— ப்ரீத்தி ராஜகோபால்
பேசும் வார்த்தைகளில் அவதானமாய் இருங்கள்
வீசும் கற்களை விடப் பேசும் வார்த்தைக்கு
வலிமை அதிகம்
நரம்பில்லா நாக்கில் பிறழும் வார்த்தைகள்
ஆலகால விஷத்தை விடக் கொடியது
உயிரோடு கொல்லும்
பல வர்ணங்கள் பூசப்பட்ட பேச்சுக்கள் நம் முகத்திற்கு முன்
முதுகை காட்டி திரும்பினால் சாயம் போன புடவை போல்
உண்மை உருவம் வெளிப்படுகிறது
யோசிக்க மறந்து பேசிய வார்த்தைகள்
மாறாத வடுவாய் என்றும் நெஞ்சில்
மறந்தும் மயங்கிவிடாதே புழச்சிக்கு
ஒற்றை சொல் போதும் உறவு அறுந்துவிடும்
ஓராயிரம் முறை மண்டியிட்டாலும்
ஒட்டவைக்க இயலாது அறுத்த உறவை
தொடர்பு: ப்ரீத்தி ராஜகோபால் (rajagopalpreethi04@gmail.com)
No comments:
Post a Comment