அனைவரும் சமம் என்று வெளியிட்டது. 2014இல் அவர்கள் வெளியிட்ட அறிக்கை தமிழில் உள்ளது. இவர்களுக்கெனத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு அது பதினான்கு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். மாற்றுப்பாலினம் பற்றிய விழிப்புணர்வு உருவாவதற்குப் பள்ளிக்கூடச் சூழலில் மாற்றம் வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு நாம் உதவவேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளில் வெளிப்படையாகத் தம்மை மாற்றுப்பாலினம் என்று வெளிப்படுத்திக்கொண்டு இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல நமது சூழலிலும் மாற்றுச்சிந்தனை தேவை என்று கூறியதோடு உலகளாவிய நிலையில் மாற்றுப்பாலினச் சாதனையாளர்களைப் பட்டியலிட்டார்.
மூன்று நாட்களும்
மூன்று நாட்களும் நடைபெற்ற கலந்துரையாடல் பங்கேற்பாளர்களிடையே LGBT குறித்ததொரு நல்ல புரிதலையும் இதுகுறித்துப் பரந்துபட்ட மனதுடன் வெளிப்படையான பேச்சுக்கும் வழி செய்தது.
முதல் நாள் நிகழ்வு: கலையும் வரலாறும் :
முதல் கருத்துரை ஸ்ரீ
சமூகத்தில் மனிதராக இவர்களுக்கு மரியாதை தரவேண்டும், அவர்களது குறைகளை முதலில் கேட்கவேண்டும், இவர்கள்
இரண்டாவதாக, சங்கம நிறுவனத்தின் துணைத்தலைவர், சமூகச் செயல்பாட்டுக்கான கேரள அரசின் விருது (2012) பெற்றவர், எழுத்தாளர் தோழர்
சமூகம் மற்றும்
முதலில் ஆண்களுக்கு, பிள்ளைகளுக்கு இது குறித்துக் கற்றுத்தருதல் வேண்டும். நான் எப்படி வாழ வேண்டும், எனது ஆசை, கனவுக்கேற்ற வகையில் நான் வாழ வேண்டும் என்றும்
இதையடுத்து கேரளத் திருநங்கையர் பற்றித் தோழர்
சமூகத்தில் தங்களைப் பற்றிய தரவுகள்
இன்றைய
இரண்டாம் நாள் நிகழ்வு: மானுடவியலும் கலாச்சாரமும்:
இரண்டாம் நாள் நிகழ்வில் முதலில் பேசியவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிர்வாகவியல்
இரண்டாவதாகப் பேசியவர் திருப்பூர்
மூன்றாவதாகப் பேசியவர் இருபது வருடங்களுக்கும் மேலாக விளிம்புநிலை மக்களிடம் பணியாற்றிவரும் தோழர் கலைமாமணி சுதா அவர்கள்.
திருநங்கையர் கூடுமிடமாகிய
குடும்பம் எனும்போது இரண்டு ஏற்கவியலாத, வருந்தத்தக்க நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். ஒன்று – திருநங்கையாக மாறியபின் ஒருவரை அவரது குடும்பம் அவர் எவ்வழியில் சம்பாதித்தாலும் பரவாயில்லை என்று அப்பணத்திற்காக மட்டுமே ஏற்கிறது, இரண்டு – குடும்பம் ஏற்பதைப் பெரிதாக நினைக்கும் திருநங்கையரும் சாதி, சமயத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இன்னும் மாற்றுப்பாலினத்தவர் தன்னைப் பற்றி அறிந்த பிறகு குடும்பத்திலிருந்து வெளியில் வருவதே சரி என்றும் இல்லையெனில் அக்குடும்பம் அவரைப் பெண்ணாகவே இருத்தி இன்னொரு ஆணுக்குத் திருமணம் செய்வித்து இருவரது வாழ்க்கையையும் பாழாக்கிவிடும் என்றார். மேலும் திருநங்கையைவிடத்
மூன்றாம் நாள் நிகழ்வு:
ஏழாவது கருத்துரையை வழங்கிய இலங்கையைச் சார்ந்த
இந்தியாவில் அதிகார ஒடுக்குமுறை, திருநங்கையருக்குள்ளும் ஒருவரையொருவர் ஒடுக்குதல் உள்ளது. அது போன்று இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தோம் என்று கூறினாலும் இந்தியாவில் தனக்கு
இலங்கையில் Jafna Transgender Network அமைப்பின்வழி சுயதொழிலுக்கான உதவியும் பயிற்சியும் வழங்குதல், இவர்கள் தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான சிக்கல் இருப்பதால் உளவியல் ரீதியாக ஆறுதல் தருதல், உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வைக் கொடுத்தல் என்கிற வகையில் பணிசெய்து வருவதையும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இப்படியொரு சமூகம் இருப்பதையும் இவர்களது சிக்கல்களையும் சொன்னால்தான் தெரிகிறது என்றும் கூறினார். இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் தங்களுக்கு ஆதரவு அதிகம், தங்களோடு அவர்கள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
எட்டாவது கருத்துரை தென்கொரியாவில் வசித்துவரும் தோழர் சம்யுக்தா விஜயன். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்தச்சமூகம் பற்றிச் சிந்தித்த கணத்திலிருந்தே நான் பெண் என்று கூறும் இவர் தனது குடும்பம், பள்ளி, ஆசிரியர், நண்பர்கள் எனத் தன்னைச் சுற்றியிருந்த அனைவருடைய ஆதரவும் இருந்ததால் தனது வாழ்வில் எத்தகைய சிக்கலும் இல்லை என்று கூறினார். இந்தியாவில் இது பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கவில்லை. திருநங்கையர் குறித்த சொற்களின்
பாலினம் பற்றிய இவரது அறிவியல் ரீதியான விளக்கம் தெளிவாக, பயனுள்ளதாக, மிகுந்த புரிதலுடன் கூடியதாக இருந்தது. இவ்வுலகம் பகல் மற்றும் இரவால் ஆனது என்றாலும் முற்பகல், பிற்பகல்,
வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சில கோரிக்கைகளையும் முன்வைத்தார். மொழி ஆண் மொழியாகத்தான் இருக்கிறது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒரு இடமாவது வேண்டும். பள்ளிக்கல்வியிலிருந்தே
அறிக்கை தயாரிப்பு: முனைவர். பாப்பா
or reload the browser
or reload the browser
or reload the browser
or reload the browser
or reload the browser
or reload the browser