தொழிலாளி வர்க்கமும் தொழிற்சங்கமும்
—— குமரேசன்
தொழிலாளர்கள் தங்களின் உரிமைகள், நலன்கள், தேவைகளுக்காகத் திரள்கிற போராட்ட உணர்வு பெறுவது முக்கியம். அதைவிட முக்கியம் வர்க்க உணர்வு பெறுவது. அந்த வர்க்க உணர்வு ஏற்பட்டுவிடாமல் உடனடிக் கோரிக்கைகளோடு அவர்களை நிறுத்துகிற உத்தியை நிறுவன நிர்வாகங்களும் முதலாளித்துவ அரசுகளும் காலங்காலமாய்ச் செய்துவருகின்றன. அந்தத்தந்தத் தொழிற்சாலைக்கு ஒரு சங்கம்தான் இருக்க வேண்டும், வெளியிலிருந்து பொதுவான சங்கங்கள் வரக்கூடாது என்ற கருத்துகளெல்லாம் இந்த உத்தியிலிருந்து வருபவைதான்.
தொழிற்சங்கங்களில் கூட இதைப் பார்க்க முடியும். வர்க்கப் போராட்டமே இறுதித் தீர்வு என்று சமூக அறிவியலாகவும் அரசியல் சித்தாந்தமாகவும் ஏற்றுள்ள சங்கங்கள் தவிர்த்து, நிர்வாகங்களுக்குத் தோதாகவும், சாதியாகவும், தனிமனித செல்வாக்கு அடிப்படையிலும் அமைக்கப்பட்டுள்ள சங்கங்கள் இதைத்தான் செய்கின்றன கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்லாது, சமூக மாற்றத்தை லட்சியமாகக் கொண்ட கட்சிகள் அல்லாத பல அரசியல் கட்சிகள் நடத்துகிற சங்கங்களும் இதே கைங்கரியத்தைத்தான் செய்கின்றன.
இந்தியாவில் வர்க்க உணர்வைக் கட்டுவது என்பது, கூலி உயர்வு, வேலை நேரம், பணித்தல வசதிகள் போன்றவற்றைப் பெறுவதற்கான கோரிக்கைகளைத் தாண்டி சாதியத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் ஒழிப்பதற்கான நெடும் போராட்டத்தை, அடிப்படையான சமுதாய மாற்றத்தை நிறுவுவதற்கான பயணத்தையும் இணைத்து மேற்கொள்கிறபோதுதான் சாத்தியமாகும்.
[தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு (மே 1), திராவிடர் கழக வழிகாட்டலில் இயங்கும் புதுமை இலக்கியத் தென்றல் (மே 3) ஆகிய இரண்டு குழுக்களும் இணையத்தளத்தில் நடத்திய மே தின உரை நிகழ்ச்சிகளில் நான் பேசியதன் நிறைவுப்பகுதி-குமரேசன்.]
தொழிலாளி வர்க்கமும் தொழிற்சங்கமும்
- மூத்த பத்திரிகையாளர் தோழர் அ. குமரேசன்
யூடியூப் காணொளியாக ..
https://youtu.be/vl5MR-imZU8
No comments:
Post a Comment