Monday, April 29, 2019

தமிழகத்தின் பெருந்தச்சர்கள்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்

          தகுதிகள் வாய்ந்தவர்களால் மட்டுமே பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நிலைத்து இருக்கும் கோயில்களையும், கோயில் படிமங்களையும், சிற்பங்களையும் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் சிற்பிகளுக்கும், பெருந் தச்சர்களுக்கும் பட்டப் பெயர்களையும், அவர்களின் உருவச் சிலைகளையும் அக்கோயிலிலேயே ஏற்படுத்தி பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்களில்;
1.  தஞ்சை பெருவுடையார் கோயிலில் குஞ்சர மல்லன் இராசராச பெருந்தச்சன் உருவச் சிலை உள்ளது.
2.  உத்திரமேரூர் விமானத்தை நிர்மாணித்தவர் பரமேஸ்வரா பெருந்தச்சன்.
3.  மாமல்ல சிற்பத்தை உருவாக்கியவர் கேவாத பெருந்தச்சன் என்று கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது.
4.  கோனேரி ராசபுரம் கோயிலின் கற்றளி செய்தவரின் உருவமும், அவர் பெயரும் கருவறை சுவரில் ஸ்வஸ்திஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழரை திருவயிறு  வாய்ந்த உடைய பிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலந்தூர்  உடையான சாத்தன் குண்டப்பன் ஆன அரசரான சேகரன். இவன் பட்டம் கட்டிய பெயர் இராசகேசரி மூவேந்தர் வேளான் எனக் கல்வெட்டு செய்தியும் உள்ளது.
5.  தில்லையின் வடக்கு மற்றும் கீழைக் கோபுர வாயிலில் கோபுரங்களை எடுப்பித்த 4 பேர்களின் உருவச்சிலைகள் அவர்களுடைய பெயர்களுடன் உள்ளது.
1.  சேவக பெருமாள்
2.  சேவகப் பெருமாளின் மகன் விசுவ முத்து
3.  இவனது  தம்பி காரண காரி
4.  திரை கொடை ஆசாரி திருமருகன் 

என்ற கல்வெட்டுச் செய்தியுடன் இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் சிற்ப விருத்தி, சில்பின் காணி என்று அழைக்கப்பட்ட செய்திகளும் இங்கு கல்வெட்டு செய்தியாக உள்ளது.

 மேலும் சங்க இலக்கியங்களில் சிற்பிகளை நூலறி புலவர் என்றும் கோயில் கட்டடக்கலை நிபுணர்களைத் தெய்வ தச்சர் என்றும் குறிப்பிடுகிறது.

சிற்பி ஆனவர் சிற்பத்தை வடிக்கும் முன் செய்பவை: 
முதலில் தியானத்தில் அமர்வார். பிரார்த்தனை மூலம் சமாதி நிலையை அடைவார்.
 சுயத்தை ஆத்மனை  அறியும் நிலை  ஏற்படும்போது சிற்ப வடிவம் அவருக்குப் புலனாகும். அவ்வாறு புலனான வடிவத்தை அவர் பரம்பொருளில் வடிப்பார் அல்லது தியான ஸ்லோகத்தை மனதில் நிறுத்தி ஆத்மாவில் புலப்படும் வடிவத்தை வடிப்பார்.

சான்றாதாரங்கள்:
‘சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்’, குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக் கழகம் , 1987, பக்கம் 422-423.
மற்றும் சிற்ப சாஸ்திர நூல்கள்

தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை. 
https://www.facebook.com/devipharm

3 comments:

  1. அனைத்திலும் மல்லன் ..மல்லர் விடுபட்டு உள்ளது.

    ReplyDelete
  2. உத்திரமேரூர் விமானத்தை நிர்மாணித்தவர் பரமேஸ்வரா பெருந்தச்சன்.
    3. மாமல்ல சிற்பத்தை உருவாக்கியவர் கேவாத பெருந்தச்சன் என்று கல்வெட்டு செய்தி குறிப்பிடுகிறது.
    4. கோனேரி ராசபுரம் கோயிலின் கற்றளி செய்தவரின் உருவமும், அவர் பெயரும் கருவறை சுவரில் ஸ்வஸ்திஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழரை திருவயிறு வாய்ந்த உடைய பிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலந்தூர் உடையான சாத்தன் குண்டப்பன் ஆன அரசரான சேகரன். இவன் பட்டம் கட்டிய பெயர் இராசகேசரி மூவேந்தர் வேளான் எனக் கல்வெட்டு செய்தியும் உள்ளது.
    5. தில்லையின் வடக்கு மற்றும் கீழைக் கோபுர வாயிலில் கோபுரங்களை எடுப்பித்த 4 பேர்களின் உருவச்சிலைகள் அவர்களுடைய பெயர்களுடன் உள்ளது.
    1. சேவக பெருமாள்
    2. சேவகப் பெருமாளின் மகன் விசுவ முத்து
    3. இவனது தம்பி காரண காரி
    4. திரை கொடை ஆசாரி திருமருகன்

    மல்லர்(ன்) எங்கே ?

    ReplyDelete