Wednesday, January 9, 2019

கொழுக்கட்டை கொட்டும் சடங்கு


—    வலன்ரீனா இளங்கோவன்


யாழ்ப்பாணத்து சைவத்தழிழ்  வழக்காற்றில்  முக்கிய பங்கு வகிப்பவை சடங்குகள். இத்தகைய  வாழ்வியல் சடங்குகளில்   சிறப்பு  பெறுவது  "கொழுக்கட்டை   கொட்டும் சடங்கு."  ஒரு குழந்தை  பிறந்தது முதல் பல சடங்குகள்  நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில்  குழந்தைக்கு  பல் முளைத்ததும், பல்கலைக் கண்ட அன்றையதினமோ  அல்லது மறுதினமோ இச்சடங்கு நிகழ்த்தப்படும்.



பல்லுக்கொழுக்கட்டையை அவித்து    தேங்காய் சொட்டில்  பற்கள் போலவெட்டி  கொழுக்கட்டையில் பதிப்பர்.   தாய்மாமன் அல்லது தந்தை  குழந்தையைச்  சுளகில் இருத்தி குழந்தையின் தலையில் வெள்ளைத்துணியைப் போட்டு, கொழுக்கட்டை, கொப்பி, பென்சில், பூக்கள், ரொபிகள் என்பவற்றைச் சுளகு அல்லது  தட்டில் வைத்து  பிள்ளையின்  தலைமீது கொட்டுவர். குழந்தை எப்பொருளை  விரும்பி எடுக்கிறதோ   அதையே பிள்ளை வளர்ந்ததும் விரும்பும் என்ற ஐதீகம் இன்றுவரை காணப்படுகிறது.  இதனை யாழ்ப்பாணத்தில்  கொழுக்கட்டை கொட்டும் சடங்கு என்பர். இச் சடங்கு இன்றும் நிகழ்த்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




தொடர்பு:
திருமதி.வலன்ரீனா இளங்கோவன் (valanteenaelangovan@gmail.com)

No comments:

Post a Comment