Friday, August 3, 2018

பெண்ணுக்கோர் ஆயுதம் !


——    சி. ஜெயபாரதன்


மூலம்: ஜெஃப்ரி விட்னி [Geffrey Whitney]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உயிரினம் தோன்றிய போதே
இயற்கை ஈந்து விட்டது !
காளைக்குக் கொம்புகள்,
குதிரைக்குக் கால்கள்,
சிங்கத் துக்கு கூரிய பற்கள்,
வலுத்த பாதங்கள்,
முயலுக்கு துரிதப் பாய்ச்சல்,
மீனுக்கு நீச்சல் திறமை,
பறவைகட்கு இறக்கைகள் !
ஆயினும்
பாதித் தொகை யான
பாவை இனத்துக்கு பாதுகாக்க
ஆயுத மில்லை !
அவசியத் தேவைக்கு
இயற்கை அளித்தது என்ன ?
உடற் கவர்ச்சி !
ஞானிகள், வீரர்கள் மயங்கி
வலுவிழக்கும்
மேனித் தோற்றம் !
அழகு பாவைக்கு ஆயுதமா ?
அல்லது
கழுகுக்கு இரையா ?
பெண்ணே !
உனக்கோர் ஆயுதம் தேவை.



________________________________________________________________________
தொடர்பு: சி. ஜெயபாரதன் (jayabarathans@gmail.com)



No comments:

Post a Comment