Thursday, October 31, 2013

ஆதியில் அவள் இப்படித்தான் இருந்தாள் - மதுமிதா



ஆதியில் அவள்
இப்படித்தான் இருந்தாள்
காதலும் காமமும்
இயல்பாய் இருந்தன அப்போது

இடையில் வந்தது ஆடை
அணிகலப்பின்னலில் பிணைக்கப்பட்ட
அவளும் அடிமையானள்

கண்டுபிடிக்கப்பட்ட
கடவுள் சாத்தானின் முன்
தன் நிலையை இழந்தாள்

போர்த்தப்பட்ட நாகரீகப் போர்வையில்
பொதிந்து கிடந்த
நிர்வாண வனப்பு
அமிழ்ந்தே போயிற்று

காதலும் காமமும்
விரசத்துக்குத் தள்ளப்பட்டன

ரத்தக்கவுச்சி நிறைந்த
தொடர் நினைவுகளை
உதறி எறிய விழைந்தாலும்
என்றும் அவள் நினைவினில்
ஆதி மனித வேட்கை

கூட்டை உடைத்து வெளியேறும் கூட்டுப்புழு
பலவண்ணச் சிறகுகளுடன் வெளிப்படுவதாய்
சட்டென நிகழ்ந்ததொரு
வளர்சிதை மாற்றத்தில்
அனைத்தையும் உதறியெறிந்து வெளியேறினாள்

காதலுக்கும் காமத்துக்கும்
புதுவீச்சினை
அளிக்க விரைந்தெழுகிறாள்
எதுவும் இல்லை
அவளின் கவனத்தில்
இப்போது இலக்கு
அவன் அவன் அவன் மட்டுமே

ஜென்மாந்திரங்கள் கடந்தும்
யுகம் யுகமாய்
அவள் சீரான பாதங்களை
எடுத்து எடுத்து வைத்து
பயணித்துக்கொண்டே இருக்கிறாள்
அவனை நோக்கி

அங்கிருந்து அவனும்
பயணித்துக்கொண்டே இருக்கிறான்
இவளை நோக்கியே

பயணம் ஓர் நேர்புள்ளியில்
இணையும் போது
இருவரும் இவ்வுலகில் நிறுவுவார்கள்
காமத்தின் மேன்மையை

அன்புடன்
மதுமிதா
21.06.2012

குறிப்பு: பேஸ்புக்கில் சித்தன் ப்ரசாத் வரைந்து போஸ்ட் செய்த இந்த ஓவியத்தை சாக்காக வைத்து எழுதப்பட்ட கவிதை இது

தீபாவளி (கவிதை) - பார்வதி இராமச்சந்திரன்

தீபாவளி!

வானம் அதிர வெடி வகைகள்!
வண்ணப் பூ பொழி வாணங்கள்!
வீசும் காற்றிலும் சிரிப்பலைகள்!
வந்து விட்டதே தீபாவளி!

மின்னுது மின்னுது மத்தாப்பு!
பொங்குது குழந்தையின் புன்சிரிப்பு
பொங்கி எழுந்தொளிரும் பூவாளி
பொலிவாய் வந்தது தீபாவளி!

எண்ணைக் குளியல் புத்தாடை
உண்ண வகையாய் சிற்றுண்டி
எண்ணம் முழுதும்  இன்பமயம்
இகமெல்லாம் மகிழும் தீபாவளி!!!

விருந்தினர் வந்திடும் வேளையிலே
நிறைந்திடும் உவகை மனதினிலே
வெடியாய் அதிருது சிரிப்பொலி பார்!!
வெல்லமாய் இனிக்குது தீபாவளி!!

இந்த நாளில் நலம் நிறைய‌
எளியோர் வாழ்விலும் வளம் பெருக‌
என் மனம் உள்ளதை நான் சொல்வேன்
இதை நீ கேட்பாய் என் தோழி!!

உம்மால் முடிந்த பொருள் தன்னை
உருகும் வறியோர் மடி சேர்த்து
உயர்த்திடும் நாளில் உலகுயரும்
உன்னத தினமே தீபாவளி!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

தீபாவளி நினைவுகள் - கீதா சாம்பசிவம்

கீதா சாம்பசிவம்

 சின்ன வயசில் தீபாவளிசமயம் அநேகமாய் ஜுரம்வந்துபடுத்திருப்பேன். ஆகவே ரொம்பச் சொல்ல ஒண்ணும் இல்லைனே சொல்லணும்.  ஆனால் அப்போதிருந்த உற்சாகம், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் இப்போதைய குழந்தைகளிடம் இல்லை.  ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் அப்போதைய தீபாவளி நினைவுகள் நினைத்தாலே இனிக்கும்வகை தான். தீபாவளி குறித்த பேச்சு எல்லாம் நவராத்திரிக்கே ஆரம்பிக்கும். எனக்குத் துணி எடுக்கும்முன்னர் அப்பா ஒரு முறைதெரிஞ்ச ஜவுளிக்கடைகளை எல்லாம் சுத்தி வருவார்.  அந்த வருஷம் லேட்டஸ்ட் என்னனு தெரிஞ்சுப்பார்.எல்லாத்துக்கும் மேலே அதை வாங்கும் அளவுக்குப் பணம் வேணுமே, அதுக்காக மூணு மாதங்கள் முன்பிருந்தே தயார் பண்ணிப்பார். தீபாவளிக்கு பக்ஷணங்கள் நிறையவே செய்வாங்க.  அதுக்காகவும் சாமான்கள் சேகரம் பண்ணப்படும்.

அண்ணாவுக்கும், தம்பிக்கும் அரை டிரவுசர் எனப்படும் உடையும், மேல் சட்டையும் துணி வாங்கித்தைக்கக் கொடுப்பாங்க.  அதிலே தான் அப்பா காமெடி பண்ணி இருப்பார்.  வளரும் பசங்கனு சொல்லி தையற்காரரிடம் அளவு எடுக்கிறச்சே தாராளமாத் தைங்கனு சொல்லிடுவார்.   அரை மீட்டர் துணி போதும்ங்கற இடத்திலெ ஒரு மீட்டர் வாங்கி இருப்பார்.  ஆகவே அது அண்ணா மாதிரி இரண்டு பையர்கள் போட்டுக்கிறாப்போல் இருக்கும். தம்பிக்கும் அப்படித் தான்.  இந்த தீபாவளிக்குத் தைச்ச டிரவுசரை அவங்க அதுக்கப்புறமா இரண்டு வருஷம் கழிச்சுப் போட்டால் கூடப் பெரிசாத் தான் இருக்கும்.  அவங்க போட்டுக்கவே முடியாது. ஆனால் அப்பாவுக்கோ பிள்ளைங்க ரெண்டு பேரும் அசுர வளர்ச்சி என நினைச்சுப்பார்.  அடுத்த தீபாவளிக்கும் இதே கதை தொடரும். அண்ணாவுக்குத் தைச்சதெல்லாம் தம்பி வளர்ந்து போட்டுக்காஆரம்பிச்சான்னா பாருங்களேன்.

அடுத்துப் பட்டாசு.  அதுவும் குறிப்பிட்ட கடையிலே தான் வாங்குவார். எவ்வளவுக்குனு நினைக்கிறீங்க? இரண்டே ரூபாய்க்கு. அதிலேயே லக்ஷ்மி வெடி, குருவிவெடி, சீனிச்சரம், ஓலைப் பட்டாசு, கொம்பு வாணம், புஸ் வாணம், ஏரோப்ளேன், அணுகுண்டு, பென்சில் மத்தாப்பு, சாட்டை, கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு எல்லாமும் வரும். அதை நான்கு பாகமாய்ப்போடுவார் அப்பா.  நான் பெண் குழந்தை என்பதால் பட்டாசு எல்லாம் கிடையாதுனு சொல்லிப் பார்ப்பார்.  ஆனால் நான் விட மாட்டேனே! எனக்கும் வேணும்னு கேட்டு வாங்கி வைச்சுப்பேன். கடைசியிலே உடம்பாப் படுத்துப்பேனா, எல்லாத்தையும் அண்ணா, தம்பிக்குக் கொடுத்துடுனு அப்பா சொல்லுவார்.

கடைசியிலே அவங்களோடதையும் சேர்த்து அப்பாவே விட்டுடுவார். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாடியே இருந்து அம்மா பக்ஷணம் பண்ண ஆரம்பிப்பாங்க. மைசூர்ப்பாகு நிச்சயமா இருக்கும். அல்வா நிச்சயமா இருக்கும். மற்ற ஸ்வீட் அம்மாவுக்கு என்ன முடியுமோ அது. மிக்சர் நிச்சயமா இருக்கும். அதுக்குப்  பண்ணும்போதே தேன்குழல், ஓமப்பொடினு பண்ணுவாங்க.  அப்புறமா உக்காரை நிச்சயமா இருக்கும். இது சிலர் அரிசியிலெ செய்யறாங்க. எங்க வீட்டிலே து.பருப்பு, க,பருப்பு வறுத்து ஊற வைச்சு அரைச்சுச் செய்வாங்க.  அது பற்றிப்பின்னர் எழுதறேன்.

தீபாவளிக்குக் காலம்பர மூணரை மணிக்கே அம்மா எழுப்புவாங்க.  எழுந்துக்கத் தான் சோம்பலா இருக்கும். இந்த அம்மாவெல்லாம் தூங்கவே மாட்டாங்க  போலனு  நினைச்சுப்பேன். முதல்லே நான் எழுந்து குளிச்சாத் தான் அப்புறமா அண்ணா, தம்பி எல்லாம் குளிக்கலாம்.  அந்த நேரத்துக்கே அம்மா குளிச்சிருக்கிறதைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கும். அப்பா அமாவாசையும் சேர்ந்து வந்தால் குளிச்சிருக்க மாட்டார்.  ஏன்னா, முதல்லெ ஒரு தரம் எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டா அப்புறமா  அமாவாசைத் தர்ப்பணத்துக்கு மறுபடி குளிக்கணும். ஆகவே பண்டிகை தனித்து வந்தால் எண்ணெய்க் குளியல். எல்லாம் முடிஞ்சு மூணு பேரும் குளிச்சுட்டு வந்ததும், அப்பா தன் கையலே துணி எடுத்து தருவார்.  அதுக்குள்ளே அம்மா சாமிக்குக் கோலம் போட்டு விளக்கு ஏத்தி, பக்ஷணம், துணி, பட்டாசு எல்லாம் எடுத்து வைசிருப்பாங்க. அப்பா குளிச்சுட்டா நிவேதனம் பண்ணுவார்.  இல்லைனா அம்மாவை விட்டு செய்ய சொல்லுவார். எல்லாரும் புது துணி உடுத்தி சந்தோஷமா பட்டாசு வெடிக்கப் போவோம்.

அதுக்கு அப்புறமா உல்லூரிலேயே இருக்கும் பெரியப்பா, பெரியம்மா வேடுகல், தாத்தா வேடு ஆகிய வேடுகளுக்குப் பொயிட்டு அவங்க கிட்டெ எல்லாம் ஆசிர்வதம் வாங்கிட்டு வருவோம். பணமொ, துணியோ, பக்ஷணம், பட்டாசு என்று அது கலெக்ஷன் தனி.

இப்போதோ குழந்தைங்க ஒரு பக்கம், நாங்க ஒரு பக்கம்.  2011 ஆம் வருஷம் மட்டும் எங்க பையர் வீட்டிலே யு.எஸ்ஸிலே கொண்டாடினோம்.  குழந்தைங்களோட இருக்கிற சந்தோஷம் இருந்தாலும் இந்தியாவிலே பண்டிகை கொண்டாடிய சந்தோஷம் என்னமோ வரலை.  இப்போ நவராத்திரி என்றால் கூட கொலு வைச்சுட்டு நான் மட்டுமே தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறாப்போல் இருக்கு.  அதுவும் சென்னையில் யாருமே வர மாட்ட்டாங்க. ஸ்ரீரங்கத்தில் பண்டிகை கொஞ்சம் பரவாயில்லைனு தோணுது.  என்றாலும் பக்ஷணத் தொழிற்சாலை மாதிரி பக்ஷணங்கள், புடைவைக் கடை போலப்புடைவைகள் என வாங்கிக் கொண்டாடிய காலம் எல்லாம் போய் இப்போ நாம் இருவர், நமக்கு நாம் இருவர் மட்டுமேனு தீபாவளி கொண்டாடிட்டு இருக்கோம்.

காலம் மாறியது என்பதோடு அல்லாமல் உறவுகள் ஒரு இடம் நாம் ஒரு இடம் என்றெல்லாம் ஆகும்னு நினைச்சுப் பார்க்கவில்லை. இதையும் ஏற்று கொண்டு வாழ பழகியாச்சு.   எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

தீபாவளி நினைவுகள் - விசாலம்

விசாலம்

என் திருமணம் ஆனப்பின் நான் போன நகரம்  பஞ்சாபிகள் நிறைந்து வாழும்  தில்லி   தான்.    நான் கண்ட முதல் ஊரும் அதுதான் . மும்பையில்.திருமணம் ஆகும் வரை  ஆணி அடித்தாற்போல் ஒரே இடத்தில் இருந்து விட்டு முதன் முதலாக  நான் கண்ட ஊர் இது.நான் கண்ட ஊர் என்பதைவிட நான் நாற்பது வருடங்களாக பஞ்சாபியர்கள் மத்தியிலேயே இருந்து அவர்களோடு ஒன்றிப்போனவள் எனலாம் நான் குடியிருந்த வீட்டின் உடமையாளர்கள்  ஒரு சர்தார்ஜி குடும்பம் . பஞ்சாபியர்களுக்கும்   சர்தார்ஜியர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்   ஐந்து   " கே"  .இந்த  ஐந்து  'கே 'என்றால் என்ன ?

