"இமிர் கருந்தும்பி"
குமிழப் பரந்த வெள்ளிடைத் தீஞ்சுரம்
குலாவ ப்பூஞ்சினை இமிர் கருந்தும்பி
ஆலாடு விழுதின் செம்புல மன்றில்
புற்றம் ஆங்கொரு குற்றம் செத்து
நிழற்குடை கவித்த எழிலின் ஆட் சி
இறையுண்ட சீர்மலி வேந்தின் அன்ன
தமியள் அப்பால் ஒருதனி யிருந்தாள்
தன்னை அங்கு தனியொளி காட்டும் என்று.
பொழிப்புரை :
குமிழ மரங்கள் உடைய அந்த வெட்ட வெளியிடையேயும் அழகிய இனிமை செறிந்த காட்டுவழியொன்றில் வளைந்து வளைந்து அந்த மரத்தின் பூங்கிளைகள் உரசும். அதன் மீது கரிய சிறு வண்டுகள் ஒலியெழுப்பும்.
ஆல மர விழுதுகள் ஆடும் ஒரு செம்புலத்து மேட்டில் குன்றம் போல் ஒரு புற்று உயர்ந்து நிற்கிறது. அந்த அடர்ந்த காட்டின் நிழல் ஒரு குடைபோல் கவிந்து ஒரு வெண்கொற்றக்குடையாய் அந்த அழகின் ஆட்சியை நடத்துகிறது.
ஆனால் அந்த அழகு கோலோச்சும் திறனுக்கும் திரை (கப்பம்) செலுத்தப்பட்டு பெறும் ஓர் அரசன் போல் அவள் (தலைவி) அங்கு வீற்றிருக்கிறாள். ஒரு தனி சிறப்புடன் அவள் அங்கு அமர்ந்திருக்கிறாள்.
தனது தலைவன் (தன் + ஐ =தன்னை) அங்கு வந்துவிடுவான்.அவன் வந்தவுடன் அவனது முகம் பூக்கும் பேரொளி அங்கு பரவி நிற்கும் என்று அவள் மகிழ்கிறாள்.
— ருத்ரா இ. பரமசிவன் (சொற்கீரன்)
No comments:
Post a Comment