Thursday, April 13, 2017

அருவம்

- பழமைபேசி

கொடுக்குக்குளவி
என்றார்கள்!
வண்ணத்துப்பூச்சி
என்றார்கள்!
நஞ்சுப்பூச்சி
என்றார்கள்!!
உயரியது
என்றார்கள்!
இழிந்தது
என்றார்கள்!
பற்று
என்றார்கள்!
வெறி
என்றார்கள்!
ஆதிக்கம்
என்றார்கள்!
கொடுமை
என்றார்கள்!
அது
எதுவாகவுமில்லை
எட்ட இருந்தவனுக்கு!!


_________________________________________________________ 

பழமைபேசி
pazamaipesi@gmail.com
_________________________________________________________

No comments:

Post a Comment