—— துரை.சுந்தரம்
கோகர்ணம் சிவன் கோயில் கல்வெட்டு, புதுக்கோட்டை
கல்வெட்டின் பாடம்:
1 (ஸ்வஸ்தி)ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ (இரா)...
2 தேவற்கு யாண்டு ... தோரை சமுத்தி(ர)...
3 போசள வீர சீ நாரசிங்க தேவர் மகன் ..
4 (ச்வர) தேவர் மாதா சேர மஹா தேவி ...
5 ள்ளைகளில் (வீர)ச் சயனமாதா .... யிக்கு..
6 ....இதேவற்கும் நன்றாகத் ....
7 டையார் திருக்கோகர்ணம் உடைய ..
8 (தே)வர்க்கு முன்பு நித்தற்... (வருகிற)..
9 தா விளக்குச் செல்லவும் உத்தர...
10 (த்து முதற்தியதி) முதல் ....
11 நாள் ஒன்றுக்கு இரு நாழி ...
12 மஞ்செல்லக்கடவதாக இவ்வூர்ச்
13 கொண்டு விட்ட நிலம் ஆக ..
14 (நா)ன்கெல்லை உள்பட்ட நிலத்தில்..
15 ....ச் செம்பாதியும் புன்செய் ...
16 ....செம்பாதிக்கும் வி(லை)...
17 ...இக்கோயிற் சபையார் ...
18 ..ண்டுச் சந்திராதித்தவற் செல்ல...
19 (இ)த்தன்மம் .......
20 (ற)லை மேலன.
குறிப்பு: திருக்கோகர்ணம் கோயில் இறைவனின் திரு முன்பு அதாவது கருவறையிலேயே நந்தா விளக்கு எரிக்க நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கொடைத் தன்மம் ஹொய்சள அரசன் சோமேசுவரனின் நன்மைக்காகவும், அவனுடைய அன்னை சேர மஹா தேவியின் நன்மைக்காகவும் நிறைவேற்றப்பட்டது எனலாம். ஹ<->ப மாற்றம் தமிழ், கன்னட மொழிகளில் இயல்பு என்பது இக்கல்வெட்டில் “போசள” என்னும் சொல் வழி அறிகிறோம்.
போசளரின் தலை நகர் துவார சமுத்திரம் இக்கல்வெட்டில் தோரை சமுத்திரம் எனக்குறிப்பிடப்படுகிறது. இறைவன் பெயர் திருக்கோகர்ணமுடைய (நாயனார்) என்றழைக்கப்படுகிறார். கொடை நிலம் நன்செய், புன்செய் இரண்டும் சேர்ந்த நிலம் ஆகலாம். இந்த தன்மத்தைக் காக்கின்றவர் பாதம் என் தலை மேலன என்று கொடையாளி சொல்லும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு.
நன்றி- படம் உதவி: மயிலை நூ.தா.லோ.சு.
தொடர்பு: துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.
No comments:
Post a Comment