இவை தான்   கேசம் ,கிர்பான் , கடா , கச்ச ,கங்கி .  சர்தார்ஜிக்கு முக்கியமாதலைமுடியும்ஒரு சிறு கத்தியும்   கையில் கடா என்ற வளையமும்  காட்டனின் பெரிய அளவில் வரும் ஜட்டியும்   ,ஒரு சின்ன சீப்பும் எப்போதும் அவர்களுடனேயே  வைத்துக் கொள்ள வேணடிய ருட்கள்.இறந்தப்பின்னும்
 இவைகளுடனேயே உடல் எரிக்கப்படுகிறது. ஆனால் பஞ்சாபியர்களுக்கு  பஞ்சாபியர்களுக்கு இந்தப்பொருட்கள் தேவையில்லை .மற்றபடி பேசும்
மொழி . . பழக்கவழக்கங்கள் அநேகமாக ஒரே மாதிரியாகவே இருக்கிறது

வீரத்திற்குப் பஞ்சாபியர்களுக்குத்தான் முதலிடம்.பெண்களும் தங்கள் குழந்தைகளை மிக வீரமாகவே வளர்க்க  விரும்புகின்றனர் , தேசபக்தன்  சர்தார் பகத்சிங்கைத்தூக்கிலிட்டப்பிறகு  அவரது உடலின் சாம்பலை  அந்தக்கிராமத்தில் இருக்கும் எல்லா பெண்மணிகளும் தங்கள் வயிற்றில்
தடவிக்கொண்டார்களாம் .ஏன் ! தங்களுக்கும் சர்தார் பகத்சிங் மாதிரி வீரன்  பிறக்க வேண்டுமென்று ....

 தீபாவளி நேரம்     என் வீட்டு நடுவில் இருக்கும் திறந்த வெளியில்
படடாசுகட்டுகள் குவித்திருக்க ஒரு சின்ன  பாப்பா   வந்து ஒரு பெரிய பூத்திரியை  எடுத்தது . பின் தீப்பெட்டியயும் எடுத்துக்கிழித்தது  நான் பதறிப்போய் "சிம்ரித் கௌர்  தேகோ தேகோ  பேடேகோ  தேகோ " என்றேன் {பார் பார் உன் பையனைப்பார்} "குச்  நஹி ஹோதா ,கர்னே தோ " {ஒன்றும் ஆகாது செய்யட்டும் "என்று அந்த மகனை அழகுப்பார்த்தாள் அவள்.  அவனும்  பூத்ரியைப்பத்த வைத்து  மகிழ்ச்சியுடன் சுழட்டினான். நாம் நிச்சியம் இப்படிச்செய்ய விட்டிருக்க மாட்டோம்  . ஐயோ தொடாதேடா செல்லம்   கையைச்சுடும் "என்று அலறியிருப்போம்

இரண்டாவதாக அவர்கள் உழைப்புக்குச்சலிப்பதில்லை  . எந்த வேலைச்செய்யவும்   தயங்குவதில்லை .கௌரவம் பார்ப்பதில்லை . .கருமபுச்சார்  அரைக்கும் வேலையா . கோதுமைமாவு அரைப்பதா    ஸ்வெட்டர் கடையா ,மளிகைச்சாமானா .இப்படி எது இருந்தாலும் உழைப்புக்கு முதலிடம் கொடுத்து  முன்னுக்கு வருகிறார்கள்.
அத்துடன் கூட்டுக்குடும்பத்தை மிகவும்  விரும்புகிறார்கள்
ஒரு புடவைக்கடைப்போனால்  அவர்கள்து குடும்ப அங்கத்தினர்கள் பலரை  அங்குக்காணலாம்.

எத்தனை இடர் வந்தாலும் அவர்கள் மனம் தளராமல் போராட்டத்தில் எதிர் நீச்சல்  போட்டு  மீண்டு வந்துவிடுவதை நாம் மிக சகஜமாக பார்க்கமுடியும்.எதற்கும் தளராத இதயம் பஞ்சாபியர்களுக்கு
உண்டு . சைன்ய வீரர்களாக பல சர்தார்ஜிகளை நாம் எப்போதும் பார்க்கமுடிகிறது.


விருந்தோம்பல் என்பதில் இவர்கள் பெயர்ப் போனவர்கள் . யார் எந்த நேரம்  போனாலும் சாய் அல்லது லஸ்ஸி எனும் இனிப்புமோர்  கிடைக்காமல் போகாது, வெண்ணெய்   நெய் இரண்டும் மிகத்தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள் . அவர்களது உழைப்பிறகு அவை  வைப்படுகின்றன.  அவர்கள் செய்யும்   ஆலு பரோட்டா  மேத்தி பரோட்டா . கோபி பரோட்டா , பனீர் பரோட்டா என்று பலவிதமான பரோட்டோக்களைப் பார்த்தாலே   நம் நாக்கில் நீர் ஊறும்  .அத்தனைச்சுவை ,தவிர தந்தூர் ரொட்டி என்றும்  ஒன்று உண்டு . ஒரு சிறிய கிணறு போன்ற ஒன்றில் கட்டைகளைப்போட்டு எரித்து சூடாக்குகிறார்கள்  .பின் ரொட்டி மாவைப்பிசைந்து கையால் குண்டாக தட்டி அந்தத் தந்தூர் என்ற அடுப்பின்  ஓரங்களில் தடவி ஒட்டிவிடுகிறார்கள். பின் அது சூட்டில் வெந்தவுடன் ஒரு கம்பியால் அதை வெளியே எடுத்து  நெய்யைத்தடவுகிறார்கள்.   கிராமபுரத்தில்  "டாபா" என்ற   ஹோட்டலில் இந்தத் தந்தூர் அடுப்பு இருக்கும்  . அங்கு கிடைக்கும் உணவும் அதிக விலை இராது .

பஞ்சாப் நிலங்களில் முக்கியமாக கோதுமையும் பின்  பாசுமதி அரிசி என்ற  புலாவுக்குப்பெயர் போன அரிசியும்  பயிராகின்றன.  தவிர கரும்பு ,கடுகு,  சூரியகாந்தி போன்றவைகளும் பயிராக்கப்படுகின்றன . கடுகு  போட்டிருக்கும் நிலத்தைப்பார்க்க கொள்ளை அழகு.நிலத்தில்  ஒரே மஞ்சள் பூக்கள் குலுங்க அங்கு  வசந்தத்தைக் கண்டு களிக்கலாம். அத்தனை அழகு !

தவிர சைக்கிள் . மோட்டார் பார்ட்ஸ், ஸ்வெட்டர்  பால் போன்ற வியாபாரம் கொண்ட  கம்பெனிகள் சக்கைப்பொடு போடுகின்றன.

திருமணத்தை எடுத்துக்கொண்டால்   முதல் நாள் மெஹந்தி .சகுன் என்ற இரு  நிகழ்சிகள் நடக்கும் இதில் மணப்பெண்ணின் தோழிகள் 'கித்தா'என்ற நடனத்தை மாறி  மாறி ஆடுவார்கள். பிள்ளை வீட்டில் மாப்பிளைக்கு மங்கல ஸ்னானம் நடக்கும் ,பின் ஆண்கள்   பங்கரா' என்ற நடனத்தை ஆடுவார்கள் .பல்லே பல்லே  balle balle  என்ற சொல்  பலமுறை வரும்.

பின் நடப்பது திருமணம் மணப்பந்தலின்  எரியும் பலவித வண்ண விளக்குகள், கீழே விரித்திருக்கும்  கம்பளம் எல்லாம் பார்த்தால்  எங்கே சுவர்கத்திற்கு வந்துவிட்டதுபோல் தோன்றும்.அவ்வளவு சிலவழித்து ஜோடிப்பார்கள் மாலை ரிசப்ஷனில்   மாப்பிள்ளை குதிரையில் வருவார் .அவர் முகம்  மல்லிகைப்பூ சரத்தினால் மூடப்பட்டிருக்கும் .. பேண்டு வாத்தியங்களுடன்  சினிமா பாடல்கள் பாடும்  குழுவும்  ஒரு வண்டியில் வரும் மாப்பிள்ளை உறவினர்கள் திருமண மண்டபத்தின் வாயிலில் பெண்வீட்டு  உறவினர்களைச் சந்திப்பார்கள் .இதற்கு 'மில்னி' என்று பெயர் .பின் 'சாஜன் ஆயே' என்ற ஒரு பாட்டுடன் இரு சம்பந்திகளும்  ஒருவர்க்கொருவர் மாலை அணிவித்து கொள்வார்கள். பின்   இரு தரப்பினரில்  இருக்கும் மாமாக்கள் .சகோதரர்கள் சித்தப்பா பெரிப்பாக்கள் என்று மாலை அணிவித்தப்பின் உள்ளே நுழைவார்கள்
பின் என்ன்! பெரிய அழகான சிம்மாசனத்தில் சுந்தரியும் சுந்தரனும் அமர பரிசு வழங்கும் படலம்  நடைப்பெறும் .கலயாணத்திற்கு  முன் இருந்த  பெண்ணா இவள் என்று  மலைத்துப்போகும்படி மேக் அப் இருக்கும். ஒரு  சினிமாஸ்டார் போல்  மணப்பெண்  அமர்ந்திருப்பாள். முழுவதும் சரிகையால் இசைக்கப்பட்ட ' லெஹெங்கா' என்னும் பெரிய பாவடை சிவப்பு கலரிலோ அல்லது பிங்க் கலரிலோ உடுத்து மேலே துப்பட்டாவை தன் தலையையும் மூடியபடி அமர்ந்திருப்பாள் மணப்பெண் .  அவள் கையில் மெஹெந்தி
டிசைன் கண்ணைப்பறிக்கும் . இபோதெல்லாம் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும்  சகஜமாக பேசியபடி அமர்ந்திருக்கின்றனர் , இந்த நேரத்தில்  டின்னர் களைக்கட்டும் வெஜ் என்ன  நான்வெஜ் என்ன என்று எதை எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் பலவிதமான  உணவுகள்   வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்  ,மூங்தால் கி அல்வாவும்  ஐஸ்கிரீமும் நிச்சியம் இருக்கும்.

பின் இரவில் அவர்கள் திருமணம் நடக்கும் சிலசமயம் இரவு 12 லிருந்து  விடிகாலை வரை எப்போது வேண்டுமானலும்  நடக்கும்.

இதில் சர்தார்ஜியாக இருந்தால் குருகிரந்த்சாஹிப் புத்தகத்தின் முன்
மூன்றுமுறை வலம் வந்து    சில கட்டளைகளை சரிவர  அனுசரிக்கும் சபதம் எடுத்தப்பின் முடிவடையும்   .இதுவே பஞ்சாபி ஹிந்துவாக இருந்தால் நடுவில் அக்னி வைத்து மூன்று முறை வலம் வந்து  சப்தபதியும் நடக்கும் .
மறு நாள் விதாயி {பிதாயி] என்று பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும்  நிகழ்ச்சி .அதில் கண்கலங்காமல் ஒருவரும் இருக்கமாட்டார்கள் .பெண் முதலில் தன் அம்மாவை அணைத்து பின் .அப்பா ,தன் சகோதர சகோதரியை அணைத்து அழும் காட்சி மனதை உருக்கி விடும்   இதற்கென்று தனிப்பட்ட   பாடல்களும் உண்டு.

விழாக்கள் என்று எடுத்துக்கொண்டால் லோரி,  மகர சங்கராந்தி . ,ஏப்ரல் 14ல் வரும் பைசாகி போன்றவைகள்   மிக விசேஷமாக கொண்டாடப்படுகின்றன
பைசாகியின் போது குருத்வாரா போன்ற இடத்தில் அன்னதானம் விடாமல் நடக்கிறது. விவசாயிகளுக்கு இது மிக முக்கியமான பண்டிகை .

ஹோலிகாவை எரித்த ஹோலி என்ற வண்ணம் நிறைந்த   கொண்டாட்டமும் மிகச்சிறப்பாக நடக்கும் இதில் ஜாதி பேதமின்றி  ஏழை ,பணக்காரரின்றி  அன்பை மட்டும் கொண்டே இந்தப்பண்டிகை  நடக்கிறது.

ராக்கி எனும் பண்டிகை சகோதர்களின் க்ஷேமத்திற்காகவும் ,கர்வாசௌத் எனும்  விரதம்   கணவனின் நீண்ட ஆயுளுக்கும்  வளமான வாழ்க்கைக்கும்  விரதமாக நடத்தபடுகிறது.  நம்முடைய காரடையான் நோம்பு  விரதம்  போல் ...........

நவராத்திரியும் தீபாவளியும் வரும் நேரத்தில் எல்லா வியாபாரிகளும்
சேர்ந்து 'பகவதி ஜாகரண் "என்று ஒன்றை நடத்துகிறார்கள்  அதில் அம்பாள்  சிலையைஅலங்கரித்து பெரிய  தெருவின் நடுவில் வைத்து   பெரிய பந்தல் போட்டு  எல்லோரும் அமரும்படி விரிப்பும் விரிக்கிறார்கள். பின் காலையிலிருந்து மறுநாள் காலைவரை விடாமல் பூஜையும் பஜனும் நடக்கிறது   இதற்கு பாட பெரிய இசைக்கவிஞரும் பிரமுகரும்  பங்கு ஏற்கின்றனர், ஒலிபெருக்கு அலறுவதால் வெகுதூரம் வரை இந்த நிகழ்ச்சியைக் கேட்கமுடிகிறது. .தீபாவளியின் போது குருநானக்ஜியின் பிறந்த நாளும்  'குருபிரப்' என்ற  பெயரில்  வருகிறது  எங்கும் அகல்விளக்கு ஏற்றப்பட்டு   ஊரே ஜகஜோதியாகி   நம்மை பரவசப்படுத்துகிறது .
பஞ்சாபியர்கள் அனுமார்  கணேஷ் அம்பாள். சிவன் கிருஷ்ணன் ராதா  என்று பூசிக்கின்றனர் முருகனைப்பற்றி அதிகமாக தெரியவில்லை தில்லியில் மலாய்மந்திர் என்ற முருகன் கோயில் நம் சுவாமிமலை கோயில் போல் இருக்கிறது இப்போதெல்லாம் பல   பஞ்சாபியர்களும் சீக்கியர்களும் இந்தக்கோயிலுக்கு வர ஆரம்பித்துள்ளனர்.ஒரு சீக்கியர் இந்தகோயிலில் கமிட்டிமெம்பராக இருக்கிறார் .அவர் கந்தரலங்காரம் மிகச்சரளமாக சொல்லுவதைக்கேட்டிருக்கிறேன் .

