Monday, February 9, 2015

பல்லவர்/ சோழர் காலத்தமிழகத்தில் நிலவிய ஜனநாயகம்

பல்லவர்/ சோழர் காலத்தமிழகத்தில் நிலவிய ஜனநாயகம்

- செல்வன்


8, 9ம் நூற்றாண்டுகளில் மூன்றுவகை கிராம நிர்வாக அமைப்புகள் இருந்ததாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன

ஊர் - அனைத்துசாதி மக்களும் நிலம் வைத்திருந்து நிர்வாகத்தில் பங்கேற்கும் கிராம சபை

சபை- பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு கொடுக்கபட்ட நிலங்களை வைத்திருப்போர் பங்கேற்கும் அமைப்பு

நகரம்- வணிகர்கள், வைசியர்கள் பங்கேற்கும் நிர்வாக அமைப்பு

சில ஊர்களில் இவற்றில் ஒன்று மட்டுமே இருக்கும், அல்லது சில பெரிய நகரங்களில் இரண்டு, மூன்று நிர்வாகச்சபைகள் இருக்கும். ஆனால் சச்சரவின்றி ஒரு பிரச்சனையால் பாதிக்கபடுவோர் அனைவரையும் கலந்தாலோசித்தே முடிவுகளை இச்சபைகள் எடுத்ததாகத்தெரிகிறது. இத்தனை சாதி அமைப்புகள் இருந்தபோதும், சாதிவாரியாகபிரிந்திருந்தபோதும் சச்சரவின்றி வயலுக்கு நீர்பாசன விவகாரம், கோயில் நிர்வாகம், தானதருமம் உள்ளிட்ட பல விவரங்களை இச்சபைகள் நிர்வகித்து வந்தன, இச்சபைகளில் உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கபடவேண்டும், நிர்வாகம் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு எல்லாம் தெளிவான விதிகள் இருந்தன

ஒவ்வொரு கிராமத்துக்கும் மகாஜனம் என அழைககப்ட்ட ஒருவர் நிர்வாகியாக இருந்தார். மகாஜனங்கள் கவுண்டர் என அழைக்கப்ட்ட தலைவர்களுக்கு கட்டுபட்டிருந்தார்கள். அரசுஅதிகாரிகள் ஊர் நிர்வாக சபைகளுடன் இணைந்தே செயல்பட்டார்கள்.

அரசு அதிகாரிகளுடன் ஊர் மக்கள் கீழ்க்காணும் விஷயங்களுக்கு உதவவேண்டி இருந்தது. ஊரில் உப்பை வெட்டி எடுத்தல், சர்க்கரை உற்பத்தி செய்தல், வெளியூர்த்திருடன் எவனாவது தப்பி ஓடி வந்தால் அடைக்கலம் தராமல் பிடித்துகொடுக்கவேண்டியது. அதுபோக அரசு அதிகாரிகளுக்கு மாட்டுவண்டி கொடுப்பது, இராத்தங்க இடமளிப்பது மற்றும் உணவையும் அளிக்கவேண்டி இருந்தது.

அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டிய உணவுபப்ட்டியல்:

அரிசி, பால், தயிர், புல் (மாட்டுக்கு), காய்கறிகள்

மக்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள்

வீட்டுவரி
தொழில் வரி
சந்தை வரி
சுங்கவரி
நீதிமன்ற கட்டணம்

இதுபோக தண்ணீர் கட்டணம், பராமரிப்பு, கோயில், மருத்துவமனை போன்றவற்றுக்கு நன்கொடை கொடுக்கவேண்டி இருந்தது. இது கட்டாயமில்லையெனினும் மக்கள் இவற்றையும் ஆதரித்துப்பராமரிக்கவே செய்தனர்

இந்த சபைகளை உள்ளடக்கி வள்நாடு, மண்டலம் எனும் அமைப்புகள் இருந்தன. இப்போதைய மாவட்டம் போன்ற அமைப்புகள் அவை. நாட்டுக்கோன் என அழைககப்ட்ட அதிகாரி அவற்றின் நிர்வாகியாக இருந்தார்.

நீதிமன்றங்கள் பல்லடுக்கு முறையில் அமைந்தன. கிராமப்பஞ்சாயத்து, ஜாதி சபை போன்றவை அடிமட்ட அளவில் நீதி வழங்கின. மேல்முறையீட்டுக்கு அதிகாரணம் என அழைககப்டட் நீதிமன்றங்கள் இருந்தன. நீதி சாஸ்திரங்களில் சிறந்தோரே இவற்றில் நீதிபதிகளாக் முடியுமெனினும் இவற்றில் ஊழலும் நடைபெற்றதாக மகேந்திரவர்மன் தான் எழுதிய மத்தவிலாஸபரிகஸத்தில் குறிப்பிட்டுப்பகடி செய்துள்ளான்.

மன்னனுக்கு அறிவுரை வழங்க மந்திரிமண்டலம் எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. ஆட்சிக்கு வரும் மன்னர்கள் முந்தைய மன்னன் பிறப்பித்த உத்தரவுகள், பரம்பரை உரிமைகள், தானதரும சபைகள் ஆகியவற்றை அப்படியே தொடர்வதாக உறுதிமொழி அளித்தபின்னரே ஆட்சிபொறுப்பேற்ரார்கள். ஒரு நாட்டை இன்னொரு நாட்டு மன்னன் பிடித்தாலும் இத்தகைய நிர்வாக அமைப்புகளை கலைத்துகுழப்பம் விளைவிக்க முயலவில்லை.

மன்னர்களின் அதிகாரவெறி எல்லைமீறாமல் ஜாதி சங்கங்கள், குறுநில மன்னர்கள், பரம்பரையாக பதவியில் இருக்கும் ஊர்தலைவர்கள், சபைகள் ஆகியோர் பார்த்துகொண்டுவந்தார்கள். அதனால் பண்டைய பல்லவர், சோழ, பாண்டியர் ஆட்சியில் மன்னன் தன் நாட்டு மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பேச்சே எழவில்லை. இடைவிடாத படையெடுப்புக்களால் நாடு, நகரங்கள் கைமாறினாலும் மக்களின் அன்றாட வாழ்வின் அமைப்பை மாற்றாமல் இம்முறை காத்து வந்தது.

(நன்றி: A history of South India - நீலகண்ட சாஸ்திரியார்)



No comments:

Post a Comment