—— மா. மாரிராஜன்
கோவிலுள்ள இறைவனுக்கும், கோஷ்டத்தில் உள்ள இறைவடிவங்களுக்கும், எடு ப்பித்த செப்புத் திருமேனிகளுக்கும், தினசரி நெய்வேத்தியம், பூஜை, திருஅமுது படையல், தினசரி நடக்கும் ஒரு அன்றாட
நிகழ்வாகும்..
அமுது படையலுக்குப் பயன்படுத் தப்பட்ட உணவு வகைகளை, பக்தர்களுக்கும், அடியார்களுக்கும் தானமாக வழங்குவார்கள். அடியார்களுக்கு வழங்கப்படும் உணவை ஒரு சட்டியில் இட்டுத் தருவார்கள்..இதில் என்ன சிறப்பு? உணவு இடப்பட்டுள்ளச் சட்டியை ஒரு வாழை இலையால் மூடி தந்துள்ளார்கள். அந்த வாலை இலை வாங்குவதற்குக் கூட நிவந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகா.. என்னவொரு உயர்ந்த நாகரீகம்.
இராஜேந்திரரின் 19 ம் ஆட்சியாண்டு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். அரசனின் வேலையாள் உதயதிவாகரன் என்பவர் கார்த்திகை திருநாள்போது இறைவனு க்கு அமுது படைக்க, பொன்நிவந்தம் வழங்குகி றார்.
இதைக்கொண்டு அமுது படையலுக்குத் தேவையான உணவு வகைகள், அதற்குத் தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. தயாரிக்கும் உணவை இருபது அடியார்களுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
உணவு தருவதற்குச் சட்டியும், அதைமூ டித்தருவதற்கு வாழை இலைகளும் வழங்கப்பட்டன.
இனி கல்வெட்டுச்செய்தி. முதல் பகுதி இராஜேந்திரரின் மெய்க்கீ ர்த்தி. தொடரும் பகுதியில் மேற்கண்ட திருஅமுது படையல் செய்தி.
தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 8.
எண் 66.
S.I.I vol. 8. No 66.
தொடர்பு: மா. மாரிராஜன் (marirajan016@gmail.com)
No comments:
Post a Comment