திருமதி இந்திராகாந்தி அவர்களின் மரணம் போது நாங்கள் பத்து நாட்கள் ஒரு சீக்கியகுடும்பத்தை எங்கள் வீட்டில் ஒளித்து வைத்துக்கொண்டதை மறக்க முடியாது .அந்தக்குடும்பத்தினரும் எங்களுக்குப்பலவிதமாக பாசத்துடன் உதவி புரிந்திருக்கின்றனர் .'யாரும் ஊரே யாவரும் கேளீர் . என்று வாழ வாழ்க்கை ஆனந்தமே .

Tuesday, October 22, 2013

அலர்மேல் மங்கை அந்தாதி - காப்பியக் கவிஞர் நா.மீனவன்

காப்புச் செய்யுள்
                                   
கலைமலி  கனகச்  செம்பொன்  கதிரவன் ஒளியை  வெல்லும்
நிலைமலி  மாட  கூடம்  நிறைந்தொளிர்  வேங்க  டத்தான்
தலைவியாம்  அலர்மேல்  மங்கை  தன்புகழ்  ஓதும்  பாடல்
நலமுற  அருளை வேண்டி நாரணற்  போற்றி  னேனே.


நூல்

1.
பொன்மகள்  திகழு  மார்பன்  பூமகள்  தழுவு  கேள்வன்
தன்னடி  போற்று  வார்க்குத்  தண்ணருள்  ஈயும்  வள்ளல்
தன்னவள்  என்று  கொண்ட  தாயினும்  இனிய  நங்கை
அன்னவள்  அலர்மேல்  மங்கை  அவளடி  அகத்துள்  வைப்பாம்.

2.
பாம்பணை  துயின்ற  தெய்வப்  பரம்பொருள்  உலகம்  உய்ய
வாம்பரித்  தேர்ந  டாத்திப்  பாண்டவர் வாழ்வு  காத்தோன்
தேம்பினோர்  நலங்கள்  காத்தாள்  திருமலை  மணந்து  கொண்ட
காம்பன  தோளி  யாளைக்  கருத்தினால்  போற்றி  செய்வாம்.

3.
செய்யவள்  அலர்மேல்  மங்கை  சித்திரம்  அனைய  கன்னி
மையுறு  தடங்கண்  மங்கை  மானிடர்  மாசு  போக்கும்
தையலாம்  நமது   தாயின்  தளிரடி  வணங்கி  நின்றால்
மைமலை  மாலின்  செல்வி  மங்கலம்  தந்து  காப்பாள்.

4.
காப்பவள்  மணந்த  கன்னி  கலையழ குடைய செல்வி
ஆப்பயன்  கொள்ளும்  ஆயர்  அழகனைக்  கண்டு  நெஞ்சம்
பூப்பவள்  ஆகி  வந்த பொன்னிறத்(து)  அலர்மேல்  மங்கை
தோப்பென  நம்மைப்  பேணித்  துலங்குவாள் அடிகள்  போற்றி.

5.
போற்றியோ  போற்றி  என்று பொழுதெலாம்  பணிவார்  துன்பம்
மாற்றுவாள்  அலர்மேல்  மங்கை  மங்களச்  செல்வி  யாகித்
தேற்றுவாள்  வேங்க  டத்தான்  தேவியாய்  வந்த  அன்னை
மாற்றுவாள்  பிறவி  நோயை  மனைகளின்  விளக்கம்  ஆவாள்.

6.    
வாள்விழி  கொண்ட  நங்கை  வரிவிழி   அழகு  கண்டு
தோள்மெலி  வுற்ற  நாதன்  துணையென  ஆக்கிக்  கொண்டான்
வேள்வியைச்  செய்த  வேளை  விரும்பியே  உழுத  மண்ணில்
ஆளென  வந்த  பெண்ணாள்  அடிமலர்  சிந்திப்  போமே.

7.  
சிந்தனை  செய்வார்  நெஞ்சில்  சித்திரம்  ஆன  செல்வி
வந்தனை  செய்வோர்க்(கு)  எல்லாம்  வரமருள்  அலர்மேல் மங்கை
மந்திகள்  தாவு  கின்ற  மலைவளர்  திருமால்  தன்னைச்
சொந்தமாய்க்  கொண்ட  தாயின்  சுடரடி  தொழுது  பாரும்.

8.  
பாருடன்  அனல்கால்  விண்நீர்  பகரைந்து  பூத  மாகிப்
பாருடன்  விண்ண  ளந்து  மாவலி  படிக்குட்  செல்ல
ஓரடி  தலைமேல்  வைத்தான் உயர்துணை  அலர்மேல்  மங்கை
சீரடி  சரணே  என்று  சேருவீர்  கமல  பாதம்.

9.  
பாதகம்  செய்வார் தம்மைப்  படிமிசை  அகற்றிக்  காக்கும்
போதகம்  அனைய  கண்ணன்  புணர்ந்தவள்  அலர்மேல்  மங்கை
காதலால்  கடைக்கண்  வைத்தால்  காரியம்  வெற்றி  யாகும்
ஆதலால்  குவித்த  கையர்  ஆகிநாம்  அருள்தேன்  உண்போம்.

10.  
உண்பவை அலர்மேல்  மங்கை  உதவிய  பொருளே  அன்றோ
கண்படும்  பொருளில்  எல்லாம்  காண்பவள்  அவளே  அன்றோ
பண்படும்  சொல்லி அந்தப்  பரம்பொருள்  மணந்த  கோதை
விண்படும்  சுடரே  ஆன  வித்தகி  காப்பாள்  அன்றோ.

11.
அன்(று)இவள்  தரணி  பெற்ற  அன்னமாய்  வளர்ந்து  வானார்
குன்றினில்  வாழும்  கோமான்  கோவலன்  காதல்  பெற்றாள்
மன்றலும்  கொண்ட  மாது  மார்புறை  அலர்மேல்  மங்கை
நின்றடி  வணங்கு  வாரின்  நினைவினில்  தெய்வம்  ஆவாள்.

                                 12.  ஆவதும்  அவளால்  என்றே  அருமறை  முழங்கக்  கண்டோம்
                                        காவலுக்(கு)  உரிய  கண்ணன்  கலைமலி  வேங்க  டத்தான்
                                        மாவலி  கர்வம்  மாற்றும்  மாலவன்  மணந்து  கொண்ட
                                        தேவியை  அலர்மேல்  மங்கைத்  திருவினைப்  புகழ்ந்து  பாடும்.

                                 13.   பாடுவார்  இதயம்  என்னும்  மனமணித்  தவிசை  என்றும்
                                        நாடுவாள்  அலர்மேல்  மங்கை  நற்றவம்  செய்வார்க்(கு) என்றும்
                                        பீ(டு)அருள்  தெய்வத்  தாயாய்ப்  பிறங்குவாள்  பணிந்தோர்  பாலே
                                        கூடுவாள்  ஆயர்  நம்பி  குலவிளக்(கு)  ஆன  பெண்ணாள்.

                                 14.  பெண்ணிவள்  கமல  பாதம்  பிறப்பினை  மாற்றும்  என்றே
                                        கண்ணனை ஆழ்வார் எல்லாம்  காலடி  பற்றி  நின்றார்
                                        மண்ணினை  உண்ட  மாயன்  மனையென  ஆன  தேவி
                                        புண்ணியம்  தந்து  காப்பாள் பொற்புடை  அலர்மேல்  மங்கை.

                                 15.  மங்கையாள்  மானின்   நோக்கி  மதுவினை ஒத்த  சொல்லி
                                       சங்கது  கொண்ட  மாயன்  சதிஎன  ஆகி  வையம்
                                       எங்கணும்  இருந்து  வந்தே  இணையடி  வணங்கு  வார்க்கு
                                       மங்கலப்  பொலிவு  தந்தே  மனைக்கொரு  விளக்கம்  ஆவாள்.

                                 16. விளக்கமாய்  அமைந்த  நங்கை  வித்தகி  அலர்மேல்  மங்கை
                                      துளக்கமில்  அடியர்  தங்கள்  துயரினை  மாற்ற  வல்லாள்
                                      அளிக்குலம்  அமர்ந்து   பாடும்  அழகிய  கூந்தல்  கொண்ட
                                      தளிரன  மேனி  யாளைத்  தாயெனப்  போற்றி  செய்க.

                                 17. செய்யவள்  அலர்மேல்  மங்கை  சேவகன் கண்ணன்  தேவி
                                      வையத்தை  அளந்த  மாலின்  வாழ்விலே  இடங்கொண்  டாளை
                                      மெய்யமும்  கோட்டி  யூரும்  மேவினான்  மனையி  னாளைக்
                                      கையினால் வணங்கு  வார்க்குக்  காட்டுவாள்  கமல பாதம்.

                                18.  பாதமாம்  பங்க  யத்தைப்  பார்த்தன்தேர் ஓட்டி  வைய
                                      நீதியைக்  காத்த  மாலின்  நெஞ்சிலே  இடங்கொண்  டாளை
                                      ஆதியை  அகிலத்  தாரின்  அருந்துணை  ஆன  செய்ய
                                      சோதியை  நெஞ்சில்  வைத்தார்  சொர்க்கமே  வாழ்வில்  காண்பார்.

                                19.  காண்பவர்  தம்க  ரங்கள்  கமலம்போல்  குவிந்து  நிற்கப்
                                      பூண்நகை  பொலியத்  தோன்றும்  பொற்பினாள்  அலர்மேல்  மங்கை
                                      ஊண்முதல்  யாவும்  ஈந்தே  உற்றதாய்  போலக்  காப்பாள்
                                      வாணுதல்  தெய்வ  மாதை  வணங்குவார்  மன்னர்  ஆவார்.

                                20. ஆவினைக்  காத்த  கோவின்  அரண்மனை  அரசி  யான
                                      தேவினை  மணந்த  தெய்வக் கற்பினாள்  மாந்தர்  செய்யும்
                                      பாவமே  போக்கு  வாளைப்  பார்மகள்  அலர்மேல்  மங்கை
                                      காவலில் அமரர்  போலக்  களிப்புடன்  வாழ்வர்  அம்மா.

 21.   அம்மையை  அலர்மேல் மங்கை  அமுதினை  நமக்கு  வாழ்வில்
     செம்மைசேர்  செல்வம்  சீர்த்தி  சிறந்தநல்  ஞானப்  பேறு
     நம்மவர்  அடியர்  என்றும்  நலத்துடன்  பெற்று  வாழ
     இம்மையில்  உதவு  வாளை  ஏற்றினால்  உயர லாமே.

22. ஆமையாய்  ஏனம்  ஆகி  ஆயரில்  கண்ணன்  ஆகிச்
      சேமஞ்செய்  இராமன்  ஆகிச்  சீர்பல  இராமன்  ஆகி
      வாமனன்  ஆய  வள்ளல்  வரதனின்  மனைவி  ஆன
      தாமரை  முகத்துத்  தாயின்  தாளிணை  சரணாய்க்  கொள்க.

23. கலைமலி  திருவி  னாளைக்  கமலமென்  முகத்தி  னாளைச்
     சிலைபிறை  புருவ  மாதைச்  செங்கயல்  விழியி  னாளை
     நலமலி  அலர்மேல் மங்கை  நாரணன்  துணையி  னாளைப்
     புலம்நிறை  அலர்மேல் மங்கா  புரத்துறை  தாயைப்  போற்று.

24. போற்றினார்  மனைகள்  தோறும்  பொன்மழை  பெய்ய  வைப்பாள்
     காற்றினான்  பெற்ற  மைந்தன்  கவிக்குலத்(து)  அனுமன்  என்பான்
     ஏற்றியே  தொழுத  ராமன்  இதயமே  வாழும்  மாது
     மாற்றுவாள்  கவலை  எலலாம்  மலையுறை  தெயவம்  ஆனாள்.

25.ஆனொடு  கன்று  மேய்த்தான்  அகலத்தில்  இடத்தைப்  பெற்ற
     மானிவள்  அலர்மேல் மங்கை  மனமதில் இடம்பி  டித்தார்
     தான்நிலம்  போற்ற  வாழ்வார்  தளிரடி  தலையிற்  சூட்ட
     மாநிலம்  மதிக்கும்  பேறு  மாதவள்  ஈவாள்  அன்றோ.

26.ஓதம்ஆர்  கடலின்  மேலே  உரகமெல்  அணைபொ  ருந்தி
     மாதவள்  கமலச்  செல்வி  மலரெனும்  கரங்க ளாலே
     சீதரன்  அடிபி  டிக்கும்  சிறப்பினை  கண்டு  போற்றிப்
     போதினில்  அமரு  வாளைப்  போற்றுவார்  புகழ்மிக்  கோரே.

27.ஓர்பகல்  போல  மின்னும்  ஒளிமணி  மகுடச்  செல்வி
     கார்பொலி  ஆழிப்  பாம்பில்  கண்வளர்  கின்ற  மாயன்
     பார்படி  அடிகள்  பற்றும்  பத்தினி  அலர்மேல் மங்கை
     சீர்படித்  தார்கள் அன்னாள்  சேவடிக் கமலம்  பெற்றார்.

28. பெற்றவள் இவளே  என்று  பேரடிக்(கு)  அன்பு  செய்வார்
      பெற்றமே  மேய்த்த  பிள்ளை  பேய்முலை  நஞ்சுண்  டானின்
      சுற்றமே   தழுவி  வாழும்  சுடர்மணி  அலர்மேல் மங்கை
      நற்றவம்  செய்வார்க்(கு)  எல்லாம்  நல்லருள்   சுரத்தல்  திண்ணம்.

29. திண்ணிய  வில்லை  ஏந்தித்  தென்திசைக்  கோனை  வென்று
     மண்ணினில்  தீமை  மாய்த்த  மன்னவன்  இராம  மூர்த்தி
     கண்ணிலே  காதல்  காட்டிக்  கருத்திலே  புகுந்த  மங்கை
     விண்ணவர்  தம்மைக்  காத்த  வித்தினை  மறப்பார்  உண்டோ.

