Saturday, July 9, 2016

பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய திருவள்ளுவர் விழா


-- ஏலையா க. முருகதாசன்

பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய திருவள்ளுவர் விழாவும், திருக்குறளை முன்னிறுத்தி நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகளும்.

கடந்த 18.06.16 அன்று யேர்மனியிலுள்ள பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின்; திருவள்ளுவர் விழா இடம்பெற்றிருந்தது.

இவ்விழாவினை திரு.திருமதி. சிவலிங்கம் நிர்மலா தம்பதிகளும், திரு.திருமதி.சுதாகர் சுஜிதா தம்பதிகளும் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டது. திருமதி. நந்தினி சதீஸின் மாணவிகளான சுருதி சிறிகாந்தகுமார், கத்தரின் இராஜலிங்கம், விதுஷா உதயபாலன் ஆகியோர் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலைப் பாடினர்.  தொடர்ந்து பன்னாட்டு எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவர் திரு. ஏலையா க.முருகதாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


அடுத்து ஆய்வுரைகள் இடம்பெற்றன. முதலாவது ஆய்வுரையான திருக்குறள் சொல்லும் வாழ்வியல் என்ற தலைப்பில் திரு.கந்தையா சுப்பிரமணியம் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அடுத்த நிகழ்வாக தாயகத்தில் வவுனியா தமிழ்மன்றத்தினர் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். தாயகத்திலிருந்து முதலாவது ஆய்வுரையான திருக்குறளில் இறையியல் என்ற ஆய்வுக் கட்டுரையை திரு. நடராஜா கிருஷ்ணானந்தன் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நடன ஆசிரியையான திருமதி கலைநிதி சபேசனின் மாணவிகளான கவிநிலா சபேசன், பரிஸ்டா மரியதாஸ், ஸ்ரெபா மரியதாஸ் ஆகியோரின் திருக்குறளை இசையோடு பாடிய பாடலுக்கு நடனம் நடைபெற்றது.தொடர்ந்து தாயகத்திலிருந்து திருக்குறளில் பெண்களின் நிலை என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து திருமதி பிரியமதா பயஸ் உரையாற்றினார். நிகழ்வில் அடுத்து தாயகத்திலிருந்து திருக்குறள் வலியுறுத்தும் அரசியல் என்ற ஆய்வுக் கட்டுரையை மருத்துவர் திரு. மதுரகன் செல்வராசா உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திருக்குறளில்; காதல் என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து மருத்துவர் திரு.சிவராஜா துஷாரன் உரையாற்றினார். தாயகத்தில் நிகழ்வுகள் அத்தனையும் ஸ்கைப் மூலமாக யேர்மனி மண்டபத்தில் ஒளிபரப்பப்பட்டது. யேர்மனி நிகழ்வுகள் யாவற்றையும் வவுனியா தமிழ் மன்ற மண்டபத்தில் அங்குள்ள சபையோர் ஸ்கைப் மூலமாகப் பார்த்தனர்.


அதனைத் தொடர்ந்து திருக்குறளில் பகுத்தறிவு என்ற ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து திரு.விமலசேகரன் சபேசன் உரையாற்றினார். அடுத்த திருக்குறள் பற்றிய வரலாற்றுப் பார்வை என்ற ஆய்வுரைக்காகச் சான்றுகளைக் காணொளி வடிவில் திரையில் காட்டி முனைவர் சுபாஷிணி கனகசுந்தரம் உரையாற்றினார்.அடுத்து அகல்யா தேவகுமாரன்,சுருதி சிறிகாந்தகுமார்,வர்சாலினி அற்புதநாதன்,அனிகா ஜெயசிங்கம்,கத்தரின் இராஜலிங்கம், பிரியா இரவீந்திரராஜ், ஹரினி சிறிகரன், அதீஸன் பாலசிறி, பவீஸன் பாலசிறி ஆகியோரின் தமிழிசை இடம்பெற்றது.

அடுத்த நிகழ்வாக  திருக்குறளை எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துச் செல்லல் என்ற ஆய்வுக்கட்டுரையை திருமதி.கோசல்யா சொர்ணலிங்கம் சமர்ப்பித்து உரையாற்றினார். இவ்விழாவினை ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமாகிய திரு.முல்லை மோகனும் இளம் அறிவிப்பாளரான செல்வி. தாரிணி மகேந்திரராஜாவும் அழகுறத் தொகுத்து வழங்கினர்.நாட்டார் பாடலுக்கான நடனத்தைத் திருக்குறளை முன்னிறுத்திய நடனத்தைக் கொடுத்த மாணவிகளே நடனத்தைக் கொடுத்தனர். நன்றியுரையை பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் திரு.சு.பாக்கியநாதன் நிகழ்த்தினார்.

திருக்குறளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி முடிவுகள் இவ்விழாவில் அறிவிக்கப்பட்டன. அவையாவன...

திருக்குறள் சிறுகதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கதைகள்:

'வழி தெரிந்தது' - (முதலாம் இடம்) - ஐஸ்வர்யன் - இந்தியா
'கனவின் நிஜம்' (இரண்டாம் இடம்) - சச்சிதானந்தம் கஜன் - இலங்கை
'ஆக்காட்டி' (மூன்றாம் இடம்) - கோமகன் - பிரான்சு
'நீல நிற வான்கடிதம்' (மூன்றாம் இடம்) - எஸ். கருணானந்தராஜா - இங்கிலாந்து

ஆறுதல் பரிசு பெற்ற கதைகள்:

'சூலம்' தேனம்மை லெக்ஷ்மணன் - இந்தியா
'ஆணவம்' ம.தி. முத்துக்குமார் - இந்தியா
'புதிய உலகம்' தனசேகர் - இந்தியா
'நல்ல குணங்களே நம்மிடை அமரர் பதங்களாம்' ஷைலஜா நாராயணன் - இந்தியா
'குளிர் காற்று 'ஆர். ராஜேஸ்வரி - இந்தியா
'பாதை காட்டும் பாதம்' - மைதிலி தயாபரன் - இலங்கை
'கடைசி ஆசை' - க. கிருஸ்ணவேணி - இலங்கை
'வானம் வசப்படும்' - ப. பசுபதிராஜா - யேர்மனி
'ஆசை மனதளவு' - நிவேதா உதயராஜன் - இங்கிலாந்து
'தண்டனை' - மறைமுதல்வன் - இங்கிலாந்து___________________________________________________________
ஏலையா க. முருகதாசன், ஜெர்மனி
tamilstorywriters@gmail.com
___________________________________________________________

No comments:

Post a Comment