— மலையாண்
கோடை வன்வெயிலில் வீசுநிழல் கொடாதென்
எந்தப் பயனு மில்லையென எண்ணி
வந்திப்போரே சிந்திப்பீரோ தென்னை பயன்?
தாகம் மட்டுமா தீர்க்கும் இவ்விளநீர்,
பாடல் மூலம் சொல்கின்றேன் அதன்பயன் .
வங்கிக் கணக்கில் வைத்த செல்வம்போல்
உயிர்காத்த நீரது; பலரும் அறியாமெய்யது ...
குருதியில் நேரடியாய் செலுத்தினர் இளநீரை!
நிறமது மங்கல மஞ்செறி வாய்நின்றால்
துப்பாய் நிற்கும் இளநீர் அதைநாம்
துச்சமாய் எண்ணா திருப்போமே .
கணினி முன்னமர்ந்து வேலைசெயும் நண்பா,
கணிசமாய் எடைமிகுந்து அல்லல்பட; நடைபயிற்சியுடன்
ஒருவேளை உணவாய் இளநீரதை அருந்தினால்
ஓடிவிடும் மிகுஎடை நிச்சயமே.
மிகுந்த குருதியழுத்ததை குறைக்கும்; உடல்
மினுமினுப்பு கூட பளபளப்பு கொடுக்க பெண்டிர்
மிகவும் விரும்பி அருந்துவர் இளநீரன்றோ!
நஞ்செனும் மதுவை நலங்கெட் டிரவில்
மஞ்சம் கொளாது அருந்திய மாக்களவர்
இளநீர் அருந்த மக்களாய் தெளிய
நயமாய் சொல்லும் புத்திமதி அவர்கேட்பர்
செரிக்கும் அமிலம் வயிற்றில் மிகுவாய்
நெரிக்கும் வலியதை மடற்றே கொல்லும்
நாள் தோரு மிளநீரை அவரருந்த கெட்ட
கல்லீரல் தானது குணமாகும்.
தொடர்பு: மலையாண் - சாய் கிரிதர் (saigiridhar.iyer@gmail.com)
No comments:
Post a Comment