30. உண்டமைக்  கண்ணி  னாளை  ஒருவரும்  அறியா  தாளை
     முண்டகம்  போன்ற  வான  முழுநிலா  முகத்தி  னாளை
     வண்டொலிக்  கூந்த  லாளை  வார்கடல்  அமுதி  னாளைக்
     கண்டவர் அலர்மேல் மங்கை கருத்தினில்  நிறைகு  வாரே.

31.வார்கடல்  உலகி  னோடு  வருந்திருக்  கரங்கள்  பற்றி
    மாமிசை  ஏற்றி  வைத்து  மகிழ்மா(று)  உற்ற  தேவி
    பார்மிசை  வேங்க  டத்தின்  பதிக்கொரு  சதியாய் ஆன
    கார்குழல் அலர்மேல்  மங்கை  கருத்தினில்  இடம்பி  டிப்பீர்.

32.பிடிபடா  ஞானம்  காட்டும்  பெரியவள்  அவளின்  செய்ய
    அடிதொடார்  எவரே  உள்ளார்  அச்சுதன்  மணந்த  நங்கை
    படிதொடாப்  பாதப்  போதைப்  பணிந்தவர்  கோடி கோடி.
    முடிவுறாப்  பிறவி  நோயை  முடிப்பவள்  அலர்மேல்  மங்கை.

33.மங்கையை   மறந்தார்  யாரே  மதியினைத்  துறந்தார்  யாரே
    செங்கயல்  விழிமீன்  கண்டு  செழிப்பினைப்  பெற்றார்  எல்லாம்
    பங்கயத்(து)  அயனை  ஈன்ற  பரம்பொருள்  துணைவி  என்றே
    தங்கரம்  தலைமேல்  கூப்பித்  தரணியில்  மன்னர்  ஆனார்.

34.நாரொடு  சேர்ந்த  பூவாய்  நாமவட்  சேர்ந்து  நிற்போம்
    பார்முதல்  ஐம்பூ  த்ங்கள்  படைத்தவள்  அலர்மேல்  மங்கை
    கார்முகில்  அனைய  மாயன்  கலந்தவள்  கருணை  ஊற்றாய்
    ஏர்பெற  அன்பு  செய்வாள்  இறையவள் நமது  செல்வம்.

35.செல்வமாக்  கோதை  ஆன  சித்திரம்  அலர்மேல்  மங்கை
     நல்லவர்  தொழுது  போற்றும்  நாயகி  நார  ணன்தன்
     இல்லுறை  நங்கை  அன்பர்  இதயமாம்  கோவில்  வாழும்
     நல்லவள்  பாதம்  போற்றி  நாளும்நாம்  பணிய  லாமே.

36.பணிபவர்  வாழ்க்கை  என்றும்  படிமிசை  ஓங்க  வைக்கும்
    பணிதலை  ஆன(து)  என்னும்  பாவைநல்  அலர்மேல்  மங்கை
    மணியிதழ்க்  கமல  மாதை  மனத்தினில் வைத்தோர்  எல்லாம்
    பிணியிலர்  ஆகி  வாழப்  பேரருள்  செய்வாள்  அம்மா.

37அம்மையை  அலர்மேல்  மங்கை  அமுதினை  வாடல்  இல்லாச்
    செம்மைசேர்  கமலத்  தாளை  சீர்மிகு  பவள  வாயாள்
    தம்மையே  வணங்கும்  பேறு  தரணியில்  வாய்த்தோர்  எல்லாம்
    இம்மையோ(டு)  அம்மை  தன்னில்  இன்னருள்  பெறுவர்  மெய்யே.

38.மெய்யவள்  உலக  நைத்தும்  மேலவள்  என்று  போற்றும்
    செய்யவள்  நாமம்  சொல்லிச்  சிந்தனை  பீடம்  ஏற்றி
    வையமேல்  வாழ்வார்  எல்லாம்  வளந்தரு  வாழ்க்கை  காண்பார்
    தையலாம்  அலர்மேல்  மங்கை  தாளிணை  பணிய  வாரும்.

 39.வார்உறை  மார்பு கொண்ட  வனசமென் முகத்தி  னாளை
  ஏர்உறை  பங்க  யத்தின்  இடையினில்  இடங்கொண்  டாளைப்
      சீருறை  வேங்க  டத்தான்  சிந்தையில்  வைகுவாளைப்
      பார்உறை  மாந்தர்  கூடிப்  பணிவதே  கடமை  என்பார்.


40.என்பெரும்  தெயவம்  என்று  மாருதி  எடுத்துச்  சொல்லி
    மன்பதை  போற்றி  என்றும்  மகிழ்ந்திடச்  செய்தான்  அந்த
    அன்பினை  எண்ணி எண்ணி  அழகிய  அலர்மேல்  மங்கை
    தன்பதம்  வணங்க  வாரீர்  தரணியிற்  பிறந்தோர்  எல்லாம்.


41.எல்லினை  ஒத்த  மேனி  இராகவன்  தேவி  ஆகி
    வல்வினை  அரக்கர்  தம்மை  வதைத்திடத்  துணைய  தான
    செல்வி  வேங்க டத்தான்  சேர்துணை  அலர்மேல்  மங்கை

    நல்விதி  காட்ட  நின்றாள்  நாயகி  நாமம்  வாழ்க.

42.கடல்படு  முத்தம்  என்னக் காண்ஒளி  மூர  லாளைக்
     கடல்படு  சங்கு  போலக்  காண்பதோர்  கழுத்தி  னாளைக்

     கடல்படும்  அலைகள்  போலக்  காண்கருங்  குழலி  னாளைக்
     கடல்படு சேல்கள்  போன்ற  கண்ணியை  வணங்கிப்  பாடும்.

43.பாடினார்  ஆழ்வார்  பாடிப்  பயன்மிகப் பெற்றார அன்றோ
     தேடினார்  தெளிவு  பெற்றார்  திருத்தகு  ஞானம்  பெற்றார்
     மாடம்ஆர்  வேங்க  டத்தின்  மலையவன்  துணைய  தான
     பீடுசால்  அலர்மேல்  மங்கை  பேரடி  போற்றி  வாழ்க்.

44. கற்பனைக்(கு)  எட்டாக்  கன்னி  கலைமலி  அலர்மேல்  மங்கை
     அற்புதத்  தெய்வம்  ஆகி  அருள்பவள்  மலையப்  பன்தன்
     இற்பொலி  அரசி  வானத்(து)  இமையவர்  வந்து  போற்றும்
     பற்பல  நாமம்  கொண்டாள்  பாதமே  சரண்என்(று)  ஓது.

45.ஓதுவார்  உள்ளக்  கோவில்  ஒளியென  விளங்கு  செல்வி
     காதலால்  வேங்க  டத்தான்  கைபிடி  அலர்மேல்  மங்கை
     தாதளை  வண்டு  பாடும்  தழைத்தசெம்  முகத்தி  னளைப்

     பூதலம்  புகழ்ந்து  பாடும்  போற்றுவோம்  நாமும்  இங்கே.

46.இங்கிவள்  ஈடி  லாதாள்  எனமறை  செப்பும்  செய்ய
     பங்கயம்  இருந்து  வாழும்  பகல்பொலி  நிறத்தி  னாளைச்
     செங்கயல்  விழிகொண்(டு)  இந்தச்  செகத்தினுக்(கு)  அருளைச்  செய்த
     மங்கையை  வையம்  காக்கும்  மயிலினை  மறக்க  லாமோ.

47.மோகினி  வடிவு  கொண்ட  முதல்வனாய்  ஆயர் பாடி
    மோகனன்  எனவ  ளர்ந்த  முகில்வணன்  வேங்க  டத்தான்
    போகமே  நுகர  வந்த  பொன்மகள்  நீல  வண்ண
    மேகனைப்  பிரியா  தாளை  மேவினால்  வாழ லாமே.

48.மேலவர் கீழோர்  மற்றும்  மேதினி   வாழ்வோர்  எல்லாம்
    சாலவே  வணங்கித்  தங்கள்  சஞ்சலம்  அகல்வான்  வேண்டி
    மாலவன்  மணந்த  மங்கா  புரத்துறை  அலர்மேல்  மங்கை
    காலடி  தொழுவார்  தங்கள்  கடும்பவ  நோயை  வெல்வார்.

49வார்முர(சு)  ஒலித்து  வந்த  வலிமைசால்  அரக்கர்  கோடி
    நேர்எதிர்  நில்லா  வண்ணம்  வென்றதோர்  நேமி  யானின்

    பார்வையில்  ஈர்ப்புக்  கொண்ட பங்கயக்  கன்னிப்  பாவை
    சீர்பெறு  பாதம்  காணப்  பெற்றவர் சிறந்தோர்  ஆவர்.

50.ஆவதும்  அவளால்  தானே  அழிவதும்  அவளால்  தானே
     யாவையும்  அவளால்  தானர்  யாரிதை  மறக்கற்  பாலார்
     காவதம்  கடந்து  காணும்  கருடனார்  சுமந்த  மாலாம்
     தேவனை  மணந்த  தேவி  திருமலை  மங்கை  காப்பாம்.

51.காப்பிடும்  கையாள்  கண்ணன்  கழலிணை  வருடும்  கையாள்
     கூப்பிடும்  அடியார்க்(கு)  எல்லாம்  குறையினை  நீக்கி  வைப்பாள்
     மாப்பிழை  செய்தா  ரேனும்  அடியினில்  மண்டி  யிட்டால்

     காப்பது  கடனே  என்று கருதுவாள்  அடிநி  னைப்பாம்.

52.பாம்பினை   மெத்தை  யாக்கிப்  பள்ளிகொள்  நீல  மாயன்
    தாம்பினால்  கட்டுப்  பட்டுத் தயிருடன்  நெய்பால்  உண்டான்
    காம்பன  தோளி  யாளைக்  கவினுயர் திருவி  னாளை
    நாடுவார்  வாழ்க்கை  நன்றே  நற்பலன்  கிடடும்  அன்றே.


53.நீடுகொள்  தோகை  மஞ்ஞை நெடிதுற  ஆடும்  வெற்பில்
    பீடுகொள்  அலர்மேல்  மங்கை பெட்புடன்  மணந்து  கொண்ட
    தோ(டு)இவர்  காதி  னாளைத் தூயமா  மனத்தி   னாளை
    நாடுவார்  வாழ்க்கை  நன்றே  நற்பலன்  கிட்டும்  அன்றே.

54.அன்(று)இவண்  சீனி  வாசன்  அடர்வனத்(து)  ஊடு  மங்கை

     நின்றிடக்  கண்டு  நெஞ்சம்  நேயத்தால்  மகிழ்வு   கொள்ள
     மன்ற்லும்  கொண்டான்  அந்த  மலரவள்  அலர்மேல்  மங்கை
     இன்றுநம்  வீடு  தோறும்  எழுந்தனள்  எல்லாம்  ஆனாள்.

55.ஆனவர்  நெஞ்சு  தோறும்  அருள்பொழி  கண்ணி  னாளைத்
     தேனமர்  பொழில்கொள்  சோலைத்  திருமலை  இருந்து  வாழும்
     மானமர்  நோக்கி  னாளை  மறக்கலும்  இயலு  மாமோ

     வானவர்  தலைவி  பாதம்  வாழ்வெலாம்  காக்கும்  மாதோ.

56.மா(து)இவள்  காதல்  பெற்றார்  மாநிலம்  புகழ  வாழ்வார்
    காதினால்  நாமம்  கேட்டார்  காலத்தை  வென்று  வாழ்வார்
    பாதத்தை  நினைப்பார்  எல்லாம்  பலநிதி  பெற்று  வாழ்வார்
    ஆதலால்  அலர்மேல்  மங்கை  அருளினை  வேண்டி  வம்மின்.

57.மின்பொலி  இடையி  னாளை  மீன்பொலி  விழியி  னாளை
    மன்பதை  காக்கும்  மாலின்  மனத்திடம்  கொண்டாள்  தன்னை
    அன்பரின்  அகங்கள்  தோறும்  அருள்மழை  பொழிவாள் தம்மை

    இன்பமே  ஈயும்  மங்கை  இவளடி  போற்றிப்  பாடு

58.பாடகம்  ஒலிக்கும்  கால்கள்  பங்கய  வதனச்  சாயல்

    ஈடிலா(து)   இயங்கும்  கண்கள்  இறையருள்  சுரந்து  காக்கும்
    கூடிய  கைகள்  எங்கும்  கும்பிடக்  காணும்  போது
    வாடிய  மனங்கள்  கூட  வளம்பெறக்  காப்பாள்  உண்மை.


59.உண்மையின்  உருவம்  ஆனாள்  உயிர்களின்  இயக்கம்  ஆனாள்
    கண்மலர்  கருணை  கொண்டு  காசினி  முழுதும்  காப்பாள்
    பெண்மையின்  சீர்மை  காக்கும்  பெரியவள் அலர்மேல்  மங்கை
    மண்பொலி  மாந்தர்க்(கு)  எல்லாம்  மாநிதி  நல்கு  கின்றாள்.

60.நல்லவள் இவளால்  வாழ்வு  நலம்பெறும்  என்பார் எல்லாம்
   வல்லவன்  தேவி  யான  வளர்புகழ் அலர்மேல்  மங்கை

   செல்வியைச்  சிந்தை  வைப்பார்  செயலெலாம்  அவட்கே  ஆக்கி
   நல்வினைக்(கு)  ஆன  பாதை  நாளெலாம்  காண  நிற்பார்.

61.பாரெலாம்  படைத்த  ஈசன்  பாண்டவர்  தூதன்  ஆனோன்
    ஊரெலாம்  கேட்டுப்  பின்னர்  ஒன்றுமே  இல்லா  தாகப்
    போரினால்  கிடைக்க வைத்த  புண்ணியன் மணந்த  மங்கை
    சீரினால்  பாதப்  போதைச்  சேர்ந்தவர்  வாழ்வு  பெற்றர்.

