——அண்ணாமலை சுகுமாரன்
இன்று சதயத்திருநாள் !
மாமன்னர் இராசராசனின் 1032வது சதய விழா !!
மாமன்னர் இராசராசன் அவதரித்தநாள் !!!
சதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். அது ஒரு பெருமைபெறுகிறது இராசராசன் அதில் பிறந்ததால்.
இந்தியவரலாறு குப்தர்களையும்,மௌரியர்களையும் விஜயநகர அரசர்களைப் பற்றிச் சொல்லுமளவிற்கு ராஜராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ அதிகம் சொல்வதில்லை. ஆதாரங்கள் என்னமோ கொட்டிக்கிடக்கிறது.
தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மிகப் பழமையானது சோழநாடு. இதனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகரது கல்வெட்டிலும் கூடக் காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலகட்டத்தின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சிபி, முசுகுந்தன், மனு, செம்பியன் என்று புராணங்களில் அவர்களின் மரபு இடம் பெற்றிருக்கிறது. அதனால் தான் வரலாற்றில் இருந்து அவர்கள் விடுபட்டார்களா என்று தெரியவில்லை .
இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.
இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே ஆகும்.
அவரது பிறந்த நாள் - 943 ஐப்பசி சதயம் நட்சத்திரம் (கி.பி. 943) என்று பேராசிரியர் சி. கோவிந்தராசனார் மற்றும் முனைவர் சி. கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு (பக்கம் 102) எனும் நூல் குறிப்பிடுகிறது. (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடு) மேலும் வேறுபட்ட கருத்துக்களும் சில உண்டு.
இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் செப்புவதாக முனைவர் சூ. சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இராசராசன் வரலாற்றில் பெற்றிருந்த சிறப்பை அவரது சிறப்புப் பெயர்கள் - 42 குறிப்பிடுகின்றன .
1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மொழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
22. உத்தமசோழன்
23. மூர்த்தவிக்கரமாபரணன்
24. உத்துங்கதுங்கன்
25. உய்யக்கொண்டான்
26. உலகளந்தான்
27. தெலிங்ககுலகாலன்
28. கேரளாந்தகன்
29. மூர்த்தவிக்கரமாபரணன்
30. சோழேந்திரசிம்மன்
31. சோழநாராயணன்
32. சோழகுலசுந்தரன்
33. சோழமார்த்தாண்டன்
34. பாண்டியகுலாசனி
35. சிவபாதசேகரன்
36. சிங்களாந்தகன்
37. சத்துருபுஜங்கன்
38. சண்டபராக்ரமன்
39. ஜனநாதன்
40. சத்திரியசிகாமணி
41. கீர்த்திபராக்கிரமன்
42. தைலகுலகாலன்
அரியனை அமர்ந்தநாள் - ஆடி மாதம் 22ம் நாள் 985வது வருடம் 18/07/985
ஆட்சி ஏற்ற வயது - 42ம் வயது
தஞ்சை பெரியகோயில் கட்டியது - ஆட்சியாண்டு 25, 275ம் நாள் சனிக்கிழமை
குடமுழுக்கு செய்த நாள் - 22/04/1010 (புனர்பூச நட்சத்திரத்தில்)
இறந்த நாள் - 17/01/1014 (ஆட்சியாண்டு 29, மார்கழி மாதம் பூர்வபட்சம் சதூர்த்தசி திதி)
வாழ்ந்த கால வயது - 71 ஆண்டுகள்
தஞ்சை பெரியகோயில் என்றும் ஒரு அதிசயமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம் பரிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. உலக அளவில் இதன் கட்டிடக் கலை சிறப்பை வியக்காத வல்லுநர்களே கிடையாது. இராசராச சோழன் சிவபெருமானுக்கு ஆத்மார்த்தமாகக் கட்டிய (கி.பி.985 - 1012) அரும்பெரும் ஆலயம் இது. இங்குள்ள மூலவர் பிரம்மாண்டமானவர், 13 அடி உயரம் உடையவர். ஆவுடை மட்டும் 54 அடி சுற்றளவு உடையது. மேல் பாணத்தின் சுற்றளவு மட்டும் 23 அடி. இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. அம்பாள் 9 அடி உயரம் உள்ளவர். இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனப்படுகிறது.
முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளைக் கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.
ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்.
எத்தனை அழகாகத் தனது வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் பாருங்கள். இன்னமும் தமிழர்கள் வரலாற்று அறிவு இல்லாதவர்கள் என்று பழி சுமத்தப்படுகிறது. பதிவுகள் என்னமோ மிகவும் உண்டு ஆனால் சரிவர ஆராயப்படவில்லை.
