--கோ.லீலா
கொத்துமல்லி கறிவேப்பிலை
மணக்கும் புதினா
பூண்டோடு வெங்காயம்
சிறியதும் பெரியதும்
நாட்டு தக்காளி
முட்டையும் ரொட்டியும்
அவசியமாய் இஞ்சி
கூடவே எலுமிச்சை
பல பழ வகைகள் கேட்டு
பாலோடு வெண்ணெய்
திரளான நெய் பார்த்து
நாட்டு சர்க்கரை உப்பு
சுக்கு மசாலா வகையோடு
குறைவில்லா பருப்பு வகை
பட்டை இலவங்கம் ஏலக்காய்
ரோஜா மொக்கு கடல்பாசி
மங்களூர் மொக்கும் இருக்கு
சமையலறை மணக்க
வத்தல் வடக வகைகள்
முந்திரி திராட்சை பாதாம்
பச்சரிசி பாசுமதி
விக்கிரவாண்டி அரிசி
பதப்பட்ட பட்டாணி கொண்டக்கடலை
நிலக்கடலை கடலை வகை
பச்சையும் சிவப்புமாய்
வகையாய் காய்கறிகள்
மருந்து தைலம் நாப்கின் இருக்கா
தேடிப்பார்த்து வாங்கியாச்சு
ஒரு வாரத்துக்கு யாரையும்
கூப்பிட முடியாது தண்ணீரை
பூ தோட்டத்திலேயே பூக்குது
சுமை கொஞ்சம் குறைச்சாச்சு ...
அடடா !
பற்றில்லா மனசு இதுவா?
தந்திரமாய் எல்லாம் முடித்து
சாவகாசமாய் யோசிக்கிறது
மானங்கெட்ட மனசு
என்ன செய்வார்கள்
-கோ.லீலா
No comments:
Post a Comment