62.பெற்றவள்  பேணும்  பிள்ளை போல்நமைப்  பேணிக்  காக்கும்
    உற்றவள்  அலர்மேல்  மங்கை  உடலிலே  உதிரம் ஆனாள்
    கற்றவர்  போற்றும்  கன்னி  கலைபொலி  அலர்மேல்  மங்கை
    நற்றவர்  வாழ்வு  காண  நலந்தரும்  இனிய சக்தி.

69.சக்தியாம்  அலர்மேல்  மங்கை சரண்எனக்  கொண்டார்  எல்லாம்
    முக்தியைப்  பெறுவ(து)  உண்மை  முதுமறைப்  பொருளி  னாளைப்
    பக்தியாய்த்  தொழுவார்க்(கு)  என்றும்  பரம்பொருள்  ஞானத்  தோடு
    சக்தியும்  தருவாள்  அன்னை  சத்தியம்   பொய்யே  இல்லை.


64.இல்லையே  என்பார்க்(கு)  இல்லை  இருப்பதே  என்பார்க்(கு)  உண்டு
    வல்லவள் அலர்மேல்  மங்கை  வந்த்னைக்(கு)  உகந்த  செல்வி

    புல்லொடு  பூடே  யான பொருள்களின்  மூல  மான
    நல்லவள்  மலர்ப்பா  தங்கள்  நம்துணை  என்று கொள்வோம்.

65.ஓம்எனும்  பிரண  வத்தின்  உட்பொருள்  ஆன  சத்தி
     மாமழை  போல  மங்கை  மலர்விழி   கருணை  காட்டும்

     பூமழை  பொழிய  மக்கள்  புண்ணியப்  பேறு  பெற்றார்
     நாம்அவள்  கருணை  பெற்று  நலம்பல  பெறுவோம்  ஆக.

66.ஆகமம்  ஆகி  நின்ற  அளிமுரல்  கூந்த லாளை
     நாகமேல்  துயின்ற  நாதன்   நமக்கொரு  துணைய  தான

     பாகுபோற்  சொல்லி  னாளாய்ப்  பார்மகள் அலர்மேல்  மங்கை
     ஆகியே  காக்கும்  அன்னை  அடிமலர்  போற்ற  லாமே.

67.மேகமாய்  அருள்சு  ரக்கும்  மெல்லியல்  அலர்மேல்  மங்கை
     சோகமாய்  இருப்பார்க்(கு)  எல்லாம்  சுகம்தரும்  வனசத்  தாளை
     நாகமே  சுமக்கும்  அய்யன்  நயந்தவள்  திருவின்  செல்வி
     பாகினை  வென்ற  சொல்லி  பதமலர் காப்ப  தாமே.


68.காப்பது  கடனே  யாகக்  கருதுவாள்  சேர்ந்தார்  தம்மைக்
    காப்பதே  கடமை  என்று  காட்டுவாள்  அருளாய்  நெஞ்சில்
    பூப்பவள்  அலர்மேல்  மங்கை  புண்ணியர்க்(கு)  எல்லாம்  செல்வம்

    சேர்ப்பவள்  கமலத்  தாளைச்  சிந்தையில்  சேர்ப்பாய்  நெஞ்சே.

69.சேவடிக்  கமலம்  காட்டிச்  செலவமும்  அள்ளித்  தந்த
    ஓவியம்  அலர்மேல்  மங்கை  உத்தமி  நாமம்  சொல்லி

    ஆவியை  அவளுக்(கு)  என்றே  அர்ப்பணம்  செய்தார்  வாழ்க்கை
    காவியம்  ஆகும்  கண்டீர்  கருமமும்  அதுவே  கண்டீர்.

70.கண்டவர் வீடு  காணக்  கருணைசெய்  அலர்மேல்  மங்கை

    பண்டுஅமர்  செய்த  மாலின்  பத்தினி  பணிவார்  தம்மை
    மண்டலம்  துதிக்கச்  செய்வாள் மானிடர்  போற்றச்  செய்வாள்
    தொண்டராய்த்  துலங்க  வைப்பாள்  தூயவர்  ஆக்கி  வைப்பாள்.

71.பாளையை  நிகர்த்த  மூரல்  பதுமினி  வளர்த்த  பெண்ணாள்

    காளையாம்  சீனி  வாசன்  காதல்கூர்  மனைவி  ஆனாள்
    தோளினில்  மாலை  யாகத் துலங்குவாள்  அலர்மேல்  மங்கை

    தாளைநாம்  பணிவ(து)  அல்லால்  தரணியில்  பணிவே(று)  உண்டோ.

72.உண்டுறை  செல்வம்  ஆதி  உதவிடும்  அலர்மேல்  மங்கை

    அண்டிய  அடியார்க்(கு)  எல்லாம்  அடைக்கலம்  தந்து  காப்பாள்
    கொண்டவன்  சீனி  வாசன்  கொஞ்சிடும் மயிலே  ஆனாள்

    வண்(டு)அமர்  மாலை  சூடி  வாழ்த்துவாள்  பற்றி  னாலே.

73.நாலெனச் சொல்லும்  வேதம்  நாட்டிய  பொருளே  ஆனாள்
    மாலவன்  செல்வத்  தேவி  மங்கலம்  காக்கும்  தாயின்

    காலினைப்  பிடித்தார் இந்தக்  காசினி  மன்னர்  ஆவார்
    நூலிடை  அலர்மேல்  ம்ங்கை  நோயெலாம்  தீர்ப்பாள்  மன்னோ.

74.மன்னவர்  வணங்கும்  தாளாள்  மாதிரம்  அனைத்தும்  காக்கும்
    அன்னையாய்  இலங்கும்  செல்வி  அருள்மழை  பொழிவாள்  பாதம்

    சென்னியில்  சூட்டு  வாரைச்  செங்கண்மால்  துணைவி  காப்பாள்
    கன்னல்இன்  சொல்லி  னளின்  காவலில்  வாழ்க  நாடு.

75.நாடெலாம்  போற்று  கின்ற  நங்கையாள்  அலர்மேல்  மங்கை

    ஆடகப்  பொன்போல்  மேனி ஆயிரம்  சுடர்கள்  வீசும்
    பாடகம்  சிலம்பு  கொஞ்சும்  பதமென்  மலர்கள்  போற்றித்

    தேடிய  மாந்தர்க்(கு)  அன்னை  திருவடி  தினமும்  ஈவாள்.

76.ஈவதோ  அருளை  என்றும்  இசைப்பதோ  இவள்தன்  நாமம்
    நாவினால்  இவள்தன்  நாமம்  நவின்றவர்  வாழ்வு  காண்பார்

    காவினில்  பூத்த  பூப்போல்  காணும்ஓர்  வேங்க டேசன்
    தேவியை  அலர்மேல்  மங்கைத்  திருவினை  மறந்தார்  யாரே.


77.யாரிவள்  எல்லை  கண்டார்  எனமறை  பேசக் காண்பார்
    சீரிதழ்த்  தாம  ரைப்பூச்  சேவடி  அலர்மேல்  மங்கை

    காரியான்  மேக  வண்ணன்  கலந்தவள்  ஆகி  வ்ந்த
    சீரினாள்  காப்பே  என்று  சிந்தனை  செய்வோம்  நாமே.

78.நாமமே  சொல்லு  வாரை  நாளெலாம்  நினைந்து  மக்கள்

    சேமமே  விரும்பு  வாரைச்  சேயிழை அலர்மேல்  ம்ங்கை
    தாமமே  சூடும்  அந்தத்  தனிப்பெரும்  சீனி  வாசன்
    காமமே  நுகர்ந்தாள்  பாதம்  மருந்தெனக்  கவலை  போக்கும்

79.போக்குடன்  வரவே  இல்லாப்  புனிதையைத்  தாய்மை  ஊற்றை
    மாக்கடல்  பாயல்  கொள்ளும்  மலையவன்  துணைய  தான
    பூக்குழல்  அலர்மேல்  மங்கை போற்றினார் புனிதர்  ஆக
    ஆக்குவாள்  திருவை  நல்கி  ஆதர(வு)  அளிப்பாள்  அம்மா.


80.அம்மையை  அறத்தின்  தாயை  அருள்பொலி  முகத்தி  னாளைத்
     தம்மையே  தமர்க்கு நல்கும் தனிப்பெரும்  அலர்மேல்  மங்கை
     இம்மையில் பேற்றை  நல்கும் இனியவள்  ஆய  மாதை

     நம்மனை  இருப்பாள்  தம்மை  நாடினார் அனைத்தும்  ஆவார்.

 81.ஆவினை  மேய்த்த கண்ணன்  அன்பினால்  அலர்மேல்  மங்கைத்
     தேவியை  நினைத்த  பேர்க்குத்  திருவினை  அளிப்பாள்  தம்மைப்
     பாவியர் மனத்தை  மாற்றிப்  பரம்பொருள்  தன்மை  காட்டும்

     பாவையை  வணங்கி  இன்பப்  பரவையில்  படிய  லாமே.

82.படியினை  அளந்த  மாலின்  பத்தினி  அலர்மேல்  மங்கை
    அடியினை  மனத்தில்  வைத்தார்  அகத்தினில்  திருவை  வைப்பாள்
    மடிமிசைக்  கிடத்தி  நம்மை  மகவெனக்  காத்து  நிற்பாள்
    துடியிடை  கொண்ட  தாயே  நம்துயர்  அனைத்தும்  தீர்ப்பாள்.

83.தீர்ப்பவள்  நமது  துன்பம்  தேவையை  நிறைவு  செய்து
    பார்ப்பவள்  அலர்மேல்  மங்கை  பாதமே  காப்ப  தாகச்
    சேர்ப்பவர்  இல்லம்  தோறும்  திருவினைச்  சேர்க்கும்  தேவி
    நீர்பொலி  மேகம்  போல  நித்தமும்  கருணை  பூப்பாள்.


84.கருணையின்  உருவம்  ஆனாள்  காவியை  நிகர்த்த  கண்ணாள்
    அருணனின்  கதிர்கள்  போல  அமைஒளி  மேனி  கொண்டாள்

    தரணியின்  மகள  தான  தாயவள்  அலர்மேல்  மங்கை
    வரம்அளிக்  கின்ற  தாயாய்  வாழ்வினில்  இலங்கு  கின்றாள்.

85.இலங்குவாள்  திருவின்  நங்கை  இனியவள்  அலர்மேல்  மங்கை
    துலங்குவாள்  விளக்க  மாகத்  தூயவர்  மனைகள்  தோறும்
    மலங்கெடப்  புனித  ராக  மனிதரை  மாற்று  வாளைத்
    தலங்க்ளில்  விளங்கு  கின்றாள்  தனித்ததோர்  தெய்வப்  பாவை.

86.பாவையாக  அலர்மேல்  மங்கை  பரிவுடன்  நம்மைக்  காக்கும்

    தேவியைக்  கருணைத்  தாயைத்  தென்றலின்  உருவா  னாளைச்
    சேவடி நமக்குத்  தந்த  செல்வியைத்  துயர்கள்  நீக்கும்

    ஓவியத்  திருவி  னாளை  உளத்திலே  வைத்தார்  வாழ்வர்.

87.வாழ்வினில்  செம்மை  காட்டும்  வனிதையாம்  அலர்மேல்  மங்கை
    தாழ்வுறும்  போது  வந்து  காக்கின்ற்  தாயின்  காலில்
    வீழ்வுறும்  போது  கண்டு  வெற்றியைத்  தருவாள்  நம்மைச்
    சூழ்வுறும்  வினைகள்  ஓடும்  சொர்க்கமே  வந்து  கிட்டும்.

88.கிட்டிடும்  இன்பம்  எல்லாம்  கிளையுடன்  சேர்ந்து  வாழக்
    கிட்டிடும்  கருணை  வாழ்க்கை  கீர்த்தியை  நல்கத் துன்பம்
    பட்டிடும்  அலர்மேல்  மங்கை  பார்வையால்  செல்வம்  எல்லாம்
    கொட்டிடும்  மனைகள்  தோறும்  குவிந்திடும்  வணங்க  வாரீர்.

89.வணங்கினார்  இல்லம்  தோறும்  வரத்தினை  நல்கும்  அந்த
    அணங்கினை  வேங்க  டத்தின்  அமுதினை  மறவா(து)  என்றும்
    வணங்கினார்  வாழ்வு  காண்பார்  வரத்தினை  மறந்து  வாழ்வில்

    பிணங்கினால்  ஒன்றும்  இல்லை  பேணினால்  வாழ்க்கை  உச்சம்.

90.உச்சிமேல்  நிலவு  சூடும்  உத்தமன் தனக்கே  என்றும்

    மச்சினன்  ஆன  மாலின்  மனைவியாம்  அலர்மேல்  மங்கை
    மெச்சிடு  பக்த  ராக  மேவினார்  வாழ்வு  காண
    நிச்சயம்  உதவி  செய்வாள்  நினைவெலாம்  நிறைந்து  நிற்பாள்.

91.நிற்பவள்  என்றும்  நெஞ்சில்  நிலைப்பவள் அலர்மேல்  மங்கை
    தற்பதம்  கடந்த  தாயைத்  தரணியாள்  பெற்ற  பெண்ணை

    மற்புயச்  சீனி  வாசன்  மனையென  வாய்த்த  கண்ணை
    அற்புதச்  செல்வி யான  அம்மையை  வணங்க  வேண்டும்.

92.வேண்டுவார்  பாவம்  தீர்க்கும்  வித்தகி  அருளை  என்றும்
    தூண்டுவாள்  அலர்மேல்  மங்கை  துணையெனக்  கொண்ட பேரை
    ஆண்டுவாழ்வு  அளிக்கும்  அன்னை  அருட்கழல்  தம்மைப்  போற்றி
    மீண்டுவாழ்(வு)  உற்றார்  கோடி  மேற்பட  வாழ்வர்  கோடி.


93.கோடிமா  தவங்கள்  செய்து  கும்பிடும்  தவத்தர்  தம்மை
    நாடியாள்  கின்ற  தேவி  நாரணன்  மணந்த நங்கை

    கூடிவாழ்  மனைகள்  தம்மைக்  கோவிலாய்  ஆக்கி வைக்கும்
    தோடிவர்  கூந்த  லாளைத்  துணையெனக்  கொண்டால்  என்ன.

