அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்காளர் கையேடுகளில் தமிழ்!!!!
-- முனைவர் தேமொழி
தமிழ் மொழியில் அறிக்கைகளும் அறிவிப்புகளும் வேண்டும் என்று இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் அமெரிக்காவிலோ இதற்கு நேர் எதிர்நிலை. அதிபர் டிரம்ப்பும் ஜோ பைடனும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட நவம்பர் 3, 2020 - அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தின் வாக்காளர்களுக்கு விளக்கக் கையேடுகளை அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள்.
ஆங்கிலம், ஸ்பானிஷ், சீனா மொழிகளில் விளக்கக் கையேடுகளை அச்சிட்டு அனுப்பியிருந்தாலும், தமிழோ அல்லது பிற மொழிகளிலோ மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட வாக்காளர் கையேடு தேவை என்றால் அனுப்ப உதவுவதாகக் குறிப்பும் அச்சிட்டு அனுப்பியுள்ளார்கள்.
அமெரிக்காவைப் பார்த்து என்னென்னவோ கற்றுக் கொள்ள விரும்புகிறோம். மக்களின் தேவையை மதிக்கும் முறையை இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் ஏன் கற்றுக் கொள்ளக் கூடாது என்ற ஏக்கம் மேலிடுகிறது.
குறிப்பு: முனைவர் தேமொழி, கலிபோர்னியா மாநிலத்தில் வாழும் ஒரு தமிழர்
----
No comments:
Post a Comment