Monday, September 4, 2017

தமிழ் மரபு அறக்கட்டளை - சங்கரலிங்காபுரம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர் மரபு மைய நிகழ்வு

சங்கரலிங்காபுரம் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர் மரபு மையமும், உசிலம்பட்டி  எழில் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும்  மரக்கன்றுகள் நடும் விழா, மர விதைகளை மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் தூவும் விழா!

பள்ளி மாணவர்களிடையே இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்ச்சியை மேம்படுத்தவும்,  மர விதைகளைச் சேகரிப்பது, மரங்களை நடுவது போன்ற செயல்களில் ஆர்வத்தை ஈடுபடுத்தும் வகையிலும் ஒரு நாள் நிகழ்வு ஒன்றினை தமிழகத்தின் மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா,  சங்கரலிங்காபுரம் எனும் சிற்றூரில்  உள்ள அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் வருகின்ற 31.08.2017 மதியம் 2:00 மணிக்கு நிகழ்த்த ஏற்பாடாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பள்ளி மாணவர் மரபு மையப் பொறுப்பாளர் ஆசிரியர் சி.மு.பாலச்சந்தர்  ஏற்பாடுகள் செய்து வருகின்றார்.


இந்த நிகழ்வினை முன்னின்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து மரக்கன்றுகளை நடும் விழாவினைச் சிறப்பிக்க உள்ளார் தமிழ் வளர்ச்சித் துணைஇயக்குநர் முனைவர்.க. பசும்பொன் அவர்கள். அவருடன் த.ம.அ வின் பொறுப்பாளர் முனைவர் வீ.ரேணுகா தேவி அவர்களும் கலந்து கொள்கின்றார்கள். இந்த நிகழ்வின் போது 80 மரக்கன்றுகள் இப்பள்ளி அமைந்துள்ள கிராமத்தில் நடப்படும். அத்துடன் மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவாரத்திற்குச் சென்று மாணவர்கலே அவர்கள் சேகரித்த விதைப்பந்துகளாக உருவாக்கி தூவி வருவர்.

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள கிராமப்புற தலித் பெண்களுக்கான சட்ட விதிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் ஒன்றினை எவிடன் சமூக நல அமைப்பின் தலைவர் தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்கள் நடத்த உள்ளார். 

இந்த நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு த.ம.அ நண்பர்கள் அனைவரையும் அழைக்கின்றோம். உங்கள் வருகை இந்த நிகழ்வினை சிறப்பிக்கும். தொடர்புக்கு : 9944095796  -நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
ஆகஸ்ட் 26, 2017





தமிழ் மரபு அறக்கட்டளையும் எழில் அறக்கட்டளை உசிலம்பட்டி இணைந்து மாணவர்கள் முயற்சியில்  செயல்படுத்திய மரம் நடும் விழாவில் 70 மரக்கன்றுகள்  நடப்பட்டன.

த.ம.அ சங்கரலிங்காபுரம், மதுரை ஆதிதிராவிடர் உயர் நிலைப்பள்ளி மாணவர் மரபு மைய பொறுப்பாளர் திரு பாலச்சந்தர் மரக்கன்றுகளை நடும் விழா, விதைப்பந்துகள் தூவும் விழாவைச் சிறப்பாக செய்திருந்தார்.


ஏப்ரல் மாதம் தொடங்கி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் சேகரித்து வந்த சீமக்கருவேல மரங்களின் விதைகளும் எரிக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில் பங்கு பெற்ற மாணாக்கர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினோம்.

இந்த நிகழ்வினை  என் சார்பில் நேரில் சென்று த.ம.அ பிரதிநிதியாகக் கலந்து கொண்டு சிறப்பளித்த முனைவர் பேராசிரியர் ரேணுகாதேவி அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்தோடு இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு  நம்மைச் சிறப்பித்த முனைவர் பசும்பொன் அவர்களுக்கும்  எனது நன்றி.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தலித் சமூகப் பெண்களுக்கான சட்டம் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து கொண்ட தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த நிகழ்ச்சிக்கு முதுகெலும்பு போல உழைத்த தோழர் பாலச்சந்தர் அவர்களது பணி சிறப்பானது. அவருக்கு எனது பிரத்தியேக நன்றி.

சென்ற ஆண்டு  டிசம்பரில் எனது நேரடி வருகையின் போது இங்கு பள்ளி அருங்காட்சியகத்தை  - அதாவது தாவரவியல் அருங்காட்சியகத்தைத் துவக்கினோம். அதன் நீட்சியாக இப்போது இந்த நிகழ்வை முடித்திருக்கின்றோம்.

















அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
செப் 4, 2017


No comments:

Post a Comment