94.என்னவள்  என்று  மக்கள்  இணையடி  தொழுவர்  ஆகில்
    அன்னவள்  திருவை  ஈவாள்  அருள்மழை  பொழிந்து  நிற்பாள்
    கன்னலை  வென்ற  சொல்லாள்  கருத்தெலாம்  நிறைந்து  நிற்பாள்
    பன்னலம்  தந்து  செல்வப்  பாவையாய்  அருள்வாள்  என்றும்.

95.என்றிவள்  கமல  பாதம்  இறைஞ்சுவோர்  வதனம்  நோக்கிக்
    கன்றினைக்  கண்ட  காரான்  களிப்புடன்  பொழிபால்  போல
    நின்(று)இவண்  அருட்பால்  ஈயும்  நிமலையை  நெஞ்சில்  ஏற்றிப்
    பொன்றிடாத்  திருவி னோடு  புகழ்நிறை  வாழ்வு  நல்கும்.

96.நல்கிடும்  மதிகொள்  ஞானம்  நாட்டிடும்  தவத்தில்  வேட்கை
    பல்வகை  நிதியி  னாலே  பாரினில்  உயர்த்தி  வைக்கும்
    வில்வழி  வெற்றி  கண்ட   வித்தகன்  மணந்த  மங்கை
    சொல்வழி  வாழ்வு  பெற்றார்  சோர்வின்றிப்  பெறுவர்  ஞானம்.


97.ஞானமும்  கீர்த்தி  தானும்  நமக்கருள்  கின்ற  தாயை
     ஊனம்இல்  தவத்தோர்க்(கு)  எல்லாம்  உயர்ந்தபே(று)  அருளிக்  காக்கும்
     தேனமர்  பூக்கள்  கொண்ட திருப்பதி அலர்மேல்  மங்கை
     வான்அமர்  பேறு  நல்கி  வளமெலாம்  ஈவாள்  அந்தோ.

98.அந்தமில்  தெய்வக்  கன்னி  அடிமலர்  பேணு  வார்தம்
     பந்தங்கள்  அகன்று  போகப்  பரிபவம்  இல்லா  தாகத்
     தந்(து)அருள்  சுரக்கும்  தேவர்  தருவென  அனைத்தும் ஈவாள்
     கந்தமென்  குழலி  ம்ங்கை  காலடி  பற்றுக்  கோடே.

99.கோட்டமில்  நெஞ்சி  னார்தம்  குறைகளை  நீக்கும்  தாயை

    வாட்டமே  போக்க  வந்த  வனிதையை  அலர்மேல்  மங்கை
    நாட்டமே  நம்மை  நோக்கி  நல்லருள்  ஈதல்  கண்டோம்
    வேட்டுநாம்  பணிந்தால்  வாழ்வில்  விளைவன  கோடி கோடி.

100.கோ(டு)இவர்  குரங்குக்  கூட்டம்   கூட்டியே  இலங்கை  சென்று
      சாடினான்  அரக்கர்  தம்மைச்  சானகி  என்னும்  தையல்
      கூடினாள்  வேங்க  டத்தின்  கோதையாம்  அலர்மேல்  மங்கை

      நீடுநாள்  தந்து  போற்றி  நினைவினில்  நிற்பாள்  பொன்னே.

             அலர்மேல்  மங்கை அந்தாதி  நிறைவுற்றது.


                                                                                  

Monday, October 21, 2013

பரந்தாமனுக்குப் பல்லாண்டு - காப்பியக் கவிஞர் மீனவன்

 காப்பியக் கவிஞர். நா.மீனவன்           
                     
1.
வங்கக்  கடல்வண்ணா  வல்வினைகள்   தாங்கமாற்றி
இங்(கு)எம்  மனத்தில்  இடம்பிடித்தாய்  திருமார்பில்
தங்கத்  திருமகளும்  தானிருக்க  அன்றந்தத்
துங்க  வரைசுமந்த தோளுடையாய்  பல்லாண்டு.

2.
கதிரா  யிரம்போல்க்  காணும்  வயிரமுடி
எதிரே  சுடர்காட்டும்  ஏழுமலைக்(கு)  அதிபதியே
பதியில்  சிறந்ததிருப்  பதிஉறைவாய்  நின்னடியே
கதியாய்  நினைக்கின்றோம்  காத்தருள்வாய்  பல்லாண்டு.

3.
தாயாம்  அலர்மேலு  தானுறையும்  மலர்மார்பா
வாயால்  உனைப்பாடி  வழிவழியாய்த்  தொழுதெழுந்தோம்
மாயா  திருமலைவாழ்  மலையப்பா நின்னடிகள்
ஓயாமல்  சிந்தித்தோம்  உத்தமனே  பல்லாண்டு.

4.
கரியோடு  பரிமாவும்  காலாளும்  தேர்ப்படையும்
உரியானைப்  பாண்டவர்பால்  உள்வர்மம்  உடையானைத்
துரியனைத்  தான்வெல்லத்  துலங்குபரித்  தேரோட்டி
வரிவில்  விசயனையே  வாழ்வித்தாய்  பல்லாண்டு.

5.
கயல்திகழும்  மலைச்சுனையில்  காலையிலே  நீராடி
வயற்கமலம்  போல்விளங்கும்  வண்ணவிழி  அருள்நோக்கால்
துயரகற்ற  வேண்டுமெனத்  தொழுது  பணியுமெங்கள்
மயலகற்றி  அருள்புரிவாய்  மலையப்பா  பல்லாண்டு.

6.
சங்கேந்து  கையுடையாய்  சக்கரமும்  தானுடையாய்
மங்கையலர் மேலு  மகிழ்ந்துறையும்  மார்புடையாய்
கொங்குண்  மலர்வண்டு  கோவிந்தா  என்றழைக்கும்
தங்கத்  திருமுடியாய்  தளிரடிக்கே  பல்லாண்டு.

7.  
ஏதங்கள்  போக்கி  எமையாளும்  வேங்கடவா
போதார்  கமலப்   பொகுட்டுறையும்  திருமகட்கு
நாதா  திருமலைக்கு  நாயகனே  நின்னுடைய
பாதம்   கதியென்று  பணிந்திட்டோம்  பல்லாண்டு.

8.  
சங்கமுடன்  ஆழிஒரு சாரங்க  வில்லெடுத்தோய்
பொங்கெழில்சேர்  தாமரைபோல்  பூத்தவிழிக்  கமலங்கள்
எங்கள்வினை  போயகல  எழுகடல்போல் அருள்சுரக்கப்
பங்கயத்தாள்  பற்றிட்டோம் பல்லாண்டு

9.  
படர்அலைகள்  மேலிருக்கும்  பாம்பணைமேல்  கிடந்தானைத்
தடங்கடலுள்  தான்பாய்ந்து  தனிமறைகள்  காத்தானை
மடங்கலாய்  இரணியன்தன்  மார்பகலம்  கீண்டானை
வடவாலில்  இருந்தானை  வணங்கிடுவோம்  பல்லாண்டு.

10.  
கார்பொலியும்  திருமலைமேல்  காலமெலாம்  இருந்தானை
நீர்பொலியும்  பாற்கடலே  நிலைஎனக்கண்  வளர்ந்தானைத்
தார்மாலை  சூடிவரும்  தாமரைக்கண்  திருமாலைப்
பார்வாழப்  பாடிடுவோம்  பரந்தாமா  பல்லாண்டு.

11.  
நீலமா  முகிலனைய  நிறத்தானே  நெய்விரவு
கோலக்  குழற்கோதை  கொண்டிலகு  மார்புடையாய்
ஆலிலைமேல்  கண்வளரும்  அமுதவாய்ப்  பரம்பொருளே
நாலுமறை  வேங்கடவா  நாயகனே  பல்லாண்டு.

12.
செங்கமலம்  போலச்  சிவந்தவாய்  இதழுடையாய்
மங்கலப்பொன்  மணிமாலை  மார்பிலங்கு  மாயவனே
எங்கள்  குலத்தரசே ஏழேழ்  தலைமுறைக்கும்
இங்குனக்குச்  சரணங்கள்  இனியவனே  பல்லாண்டு.

13.
ஆயர்குலத்(து)  அணிவிளக்கே  அகிலமுழு தாள்பவனே
காயாம்பூ  நிறமுடைய  கார்வண்ணா  உச்சிமலை
தோயும்  முகிலுக்கும்  துணையான  வேங்கடவா
மாயவனே  எழிற்சோலை  மலையழகா  பல்லாண்டு.

14.
நீராழி  உடையுடுத்த  நிலப்பெண்ணாள்  தினம்மருவும்
பேராளா  எங்கள்  பெருமானே  பாண்டவர்க்குத்
தேரோட்டி  உலகுய்யத்  திருவருளைச்  செய்தவனே
ஓராழி  கையுடைய  உத்தமனே  பல்லாண்டு.

15.
போரானைத்  தோலுரித்த பூந்துழாய்  மார்பனே
நாராயணா  திருமலையின்  நாயகனே  செந்திருவாழ்
சீரார்  மணிமார்பா  செழுங்ககமலத்  தாளுடையாய்
ஏராரும்  சோலை  இருந்தருள்வாய் பல்லாண்டு.

16.
சாரங்க  வில்லுடையாய்  சக்கரமாம்  படையுடையாய்
போரரங்கம்  புழுதிபடப்  பொற்றேர்  செலுத்தியவா
தாரம்கொள்  இராவணனைத்  தரைமேல்  கிடத்தியவா
பேரரங்கம்  கிடந்திட்ட  பெரியவனே  பல்லாண்டு.

17.
கற்பகக்கா  தானுடைய  காவலனை  அந்நாளில்
பொற்பழித்த  தானவரைப்  புறங்கண்ட  சேவகனே
வெற்பெடுத்த  இராவணனை  வென்றழித்த  நாயகனே
மற்போர்செய்  தோளுடைய  மாதவனே  பல்லாண்டு.
                                 
18.
முப்பொழுதும்  தவறாமல்  முனிவரெலாம்  தான்வணங்கும்
மெப்பொருளே  திருமலைவாழ்  மேலவனே  நின்மலர்த்தாள்
எப்பொழுதும்  துதிக்கின்ற  எமைக்காக்கும்  ஏழுமலை
அப்பாஉன்  பொன்னடிக்கே  ஆயிரமாம் பல்லாண்டு.

19.
வடமலையை  மத்தாக்கி  வாசுகியை  நாணாக்கி
அடலமரர்  தானவர்கள்  ஆழிகடை  வேளையிலே
சுடரும்பொற்  குடத்தமுதைப்  பங்கிடவே  சோதியென
மடவரலாய்  வந்ததிரு  மலையப்பா  பல்லாண்டு.

 20.
தன்னேரில்  பாரதப்போர்  தான்நடக்கும்  காலத்தில்
மின்னேர்வில்  விசயனுக்கு  மேலான  கீதையுரை
சொன்னவனே  அவனுக்குச்  சோதிமிகு  பேருருவம்
தன்னையே  காட்டிவைத்த தக்கவனே  பல்லாண்டு.                                              

21.
பார்விழுங்கும்  கடலுக்குள்  பன்றியாய்த் தான்பாய்ந்து
போரவுணன்  திறலடக்கிப்  பூமியினைத்  தன்னுடைய
ஓர்மருப்பில்  தானேந்தி  உலகாண்ட  வேங்கடவா
சீர்திகழும்  திருமலைவாழ்  செல்வனே  பல்லாண்டு.

 22.
மன்னுபுகழ்த்  திருவரங்க  மாமணியே  பாய்ந்துவரும்
பொன்னிநதி  அடிதழுவும்  பூவடியாய்  அலர்மேலு
மின்னிடையாள்  நாயகனே  மேலைநாள்  குன்றெடுத்த
இன்னமுதே  கண்ணா  எழிற்சுடரே பல்லாண்டு.

23.
மாமறையும்  முனிவரரும்  மற்றுமுள்ள  தேவர்களும்
பாமரரும்   வந்துபணி  பரந்தாமா  கோபியர்கள்
தாமயங்கக்  குழலூதித்  தண்ணருளைச்  செய்தவனே
கோமகனே  வேங்கடவா  கும்பிட்டோம்  பல்லாண்டு.

24.
கானிடையே  பசுமேய்த்த கரியமா  முகிலனையாய்
வானமரர்  தொழுதேத்த  வண்டரவம்  செய்யலங்கல்
தானணிந்த  மாலவனே  மாமலராள்   நாயகனே
தேனுடைய  மலர்ச்சோலைத்  திருமாலே பல்லாண்டு.

25.
காரார்  திருமேனிக்  காகுத்தன்  எனத்தோன்றிப்
போராரும்  நெடுவேற்  புகழிலங்கை  இராவணனைத்
தேரோடும்  முடியோடும்  திருநிலத்தே  தான்கிடத்தி
ஏராரும்  அமரரைஈ(டு)  ஏற்றியவா  பல்லாண்டு.

26.
சித்திரப்புள்  ஏறிவரும்  சீரங்கா  பணிவார்க்கே
முத்திதரும்  கருநீல  முகில்வண்ணா  உலகளந்த
வித்தகனே  சனகனது  வில்லறுத்த  நாயகனே
தத்துபுகழ்  வேங்கடவா  தளிரடிக்கே  பல்லாண்டு.

27.
திக்குநிறை  அரக்கர்குழாம்  தெருண்டோட  அத்திரங்கள்
மிக்கபெரு  மாரியென  மேல்விடுத்த  சேவகனே
தக்கபுகழ்  வைதேகி  தான்மணந்த  மணவாளா
செக்கர்வான்  எனச்சிவந்த  சேவடிக்கே  பல்லாண்டு.

28.
வம்புலாம்  நற்கூந்தல்  வாட்கண்ணாள்  அலர்மேலு
கொம்பனாள்  தன்மேனி  கூடியவா  கூரியநல்
அம்பனைய கண்ணாள்  அழகுபத்  மாவதியாம்
செம்பொன்னாள்  தனைமணந்த  சேவகனே  பல்லாண்டு.

