Tuesday, December 31, 2013

முப்பாலும் கலந்து - துரை.ந.உ.

அறம்



1.
தாண்டவம் வென்றழித்தல்; ஆணவம் கொன்றொழித்தல்;
ஆண்டவம் காணும் வழி
2.
மாத்திரைப் பையோ(டு) இறைதேடிச் செல்லுமந்த
யாத்திரையால் என்ன பயன்

பொருள் 



3.
எதுவும் இணையில்லை என்போர் அறியார்
அதுவும் நிலையில்லை என்று

4.
புரியும் வரைச்சொல் வதைவிடவும் ஒன்றைப்
புரியும் படிச்சொல்லல் நன்று

5.
கரையானைக் கண்டால் உடன்ஒதுக்கு; ஆற்றங்
கரையானைக் கண்டால் ஒதுங்கு

6.
கூட்டல் வகுத்தல் கழித்தல் அறி;அது
காட்டும்;உன் வாழ்வின் வழி

இன்பம் 

மன்னவளே!


7.
​இல்லாமை இல்லாமால் போக்குமோர் மந்திரமுண்(டு);
இல்லாள் எனும்பேர் அதற்கு

​8.
​இணைதுணை யானால் மருந்து;வந்(து) அமைந்த
துணைஇணை யானால் விருந்து


என்னவனே!​

​9.
​மலைபோல் எழுவான்; மழைபோல் பொழிவான்;
அலைபோல்
​இழுப்பான் அவன்

10.
​பாயும் அவன்வேகம் கண்​டால் ​புரளுமாம்
பாயும் பயந்து
​மிரண்டு

5 comments:

  1. அறம் டாப்ஸ். சித்திரங்கள் பேசவில்லை; மொழிகின்றன. 2014 வாழ்த்துக்கள், தொரை.

    ReplyDelete
  2. இணைதுணை யானால் மருந்து;வந்(து) அமைந்த
    துணைஇணை யானால் விருந்து

    அருமையான கருத்து.
    பாராட்டுகள் ஐயா.
    மற்றபடி படங்களும் அருமையாக அமைந்துள்ளன.

    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete
  3. வாழ்க ஐயா .. அந்தக் குறளில் ஒரு தளைப் பிழை :)
    // மருந்தாம்// என்றிருக்க வேண்டும்

    ReplyDelete
  4. இ ஐயாவுக்கு நன்றி

    ReplyDelete