Wednesday, April 19, 2017

அறநோன்பு



- பழமைபேசி




மச்சுவீட்டுப் பெரியவர்

தெற்குப் பார்த்திருக்கும்
கிளையிணுக்கில் இருக்கும் ஓணான்
கொக்காணி காட்டவில்லை என்றேன்!
ஓ, ஓணான் கொக்காணி காட்டுமா?
வெட்டு மரத்தை என்றார் பெரியவர்!!

o0o0o0o0o

அறநோன்பு

தற்கொலைகளைத் தடுக்க
சொற்களுக்குத் தடையாணை
கேட்டு நோன்பிருக்கிறான்
தமிழ்ச்சித்தன்!!

o0o0o0o0o

கல் யுகம்

புத்தகத்தைத் தாறுமாறாய்
கிழித்தெறிந்தான் ஒருவன்!
காற்றிற்கிடைத்த ஒருபக்கத்தை
கையில் வைத்துக்கொண்டு
பிற பக்கங்களைத் தேடித்தேடி
அலைகிறான் இன்னொருவன்!!

o0o0o0o0o


கருத்தாடல்

விசைப்பலகையினூடே
ஆவேசமாய் எறிந்த
சொற்கள் உடைந்து
பிளவுபட்ட தருணத்தில்
புறக்கொல்லை மரமேறி
தூக்கிலிட்டுக் கொண்டன
நினைவுச் சுவடுகள்!!

o0o0o0o0o

புனைவிலக்கியம்

நிழல்குறித்துப் பேசியதற்கு
வெகுண்டு ஆர்ப்பரிப்பவனிடம்
எப்படிச் சொல்லமுடியும்?!
நிழலே கூடாதென்றால்
அது இருளில்தான்
போய் முடியுமென்று!!

_________________________________________________________ 
பழமைபேசி
pazamaipesi@gmail.com
_________________________________________________________

No comments:

Post a Comment