-- கி. ரமேஷ்
வந்தனா உனக்கு வந்தனம்
போட்டியில் வெல்லலாம்
வெல்லாமல் போகலாம்!
இந்திய மக்கள் மனம் வென்றீர்
தோழியரே!
போராடித் தோற்றாலும்
மிகுந்த புகழ் உமக்குண்டு!
ஆட்டத்தில் தோற்றால்
ஆதிக்க மனம் ஆடுகையில்
வீழமாட்டோமென
வீறு கொண்டெழுந்தோரே!
ஆடிய தலைகளின்
ஆணவம் அழிந்தொழிய
மூன்று கோல்களை
முந்திப் போட்டாய் நீ
வந்தனா கட்டாரியா
எம் வந்தனம் உனக்கு!
வலிமைமிகு பிரிட்டன்
போட்டியில் வென்றாலும்
போராடித் தோற்ற தோழியரை
கொண்டாடுது இந்திய தேசம்
பாராட்டி மகிழ்ந்தது
பிரிட்டிஷ் நாடு
தலைநிமிர்ந்து திரும்புவீர்!
தலையில் வைத்துக் கூத்தாட
காத்திருக்கிறோம் நாங்கள்!
வாழ்க எம் மகள்களே!
இந்திய நாட்டின் பெருமைகளே!
புகழ் மேல் புகழ் பெறுவீர்!
--கி.ரமேஷ்
வந்தனா கட்டாரியா
ஒலிம்பிக்ஸில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் மற்றும் ஒரே இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா. அவருடைய ஆட்டத் திறமையால் இந்தியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்திற்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
No comments:
Post a Comment