நாமக்கல், செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.12.2017 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை மையம் இனிதாகத் துவங்கப் பெற்றது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ந. இராஜவேல் அவர்கள் மையத்தைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கி, மாணவர்கள் சிறப்பாகப் பங்களிக்க வேண்டியும் எடுத்துரைத்தார். தமிழ் இலக்கியவியல் முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதிந்தித்து தமிழ்க்குடியின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் தொன்மை குறித்து செயற்குழு உறுப்பினர் திருமதி.பவளசங்கரி உரையாற்றினார்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் திருச்சி பகுதி தொடர்பாளரும் தூயவளனார் கல்லூரியின் பேராசிரியர் சூசை அவர்கள் சிறப்பு சொற்பொழிவை வழங்கினார்
பெப்ரவரி மாதம் 27ம் தேதி இதே கல்லூரியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நிகழ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
No comments:
Post a Comment