Sunday, June 27, 2021

கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்காலத் தொழிலிடங்கள்


-- முனைவர்.ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்



இன்று ஊராட்சியாகச் சுருங்கி விட்ட கங்கைகொண்ட சோழபுரம் சோழர்காலத்தில் தஞ்சாவூருக்குப் பிறகான தலைநகராகவும் பெரும் வணிக நகரமாகவும் இருந்தது.  அதன் பகுதிகள் ஆறு மைல் விட்டமுள்ள வட்டத்திற்குள் அடங்கும். பலதரப்பட்ட வாழ்விடப்பகுதிகள் இருந்தது.

பெரும் உலைக்களங்கள் இருந்திருக்கும், நாணயச்சாலை இருந்திருக்கும்.  வணிகப் பெருந்தெருக்கள் இருந்தன, படைவீடுகள் இருந்தன. பெரும் அளவிலான மக்கள் வாழ்விடப்பகுதி அமைந்து அதில் வாழ்ந்தனர். இவற்றை அகழும் பொழுது தான் நகரின் முழுமையை அறிய இயலும். மன்னர்களின் வாழ்விடமான அரண்மனைப் பகுதியான மாளிகைமேடு தமிழகத் தொல்லியல் துறையால் அகழ்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நகரமைப்பைத் தேடும் முயற்சியில் உலைக்களங்கள் அமையப்பெற்ற உற்பத்திப் பகுதியைக் கண்டறிந்துள்ளோம். இது எம்மூரால் கொல்லங்குழி என அப்பகுதி அழைக்கப்படுகிறது. கொல்லன்கள் குடியிருப்பாக கல்வெட்டு கூறும் கம்மாளர்ச்சேரியாக இருக்கலாம் அல்லது பெரிய உலைக்களம் கொண்ட பெரும் தொழிற்சாலைப் பகுதியாக இருக்கலாம். அதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. உலைவாய், உருக்குற்றுவாய், உருக்கு கசடுகள், உலைச்சலாவாய், பானை ஓட்டுக்குவியல், குலதெய்வக்கோவில் என ஒறு நூற்றுக்கு மேல் விரிந்துகிடக்கிறது.

Gangaikonda Cholapuram.JPG

இவற்றை விவரித்தவுடன் தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் நேரில் கள ஆய்வுக்கு வருவதாக கூறியுள்ளார். எம் கங்காபுரியின் பெருமைக்கான சான்றுகள் விரிந்துகொண்டே போகின்றன.

இதுவரை சோழர்காலத்  தொழிலிடங்கள் பொதுவாழ்விடங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. இது புதியத்தரவுகளை அள்ளி அள்ளித்தரும் வாய்ப்புகள் உள்ளது. 




No comments:

Post a Comment