29.
ஆதிப்பிரான்  நம்மாழ்வார்க்(கு)  அன்றருள்செய்  மால்வண்ணச்
சோதிப்பிரான்  திருக்குருகூர்ச்  சுடரிலங்கு  வல்லியாள்
கோதைப்பிரான்  வந்தீண்டு  குடிகுடியாய்  ஆட்செய்வார்
சாதிப்பிரான்  வேங்கடவா  சாதித்தோம்  பல்லாண்டு.

30.
நாடுவார்க்(கு)  அருள்கின்ற  நம்பியுன்  பாதமலர்
சூடுவார்  நலம்பெறுவார்  சொல்மாலை  புனைந்தேத்திப்
பாடுவார்  பதம்பெறுவார்  பக்தியால்  திருமலையைத்
தேடுவார்  தமைக்காக்கும்  திருப்பதியே  பல்லாண்டு.

31.
வில்லாண்ட  தோள்இராமன் வித்தகனாம்  அனுமனெனும்
சொல்லாண்ட  சுந்தரன்கீழ்ச்  சூழ்ந்திருக்க  வலிமைமிகு
கல்லாண்ட  தோளுடையாய்  காகுத்தா  உனக்கிங்கே
பல்லாண்டு முகில்தோயும்  திருமலையா பல்லாண்டு.

 32.
கோகுலத்தில்  அந்நாளில்  குடிமக்கள் இல்புகுந்து
பாகனைய  மொழிபேசும்  பாவையராம்  ஆய்ச்சியர்சேர்
மாகுடத்துப்   பால்தயிரும்  மற்றிருந்த  வெண்ணெயையும்
மோகமுடன்  அருந்தியவா  முழுமுதலே பல்லாண்டு.

33.
பங்கயங்கள்  வாய்நெகிழப்  படர்ந்தருவி  தாம்முழங்கச்
செங்கயல்கள்  துள்ளிவிழச்  சிறுவண்டு  பறந்துவர
எங்கும்  அழகுபொலி  இயற்கைவளத்  திருப்பதியில்
மங்கலமாய்  இருந்தருளும்  மலையப்பா பல்லாண்டு

34.
சங்கொருகை  ஏந்தியவா  சக்கரமும்  ஏந்தியவா
மங்கையாம்  அலர்மேலு  மகிழ்ந்துறையும்  திருமார்பா
திங்கள்போல்  திருமுகத்தில் தேசுடைய  வேங்கடவா
பொங்குபுகழ்த்  திருமலைவாழ்  புண்ணியனே பல்லாண்டு.

35.
கரியமுகில்  மால்வண்ணா  கஞ்சன்  அனுப்பிவைத்த
கரியழியப்  போர்செய்த  காயாம்பூ  மேனியனே
பெருகிவரும்  பேரின்பப்  பெருவாழ்வு  தரவந்த
திருமலைவாழ்  வேங்கடவா  தெண்டனிட்டேன் பல்லாண்டு.

36.
வண்டாடும்  சோலை  வளைந்தாடும் செடிகொடிகள்
மண்டூகம்  பாய்சுனைகள்  மாலடிகள்  தொடுகற்கள்
கொண்டதொரு  திருமலைவாழ்  கோவிந்தா  கோபாலா
பண்டரக்கன்  தலைஎடுத்த  பரந்தாமா பல்லாண்டு.

37.
மதகளிற்றின்  கொம்பொசித்து  மல்லரையும்  சாய்ப்பித்து
நதிபொன்னி  கால்வருட  நமையாளக்   கண்வளர்வாய்
எதிராச  மாமுனிவர்  ஏந்துபுகழ்த்  திருவரங்கா
கதியான  வேங்கடவா  கற்பகமே  பல்லாண்டு.

38.
பஞசடியாள்  நப்பின்னை  பார்த்திடஏழ்  எருதடக்கி
நஞ்சரவச்  சிரசின்மேல்  நடனங்கள்  ஆடியவா
வெஞ்சிறையில்  பிறந்தவனே  வெவ்வினைகள்  தானகல
நெஞ்சிடையில்  செம்பொருளாய்  நிற்பவனே பல்லாண்டு.

39.
மொய்வண்டு  முகைவிரித்து  முகிழ்த்ததேன்  தனையருந்தி
மெய்மறந்து  தவம்கிடக்கும்  மேலான  திருப்பதியில்
கையாழி  ஏந்தியவா  கமலக்கண்  நாயகனே
அய்யா  மலையப்பா  அரங்கனே  பல்லாண்டு.

40.
கடல்மல்லைத்  தலசயனம்  கச்சியொடு  திருவெக்கா
குடந்தையொடு  விண்ணகரம்  கோலமிகு  திருநறையூர்
படர்வைகைத்  திருக்கூடல்  பாடகம்  திருத்தண்கா
குடிகொண்டு  திருமலைவாழ்  கோவிந்தா  பல்லாண்டு.

41.
திருவிடந்தை  கரம்பனூர்  திருநாகை  கண்ணபுரம்
திருவல்லிக்  கேணியொடு  திருக்கடிகை  திருக்கோழி
திருவில்லி  புத்தூர்  திருமோகூர்  திருமெய்யம்
திருவனந்தை  வாழ்முகிலே  திருப்பதியே  பல்லாண்டு.

42.
ஊரகம்  திருச்சேறை  ஓங்குபுகழ்த்  திருவழுந்தூர்
நீரகம்   சிறுபுலியூர்  திருநந்தி  விண்ணகரம்
காரகம்  கள்வனூர்  திருக்காழி  விண்ணகரம்
சீரகமாய்க்  கொண்டதொரு  செங்கண்மால்  பல்லாண்டு.

43.
செப்பனைய   மார்புடைய  சிற்றிடைசேர்  ஆய்ச்சியர்கள்
எப்பொழுதும்  சூழ்ந்திருக்க  இனியகுழல்  ஊதியவா
முப்போதும்  வானமரர்  முன்வணங்கும்  முதற்பொருளே
உப்பிலியாய்  மலையப்பா  உன்னடிக்கே  பல்லாண்டு.

44.
உலவுதிரைப்  பாற்கடலுள்  உரகமிசைக்  கண்வளர்வாய்
பொலிவுடைய  திருமேனிப்  பூமகளுன்  கால்வருடத்
தலைமுடிகள்  ஆயிரத்தால்  த்ரணிதனைத்  தாங்குகின்ற
நலமிக்க  சேடனுக்கு   நாயகமே  பல்லாண்டு.

45.
போர்ப்பூமி  தானதிரப்  பொற்றேரை  நடத்தியவா
தேர்பூத்த  மாமுகிலே  திருத்துழாய்  நெடுமாலே
பார்காக்கப்  போர்தொடுத்த  பாண்டவர்க்கு  மைத்துனனே
சீர்பூத்த  திருமகளைச்  சேரந்தவனே  பல்லாண்டு.

46.
மின்னியலும்  பொன்மடவார்  மேதகுநல்  ஆய்ச்சியர்கள்
பொன்னாடை  தனைக்கவர்ந்த  புண்ணியனே  மழைகண்ணா
பின்னதோர்  அரியாகிப்  பேரசுரன்  மார்பிடந்த
மன்னாதென்  திருவரங்கா  மலையப்பா  பல்லாண்டு

47.
மன்னுமொரு  குறள்வடிவாய் மாவலியைச் செற்றவனே
அன்னவயல்   திருவாலி  அமர்ந்துள்ள  பெருமாளே
முன்னீர்க்   கடல்கடந்த  முகில்வண்ணா  உன்பெருமை
என்னே  எனப்புகல  என்னுயிரே  பல்லாண்டு.

48.
பூமறைகள்  தானார்த்துப்  புகழ்பாடக்  கண்வளரும்
தாமரையாள்   நாயகனே  தாளால்  உலகளந்த
மாமுகிலே  மழைவண்ணா  மணிக்கயிற்றால்  கட்டுண்ட
தாமோ  தரனே  தனிப்பொருளே  பல்லாண்டு.

49.
தென்னன்  பொதியமலைத்  தேசுடைய  சந்தனங்கள்
மன்னும்  திருமேனி  திருமால்  இருஞ்சோலை
உன்னி  உறையும்  உறங்காத  கண்ணுடையாய்
இன்னமுதப்  பாற்கடலின்  இருநிதியே  பல்லாண்டு.

50.
சீருண்ட  திருமேனிச்  செவ்வாயான்  அன்றந்தப்
பாருண்டு  தாய்காணப்  பார்காட்டி  ஆட்கொண்டான்
நீருண்ட  முகிலனைய   நெடுமேனித்  திருமாலே
தாருண்ட  திருத்துழாய்  தாங்கியவா  பல்லாண்டு.

51.
அரியுருவாய்  இரணியனை  அன்றடர்த்த  நரசிங்கா
பொருதிரைகள்  தானுலவு  புல்லாணிக்  கரையுடையாய்
விரிதிரைசூழ்  இலங்கையர்கோன்  வேறுபட  வில்லெடுத்துப்
பொருதோளாய்  திருமலைவாழ்  புண்ணியனே  பல்லாண்டு.

52.  
செம்பொன்  மதில்சூழ்ந்த  தென்னிலங்கைக்  கோமானின்
பைம்பொன்  முடிதரைமேல்  படரவே  கணைதொடுத்த
நம்பியே  நற்றமிழ்சொல்  நம்மாழ்வார்க்(கு)  அருளியவா
உம்பர்புகழ்  கோவிந்தா உனக்கிங்கே  பல்லாண்டு.

53.  
கங்கைக்  கரைவேடன்  கடல்சூழ்ந்த  காரவுணன்
தங்குமலைக்  கவியரசன்  தமையெல்லாம்  உறவாக்கி
நங்கையாள்  சீதையுடன்  நடந்திட்ட  திருவடியாய்
பொங்குதுழாய்த்  தார்மார்பா  பொன்மலையாய்  பல்லாண்டு.

54.  
பெற்றங்கள்  மேய்த்திட்ட  பெருமானே  நின்னருளால்
சிற்றஞ்  சிறுகாலே  சேவித்தோர்  மனைகளிலே
பொற்றா  மரைமகள்பொன்  பொழியவே  அருளியவா
நற்றாயார்  தேவகியின்  நம்பியே  பல்லாண்டு.

55.  
தேனாரும்  சோலைத்  திருவேங்  கடமலையில்
கானாரும்  துளவக்  கடிபொழில்கள்  சூழ்ந்திலங்க
மீனாரும்  சுனைமலைமேல்  மின்னாழிப்  படையுடையாய்
ஊனிலே  கலந்திருக்கும்  உத்தமனே  பல்லாண்டு.

56.  
ஆளரியாய்த்  தோன்றியவா  ஐவருக்கு  நற்றுணைவா
கோளரியே  மாதவா  கோவிந்தா  மழைக்கண்ணா
தாளடியே  பற்றினோம்  தாமரைவாய்  குழலூத
நாளெல்லாம்  நிரைகாத்த  நாயகனே  பல்லாண்டு.

57.  
தென்புதுவைப்  பட்டன்  திருமகளின்  மலர்மாலை
என்புயத்துக்(கு)  உகந்ததென  ஏற்றணிந்த  திருமாலே
பொன்பயந்த இலக்குமியைப்  பூமார்பில்  சுமந்தவனே
மின்பொழியும்  சக்கரக்கை மேனியினாய்  பல்லாண்டு.

58.  
கொத்தாரும்  பூங்குழற்  கோதையாள்  நப்பின்னை
முத்தாரும்  மார்பம்  முயங்கியவா  பக்தியினால்
ஒத்தார்  அனைவருக்கும்  உதவும்  குணமுடைய
அத்தா  மலையப்பா  அழகனே   பல்லாண்டு.

59.  
நஞ்சுமிழும்  அரவின்மிசை  நடமாடும்  பெருமானே
செஞ்சுடர்சேர்  ஆழியொடு  சிறுசங்கம்  ஏந்தியவா
கஞ்சனது   வஞ்சம்  கடந்தவனே  ஆழ்வார்தம்
செஞ்சொற்  பொருளேநற்  சித்திரமே  பல்லாண்டு.

60.  
அண்டர்  தலைவாநல்  ஆயர்கள்தம்  குலக்கொழுந்தே
தொண்டர்  அடிப்பொடியார்  தூயதமிழ்ப்  பரகாலன்
கண்டும்மைச்  சேவிக்கக்  கைத்தலத்தில்  சங்கேந்திக்
கொண்டெம்மைக்  காக்கும்  குணநிதியே  பல்லாண்டு.                                  
 
61.
செவ்வாய்க்  குழல்கேட்ட  சிற்றிடைநல்  ஆய்ச்சியர்கள்
அவ்வாய்ச்  சுவைகண்ட  அழகுடைய  வெண்சங்கை
எவ்வாறு  இருந்ததென  எண்ணியொரு  வினாக்கேட்ட
கொவ்வையிதழ்  ஆண்டாளைக்  கூடியவா  பல்லாண்டு.

62.  
தாதெல்லாம்   தரைமலியத்  தண்தரைமேல்  நீர்நிறையக்
கோதிலாக்  குயிலினங்கள்  குழல்போல்  இசைபொழிய
மாதரசி  நப்பின்னை  மனத்துக்(கு)  உகந்தவனே
போதராய்  எம்மிடத்தே  பூவண்ணா  பல்லாண்டு.

63.
விண்ணாகிக்  காற்றாய்  விளங்கும்  அனலாகி
மண்ணாகி  எங்கும்  மலிபுனலாய்  ஆனவனே
உண்ணேரும்  ஆவியாய்  உகந்திருக்கும்  பெருமானே
கண்ணே  திருமலைவாழ்  கற்பகமே  பல்லாண்டு.

64.
வண்டாடும்  சோலை  வடவேங்  கடத்தானே
உண்டாய்நீ   மண்ணென்று  கோபித்த  உன்தாயும்
கண்டாள்  உலகனைத்தும்  காட்டுவாய்  உனதென்று
கொண்டாடித்  தொழுது நிதம்  கும்பிட்டோம்  பல்லாண்டு.

