Tuesday, April 13, 2021

தமிழ் இலச்சினைகள்

 தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாகப் பரப்பும் நோக்கில் வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் தமிழ் இலச்சினைகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ்  சுமார் 325  ஓவியங்கள்  இதுவரை வரையப்பட்டுள்ளன.  ஓவியர் ஜீவா வரைந்தளித்த, காப்புரிமை நீக்கப்பட்ட  இந்த ”தமிழ் இலச்சினைகள்” ஓவியங்கள்  ஜனவரி  2021 இல் மக்கள் பயன் பாட்டிற்காக வெளியிடப்பட்டன. 


தேவையான எந்த அளவிற்கும் பெரிதுபடுத்தி அச்சிடும் வகையில் VECTOR வடிவில், விக்கிப்பீடியாவில், பொது உரிமத்தின் கீழும் இவை பதிவேற்றப்பட்டுள்ளன

 jeeva.JPG

நார்வே நாட்டைச் சேர்ந்த திரு. இங்கர்சால் அவர்களின் முன்னெடுப்பில் வள்ளுவர் வள்ளலார் வட்டம்  உருவாக்கிய இந்த தமிழ் இலச்சினைகள் படத்தொகுப்பில் தமிழர் பண்பாட்டின் அடையாளங்களாக நாம் காணும்;  கடவுளர்கள், அரசர்கள், கலைகள், வாழ்வியல்கள், இறைபொருட்கள், இசைக்கருவிகள், போர்க்கருவிகள், சமையல் கருவிகள், வாழ்வியல் சடங்குகள் எனப் பல பிரிவுகளில் இடம் பெறக்கூடிய படங்கள் இடம் பெறுகின்றன.   

ilachinai.jpg

இந்தத் தொகுப்பில் தமிழர் வாழ்வியல் பிரிவிற்குள் அடங்கக்கூடிய சில படங்களைத் தேர்வு செய்து வாழ்க்கை நிலைகளை  வரிசைப்படுத்தி   4 பகுதிகள் கொண்ட ஒரு கதை போல உருவாக்கினேன்.

A.jpg
---
B.jpg
---
C.jpg
---
D.jpg
---
வள்ளுவர் வள்ளலார் வட்டம் :
யூடியூப் 

ஃபேஸ்புக் 

ஆர்க்கைவ் 

-----

1 comment: