இத்தாலி நாட்டின் தலைநகரான வரலாற்றுச் சிறப்புமிக்க உர்பானோ கல்லூரியில் பழமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க உரோமை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 5, 2022 அன்று மாலையில் மேதகு கர்தினால் லூர்துசாமி நாளை முன்னிட்டு ஒரு தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐரோப்பியத் தமிழியல், ஐரோப்பியரின் தமிழ் இலக்கிய இலக்கண செயல்பாடுகள், அதனடிப்படையில் உருவான ஆவணங்கள் என்பன பற்றி உரையாற்றினேன். உரோமை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை ஜான் போஸ்கோ அவர்களுடன் திரு கௌதம சன்னா, அருட்தந்தை லார்ட் வின்னர் ஆகியோர் உரைகளும் இடம் பெற்றன.
அருட்பணியில் கல்வி கற்கும் மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகளும் இணைந்தன. சீரிய முறையில் பணியாற்றும் உரோமை தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
— முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
No comments:
Post a Comment