65.  
அவம்புரிந்து  வலியிழந்த  அரக்கர்கோன்  தன்னுடைய
தவம்அழித்து   நிறைவாணாள்  தனையழித்து  வைத்தபிரான்
பவமகலச்  சரணமலர்ப்  பாதங்கள்  காட்டுவாய்
உவணத்தாய்  வேங்கடவா  உத்தமனே  பல்லாண்டு

66.  
காலால்  சகடத்தின் கட்டழித்த  பெருமானே
வாலால்  அனல்வைத்த  வலியமகனாம்  அனுமன்
பாலருளைச்  சுரந்திட்ட  பரந்தாமா  மாவலியைக்
காலால்  அமிழ்த்தியவா  கருமணியே  பல்லாண்டு

67.  
சங்குடையாய்   கையிலொரு  சாரங்க  வில்லுடையாய்
கங்கைகமழ்  திருவடியாய்  கருடனாம்  கொடியுடையாய்
அங்குடையாய்  உன்முடிமேல்  அரவிருக்க  மங்கையொரு
பங்குடையான்  மைத்துனனுன்  பரமபதம்  பல்லாண்டு.

68.  
செஞ்சோதித்  தாமரைபோல்  சிவந்திருக்கும்  திருவடியை
நஞ்சூதும்  பாம்பணைமேல்  நங்கைதிரு  கால்வருட
மஞ்சூதும்   நன்மழைபோல்  மகிழ்ந்தருளைப்  பொழிந்துவரும்
எஞ்சோதி  வேங்கடவா  ஏழுமலை  பல்லாண்டு

69.  
கண்ணனே  நெடுமாலே  கவிங்குருகூர்ச்  சடகோபன்
அண்ணலே  தமிழ்மாலை  ஆயிரமாய்ப்  பாடிவைத்த
பண்ணாரும்  பாடலுக்குப்  பரமபதம்  அருளியவா
தண்ணார் கருமேனித்  தாமரையே  பல்லாண்டு.

70.  
மாமலராள்  நப்பின்னை  மணவாளா  திருவடியாம்
பூமலரைத்  தலையேற்றுப்  போற்றினோம்  நின்னுடைய
நாமங்கள்  ஓத  நலமளிக்கும் பெருமானே
கோமுதலாய்க்  கொண்டிட்ட  கோபாலா  பல்லாண்டு.

71.
பாகனைய  சொல்லாள்  பரிவுடைய  யசோதை
வாகாய்த்  தழுவியுனை  வளர்த்தநாள்   அசுரருக்கே
ஆகுலங்கள்  வேளைதொறும்  அருளியவா  அற்றைநாள்
கோகுலத்தைத்  தன்னிடமாய்க்  கொண்டவனே  பல்லாண்டு.

72.
மாறுபகை  நூற்றுவரை  மாமனொடு  அசுரர்களை
நீறுபடச்  செய்தவனே  நிலங்கீண்ட  பெருமானே
ஆறுதலைச்  சிவனாரின்  அன்பான  மைத்துனனே
ஏறுபுகழ்த்  திருப்பதிவாழ்  இனியவனே  பல்லாண்டு.

73.
மாயத்தால்  ஆய்ச்சியரை  மயக்கியவா  பாண்டவரைத்
தாயத்தால்  வென்றவர்கள்  தானழியத்  தேர்நடத்தி
வேயன்ன  தோளி  வியன்நங்கை  பாஞ்சாலி
தூய  குழல்முடிக்கத்  துணையானாய்  பல்லாண்டு.

74.
வார்புனல்சேர்  அருவிநீர்  வழிந்தோடச்  சூரியனார்
தேரேறி  வலங்கொண்ட  திருப்பதிவாழ்  பெருமானே
சீர்பூத்த  தாமரையாம்  சேவடிகள்  காப்பதெனப்
பேர்பாடி  வணங்குகிறோம்  பீடுடையாய்  பல்லாண்டு.

75.
சேலாரும்  கண்ணாள்நற்  சீதைக்காய்  மான்பின்னே
காலோய  ஓடியஎம்  காகுத்தா  மண்பொதிந்த
ஞாலத்தை  அன்றாண்ட  நாயகன்நீ  காப்பென்றே
ஓலமிட்டோம்  திருப்பதியாம்  ஊருடையாய்  பல்லாண்டு.

76.
திருவாலி  நாடன்  திருமங்கை  மன்னன்சொல்
திருமொழிக்கு  மயங்கியவா  திருவாழி  சங்கமுடன்
அருளாழிக்  கடலாகி  அலர்மேலுத்  தாயாரை
ஒருமார்பில்  வைத்திட்ட  உடையவனே  பல்லாண்டு.

77
பூரத்தில்  உதித்தாளை  புகழ்பாவை  நூலோதிக்
காரொத்த  மேனிதிருக்  கண்ணனையே  அடை ந்தாளைத்
தார்சூட்டித்  தந்தவளைத்  தன்னிடத்தில்  கொண்டவனே
பேரரங்கம்  உடையதொரு பெரியவனே  பல்லாண்டு.

78.
தேன்மலர்சேர்  காவிரிசூழ்  தென்னரங்கா  பக்திகொண்ட
பான்மையினால்  யதிராஜர்  பரவிடவே  அருளியவா
மேன்மையால்  நின்னடியை  மேலாக  எண்ணியவர்
வானாடு  பெறவைத்த  வள்ளலே  பல்லாண்டு.

79.
பூந்துழாய்   மார்புடைய  புண்ணியனே  பொன்னாழி
ஏந்துகரம்  உடையவனே  இனியபத்  மாவதியின்
பூந்துகில்மேல்  மனம்வைத்த  போரேறே  மலையப்பா
நா தகவாள்  ஏந்தியநல்  நாயகனே  பல்லாண்டு.

80.
தீதுடைய  கெளரவர்கள்   தீரமிக்க  பாண்டவரைச்
சூதாலே  வென்றவரைச்  சூழ்ச்சியால்  கான்போக்கத்
தூதாய்  நடந்தவர்க்குத்  துணையான  வேங்கடவா
பாதமலர்  தலைவைத்துப் பணிகின்றோம்  பல்லாண்டு.
   
81.
கொல்வித்த  பூதகியைக்  கொல்வித்தாய்  தூதுநீ
சொல்லவந்த  போதன்று  சூழ்ச்சிபல  செய்தார்க்கே
நல்லவழி  காட்டநீ  நல்லபெரு  வடிவெடுத்தாய்
மல்லார்தோள்  திருமலைவாழ்  மலையப்பா  பல்லாண்டு.

82.  
வானளந்த  காலுடையாய்  வார்கடல்போல்  நிறமுடையாய்
கானளந்த  நறுந்துளவக் கவின்மணக்கும் தோளுடையாய்
மீனளந்த  கண்ணுடையாள்  மேலான  அலர்மேலு
தானிருக்கும்  மார்பனே  தாயனையாய்  பல்லாண்டு.

83.  
அவரவர்க்கே  உரியதனை  அளந்தளிக்கும்  பெருமானே
எவர்வரினும்  அவர்பக்தி  இங்குண்மை  ஆனாலோ
உவப்புடனே  அவர்மனத்தின்  உட்பொருளாய்  இருப்பவனே
தவமிக்க  திருப்பதிவாழ்  தனித்தேவே  பல்லாண்டு.

84.  
திருக்கோட்டி  யூர்நம்பி  திகழ்யமுனைத்  துறைவனார்
திருக்கோட்டும்  பெரும்புதூர்த்  திருமகனார்  எதிராசர்
அருட்கோவில்   கொண்டிருக்கும்  அழகதனைக்  காணவைத்தாய்
உருக்காட்டி  வேங்கடத்தில்  உறைபவனே  பல்லாண்டு.

85.  
மதிஇரவி  உடுக்களுடன்  மற்றுமுள்ள  கோள்களுக்கும்
அதிபதிநீ   அல்லாண்ட  மேனியனே  அழகுபத்மா
வதிபதிநீ  அசோதை  வளர்மதலாய்  பரமபதப்
பதிபுரக்கும்  திருமலையே  பரந்தாமா  பல்லாண்டு.

86.  
அதிர்கின்ற  கடல்வண்ணா  அசோதை  மடியிருந்து
மதுரமுலை  அமுதுண்டு  மருதொசித்த  பெருமானே
உதரத்தில்  நான்முகனைத்  தாமரைமேல்  உதிக்கவைத்த
கதிர்முடிசேர்  வேங்கடவா  கருமுகிலே  பல்லாண்டு.

87.  
பங்கயங்கள்  வாய்நெகிழ்ந்து  பனித்துளிபோல்  தேன்சொரியக்
கொங்குண்ணும்  வண்டினங்கள்  குடித்துன்றன்  புகழ்பாட
மங்கை  அலர்மேலு  மகிழ்ந்தணைக்கும  மணவாளா
சங்கேந்தும்  வேங்கடவா  சக்கரமால்  பல்லாண்டு.

88.  
கொத்தார்  குழல்பின்னை  கோவலனே  என்றுன்னை
எத்தாலும்  சேவித்தாள்  இதயத்தில்  உனைவைத்தாள்
நத்தார்  புனலரவில்  நடனமிட்ட  நாரணனே
வித்தாய்  இருக்கின்ற  வேங்கடவா  பல்லாண்டு.

89.  
செங்கைத்  தலத்தாலே  சிறீதரா  நீயன்று
துங்கப்  பரிபொருந்தும்  தூய்தொரு  தேர்நடத்தி
மங்கையாள்  பாஞ்சாலி  மனச்சபதம்  நிறைவேற்றி
எங்களையும்  காத்துவரும்  ஏழுமலை  பல்லாண்டு.

90.    
இரவனைய  நிறமுடையாய்  ஏறேழும்  தழுவியவா
அரவணையாய்  கோபாலா  அசுரர்களின்  கூற்றுவனே
உரவுடைய  தோளாய்  உததியிலே  கண்வளரும்
கரவறியா  வேங்கடவா  கைகுவித்தோம்  பல்லாண்டு.

91    
படஅரவில்.  துயில்கொள்ளும்  பாற்கடலாய்  சீனிவாசா
மடவரலாம்  பாஞ்சாலி  மானத்தைக்  காத்தவனே
உடையவரும்  ஆழ்வாரும்  உவந்துபணி  வேங்கடத்தை
இடமாக  உடையவனே  ஈடில்லாய்  பல்லாண்டு.

92.  
இனியவனே  திருமகளுக்(கு)  ஏற்றதுணை  ஆனவனே
கனிசபரி  தரவுண்ட  காகுத்தா  கைவில்லி
உனைவெல்ல  வருமவுணர் உயிர்வாங்கி  வீடளித்த
பனித்துளவ முடியுடையாய்  வேங்கடவா  பல்லாண்டு.

93.  
ஏர்வளரும்  சோலை  இருந்தழகு செய்துவரப்
பார்வளரும்  மாந்தர்  பலர்வந்து  பணியுமொரு
சீர்கொண்ட   வேங்கடவா  சிலைமலர்ந்த  தோளுடையாய்
கார்கொண்ட  மேனிக்  கடவுள்மால்  பல்லாண்டு.

94.  
திருநெடுமாற்(கு)  அடிமையெனத்  தினம்பணியும்  அடியார்கள்
கருமாலே  மணிவண்ணா  கடல்கடைந்த  மாயவனே
பெருமாளே  மோகினியாய்ப்  பேரமுதம்  பங்கிட்ட
திருமாலே  வேங்கடவா  தெண்டனிட்டோம்  பல்லாண்டு.

95.  
புள்ளின்வாய்  கீண்டோனே  பூதங்கள்  ஐந்தானாய்
கள்ளச்  சகடத்தைக்  காலால்  உதைத்தழித்தாய்
வெள்ளம்போல்  வருமவுணர்  வீயநீ   அம்பெய்தாய்
 உள்ளத்தில்  வேங்கடவா  ஒளியானாய்  பல்லாண்டு.

96.  
கோதை  மணவாளா  கோவலனாய்ப்  பிறந்தவனே
சீதை  திருக்கேள்வா  சிறையெடுத்த  இராவணனால்
வாதையுற்ற  தேவர்களை வாழவைத்த  நாயகனே
தீதகற்றும்  வேங்கடவா  தேன்த்மிழால் பல்லாண்டு

97.
முடியார்   திருமலையின் முதற்பொருளே  முன்பணியும்
அடியார்  படுதுயரம்  அழித்தருளும்  பெருமானே
செடியான  வல்வினைகள்  சேர்த்தழிக்கும்  உயர்கருடக்
கொடியானே  வேங்கடவா   நெடுமாலே  பல்லாண்டு.

98.
தீதுரைத்த  கெளரவர்கள்  தீமைசெயப்  பாண்டவர்க்காய்த்
தூதுரைத்த  கேசவனே  துளவநறுந்  தாருடையாய்
மாதுரைத்த  சொல்லுக்காய்  மாநகரம்  நீங்கியவா
தீதறுக்கும்  வேங்கடவா  திருமலையே  பல்லாண்டு.

99.
கோட்டானைக்  கொம்பொடித்தாய்  குதிரையினை  அடக்கிவைத்தாய்
தாட்டா   மரையாலே  காளிங்கன்  தலைமிதித்தாய்
மாட்டாத  இராவணனை  மண்ணிலே  விழச்செய்தாய்
தேட்டாளா  வேங்கடவா  திருமலையே  பல்லாண்டு.
                                     
100.
வில்லாண்ட  தோளாய்  வியந்துளவத்  தாருடையாய்
எல்லாண்ட  மேனி   இனியதிரு  வேங்கடவா
கல்லாண்ட  மனத்தைக்  கரைத்துநீ  காத்தருள்க
சொல்லாண்ட  செந்தமிழால்  சொல்லிவைத்தேன்  பல்லாண்டு.

நிறைவுற்றது !!
   
                                                                                               

மின்தமிழ் மேடைக்கு வருக!

மின்தமிழ் உறுப்பினர்களின் புத்தம் புதிய படைப்புக்கள் பதிவாக்கப்பட இந்த புதிய வலைப்பூ பூத்துள்ளது.

அன்புடன்
சுபா