வயலூர் கல்வெட்டு காட்டும் தமிழ்ப் பற்று மிக்க கோப்பெருஞ்சிங்கன்
ச.பாலமுருகன்
தமிழைப் போற்றிய பல மன்னருள் சிறப்புப்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் என்ற பிற்காலப் பல்லவர் அரசராவான். அவனுடைய புகழையும் மாட்சியையும் தமிழ்மீதான பற்றினையும் சோழனை வென்று சிறைபிடித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல்களையும் ஒருங்கே பெற்ற ஒரு கல்வெட்டு, சேத்துப்பட்டு அருகே வயலூர் என்ற குக்கிராமத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கல்வெட்டு ஏற்கனவே இந்தியத் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டு எப்பிகிராபி யா இந்தியா மடலம் 23 இல் வேங்கடசுப்பையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் மீண்டும் ஒரு முறை படியெடுத்து காட்சிக்கு வைத்தது. தற்போது அதன் புகைப்படமும் கல்வெட்டுப் பாடமும் "யாதும் ஊரே.காம்"தளத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது.
இக்கல்வெட்டின் சிறப்பாகக் கருதுவது கோப்பெருஞ்சிங்கனின் தமிழ் ஆர்வமும் இக்கல்வெட்டு 3 வகை பா வகையினால் அமைந்துள்ளதும் ஆகும். இக்கல்வெட்டு பன்னிருசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும், நேரிசை வெண்பாவிலும், கலிவிருத்தத்திலும் , எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வெட்டு:
மாவட்டம் : திருவண்ணாமலை
வட்டம் : சேத்துப்பட்டு
கிராமம் : வயலூர்
இடம் : தெற்குப் பகுதியில் உள்ள சிறிய குன்றின் நீர்நிலைக்கு அருகில்.
காலம் : 13 ஆம் நூற்றாண்டு
அரசன் : கோப்பெருஞ்சிங்கன்
ஆட்சி : பிற்காலப் பல்லவர் – காடவராயர்
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
பதிப்பு : இ.க.ஆ. 418/1922 , எ.இ. எண் 27, பக்கம் 174.
குறிப்பு:
தெள்ளாற்றில் சோழனிடம் போரிட்டு வென்று சிறையிட்டு, சோணாடு கொண்ட அழகிய சிங்கன், பொன்னிநாடனும் கண்ணி, காவிரி, பாகீரதி நதிகள் பாயும் நாடனும் அவணி நாராயணன், செந்தமிழ்க் காவலன், தொண்டை மன்னவர், மல்லை வேந்தர், என பலவாறு புகழ்ந்தும் அவனது வெற்றியும் வலிமையையும் போற்றும் பாடல் கல்வெட்டு.
கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவத்தி ஸ்ரீகோப்பெருங்சிங்க சோழனை தள்ளாற்றில்
வென்று சகல பரிச்சினமும் கொண்டு சோழனை சிறையிட்டு வைத்து சோணாடு கொண்ட
அழகியசிங்கன் பொன்னி நாடனும் முரிமையும் அமைச்சரும் இருபத்துன் சிறைகோட்டம் பொருப்பி
ண்டென வளர்ந்த தோள்வலியினர் கொண்டது சோணாடு கண்ணி காவிரி பாகிரது நின்பரியாடு தன்துறை வாவி
காவல் மன்னவர் திரையுடன் வணங்குவது உன் பெருங்திருவசால் வென்னிட பொர்கன்ன வெள்ளிடப்
பொருதூதுங் பெருங்சேனை விலங்கு செம்பொனின் அம்பலக்கூத்து நீ விரும்பிய தேவாரம் பின்னக்வால்
அவனிநாரயண பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கனின் பெருமை யார் புகழ்வாரே.
திரையிட்ருமின்கள் தேவ வேந்தர்செம்பொன் திறையிட்ட பூம்புகார்ச் சோழன் சிறைகிடந்த கொட்டந்தனை நினை
மின் கோப்பெருங்சிங்கன் கமல நாட்டன் கடை சிவந்த நாள் . மில்வன் கொடி இடை வேந்தர் மார்பினன் தோளிது
ன் திட்டிய தொண்டை மன்னவர் வாலில் வென்றிடு சிறைவளவன் துஞ்சிய நாலினும் பெரியதுன் நாளெனப் புறம்பே
அரை கடலின் இசையுடனே ஆண்டார் வெயினும் பல்லிசை சேவிகவர அந்தி மாலை நிறைமதியி நிலவென்று நெருப்புப் பட்
டால் நீரிலை நின்றவோ நிருபதுங்க பிறை பொருத்த கன மகர இம்புரி வங்கோட்டுப் பெருங்கல்லிறு சோழனையும் அம
ச்சரையும் பிடித்து சிறையில்லிட்ட கல்லிரு விடமிதன் சிய திரிபுவன நாட்டராசங்கள் தம்பிரானே ஒரு நாளும் விடியா
த நெடிய கங்குலியேன நிண்டு வர உலகிற் புங்கன் மருமலை யிடுமுன்னே வந்தென்றால் மடந்தை யிவ்வாற்றுவான்
மல்லை வேந்தே பொருமலை முடியரசர் கன்னிமாதர் பொற்றிசையும் புவனமுமுதுடையார்தாமும் திருமாதும் புணர்
புயத்து மிண்டான் சியத் திரிபுவன நாட்டிராசாக்கல் தம்பிரானே.. இது சொக்க சீயன் ஆணை
நன்றி- திரு. சேது, முனைவர் ரா.சேகர், முனைவர் ராசவேலு
source:
http://www.yaadhumooray.com/ வயலூர்-கல்வெட்டு/
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்
(Tiruvannamalai District Centre for Historical Research) (Reg.No. 163/2017)
தொடர்புக்கு- mail: tvmchr@gmail.com, contact : 9047578421
----
No comments:
Post a Comment