Wednesday, January 13, 2016

கலித்தொகை முல்லைக்கலியில் ஏறுதழுவுதல் (மாடு பிடித்தல்)

 -- முனைவர் கி. காளைராசன்

முல்லைக்கலியில் முதல் ஏழு பாடல்களில் ஏறுதழுவுதல் (மாடு பிடித்தல்) பற்றிய குறிப்புகள் எல்லாம் வருகின்றன.


இப்பாடலைச் சோழஅரசன் பாடியுள்ளான். ஆனால் பாண்டிய நாட்டில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு ஏறுதழுவுதல் பற்றிப் பாடுகிறான். ஐவகை நிலங்களில் ஒன்றான முல்லைநிலத்தில் ஏறுதழுவுதல் என்பது ஒரு ஒழுக்கம். ஆனால் இதுபற்றிய குறிப்பு, சங்க இலக்கியத்தில் முல்லைக்கலியில் மட்டுமே உள்ளது.

பின்னாளில் இது பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் கலித்தொகையில் முல்லைக்கலியில் உள்ள ஏழு பாடல்களிலும் இதுபற்றிய குறிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.  விறுவிறுப்பாக ஒரு நாடகம் போன்று,
அதோ அந்தக் காளை வருகிறது.
வெள்ளைக்காளை வருகிறது.
கருப்புக் காளை வருகிறது.
காளை பாய்கிறது.
வீரன் அதை அடக்குகிறான் என்பன பற்றியெல்லாம் சோழமன்னன் பாடியுள்ளான்.

இந்த விளையாட்டு போல்  இந்தப் பாடலும் விறுவிறுப்பாக இருக்கும், பாடலில் உள்ள வார்த்தைகளும் சிறுசிறு வார்த்தைகளாகவே இருக்கும்,.

மிகப்பெரிய விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வளவளவென்று பேசிக் கொண்டிருக்க முடியாது.  எனவே சிறுசிறு வார்த்தைகளாகவே இந்த வர்ணனை அமைந்திருக்கும்.

சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் என்பது பாண்டிய நாட்டில்தான் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறிப்பு:
காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் நா.வள்ளி அவர்கள் சொன்னபடி, கி.காளைராசன் எழுதியது.
 
கி.காளைராசன்
 
முனைவர் கி.காளைராசன்

kalairajan26@gmail.com

No comments:

Post a Comment