மாமன்னர் இராசராசன் ஆண்ட காலத்தில் நடைமுறையில் இருந்த வரிகள் சில சோழர் காலத்தில் மக்களுக்கு இடப்பட்ட வரிகள். மக்களின் தேவைகள், மகேசனின் தேவைகள் இவற்றை நிறைவேற்ற அரசுக்குப் பொருள் வேண்டாமா? இதோ அரசின் வருவாய்க்கான வரிகள்:
1. அங்காடிப் பட்டம்
2. இடப்பாட்டம்
3. இலைக் கூலம்
4. இரவுவரி
5. இறை
6. ஈழம்
7. உல்கு
8. ஊரிடுவரி
9. எச்சோறு
10. ஏரிப்பாட்டம்
11. ஓடக்கூலி
12. கண்ணாலக்காணம்
13. காவேரிக்கரை வினியோகம்
14. குசக்காணம்
15. குடிமை
16. சபாவினியோகம்
17. சித்தாயம்
18. சில்லிறை
19. சில்வரி
20. செக்கிறை
21. தட்டார்ப் பாட்டம்
22. தரகு
23. தறியிறை
24. நாடுகாவல்
25. நீர்க்கூலி
26. பாடிகாவல்
27. பூட்சி
28. போர்வரி
29. மரமஞ்சாடி
30. மரவிறை
31. மனை இறை
32. மீன் பாட்டம்
33. வண்ணாரப்பாறை
கடல் கடந்து வாணிகத்திலும் ஆதிக்கத்திலும் கோலோச்சிய சோழர்கள் நீர்ப்போக்குவரத்திலும் சிறந்து விளங்கினர். இதோ கி.பி. 9 - 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் என்னும் நூல் குறிப்பிடும் கப்பலின் பெயர்கள்:
1. வங்கம்
2. பாடை
3. தோணி
4. யானம்
5. தங்கு
6. மதலை
7. திமில்
8. பாறு
9. அம்பி
10. பாரி
11. சதா
12. பாரதி
13. நௌ
14. போதன்
15. தொள்ளை
16. நாவாய்
இவரின் பெருமைக்கு இன்னமும் பல சிறப்புச்செய்திகள் வரலாற்றில் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் முக்கிய ஒன்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அது ஒரு அறிவியல் அற்புதம் ! சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் தரத்தை நிர்ணயிக்கவும் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன் என்பவன் தலைமையில் இராசராசன் ஒரு குழு அமைத்தான். இக்குழு தனது பணியைக் குறைவறச் செய்து அரசனின் பாராட்டைப் பெற்றது. நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல் “உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது.
எந்தவித சாதனங்களும் கண்டறியாத அந்த காலத்திலேயே நிலத்தை அளந்து தரம் பிரிப்பதென்பது ஒரு அசாதாரண பணி, இதனை மிகவும் சீரிய முறையில் சாதித்த சோழராஜனின் மகுடத்தில் இந்த அரிய பணி ஒரு வைரம்.
உலகளந்தான் கோல் பற்றிய சில விவரங்கள்:
24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம்
33” ஆங்கில அளவிற்குச் சமமானது கிஷ்கு முழமாகும்.
இத்தனையும் செய்த மாமன்னரின் சிலை இருக்குமிடம் அறிந்தால் வருத்தம் மிகும் .பெரியகோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன் அதற்கு நிர்வாக அலுவலராக இருந்த ஆதித்தன் தென்னவன் மூவேந்த வேளாளன் என்பவர் இராசராச சோழனுக்கும் அவரது மனைவி லோகமாதேவிக்கும் செம்பில் உருவச் சிலைகள் செய்தார். இராசராச சோழன் உயிருடன் இருக்கும் போதே செய்யப்பட்ட இச்சிலைகள் இப்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கெளதம் சாராபாய் தனியார் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இராசராசசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் இந்தச் சிலையும் தற்போது வடக்கே சாராபாய் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
இந்த அற்புத வரலாற்று முக்கியம் வாய்ந்த சிலைகளை மத்திய அரசின் உதவியோடு மீண்டும் தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து தஞ்சைக் கோயிலில் வைக்கவேண்டும்.இதுவே மாமன்னர் இராசராசனுக்கு நாம் செய்யும் நன்றி கூறல் ஆகும்.
அண்ணாமலை சுகுமாரன்
(30-10-2017)

________________________________________________________________________
தொடர்பு: அண்ணாமலை சுகுமாரன் (amirthamintl@gmail.com)
No comments:
Post a Comment