இலந்தை முள் கோட்டை
—— வே.கி. சிவகுமார்
சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு காட்டப்படும் ஒரு கோட்டை!!!
ஆதியில் ஜெகன் மாதா ஜெயதுர்கா என்றழைக்கப்பட்ட அன்னையின் அம்சமாகக் கருதப்படும் ஆதிசக்க தேவியின் திருக்கோவில் அமைந்த இடங்களில் அந்நியர் நடமாட்டங்களைக் குறைக்கவும் சில நேரங்களில் மனித நடமாட்டமே இல்லாமல் அவ்விடங்களின் புனிதங்கள் களங்கப்படாமல் இவ்வித இலந்தை முள் கூடாரங்கள் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் வாழும் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்களின் ஆதிகுலதெய்வமாக வழிபடும் சக்கதேவியின் ஆலயங்களைச் சுற்றி இவ்வகையிலான முள்கோட்டைகளை அமைத்து வழிபடுகின்றனர்
குறிப்பிட்ட நாள் இடை வெளியில் மீண்டும் புனரமைக்கப்படும் இத்தகைய முள்கோட்டைகளில் தவறாது வீட்டிற்கு ஓர் ஆண்மகன் கலந்துகொள்ளவேண்டும் என்ற சட்டதிட்டங்களையும் சில சம்பிரதாய நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.
முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திக் கடனாகக் கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள்.
தொடர்பு: வே.கி. சிவகுமார் (Siva19732001@gmail.com)
No comments:
Post a Comment