-- முனைவர் கி. காளைராசன்
மானாமதுரை வைகை ஆற்றின் வடகரையில் (புவியிடக் குறிப்பு:9.6931N, 78.4552E) கிடக்கும் கல்வெட்டு. இரண்டு பக்கங்களில் எழுத்துகள் உள்ளன. ஆற்றில் கிடந்த கல்லை எடுத்து வைத்துள்ளார்கள்.
கல்வெட்டுப் பாடம் வழங்கியவர் -
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
திரு.காளைராசன் அவர்கள், முதலாம் இராசராசனின் கல்வெட்டு
ஒன்றை இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ளார். நன்றி.
1 ஸ்வஸ்திஸ்ரீ ... ரு ... ச
2 ..த்து வேங்
3 டியுந் தடிகை..
4 செந்த ........
5 முடையார்.......
6 யம்மை
7 .. ஒன்றுக்கு
8 (வா)ழு (பா) செ
9 டு 25 இருபத்..
10 கொண்டு
11 நெய் அட்டு..
12 (இ)ரு (காசு)
கல்வெட்டுப் பாடம் - இரண்டாம் படம்
1 ஸ்வஸ்தி
2 ஸ்ரீ (கோ)
3 ன உடையார் ஸ்ரீ
4 கு யாண்டு 5 ஆ
5 ண்டலத்து கா
6 (பா) ..தானந்திச்ச
7 (த்த) ஸுப்ரஹ்மண்ய
8
9 புலியனைச் சாத்(தி)
10 னாராயணனான
11 (செ)ங்குடி நாட்டு
12 தி ச நுந்தாவிள(க்)
குறிப்பு:
கல்வெட்டு, முதலாம் இராசராசன் காலத்தது என்பதற்குக் கல்வெட்டில் அகச்சான்றாக, இராசராசனின்
மெய்க்கீர்த்தியில் வருகின்ற வேங்கை நாடு, தடிகை நாடு ஆகிய
தொடர்களின் துண்டுப்பகுதிகள் உள்ளன. கல்வெட்டு, (அருகில்
இருக்கும்?) கோயிலுக்கு நுந்தா விளக்கு (நந்தா விளக்கு) எரிக்கக்
கொடை அளிக்கப்பட்டதைக் கூறுகிறது. கொடையாளியின் பெயர்
தெரியவில்லை. ஆனால், புலியன் என்பானின் நலனுக்காகக்
கொடை அளிக்கப்பட்டுள்ளது. இது. “புலியனைச் சாத்தி” என்னும் கல்வெட்டுத் தொடரால் அறியப்படுகிறது. கொடை முதலைக் (CAPITAL) கொண்டு, நெய் அளந்து தரவேண்டும் என்னும் குறிப்பு உள்ளது.
நெய்யின் அளவு தெரியவில்லை. கொடை முதல், காசாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. (பெரும்பாலும், ஒரு விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகள் கொடை தரப்படுவதைக் காண்கிறோம்.
சிவப்பு வண்ண எழுத்துகள், கிரந்த எழுத்துகள். மற்றவை தமிழ்
எழுத்துகள். கிரந்த எழுத்தில் உள்ள “ஸுப்ரஹ்மண்யம்” என்னும்
சொல், கொடைக்கான (காசுகளை)ப் பெற்றுக்கொண்ட - கோயில்
காணியுடைய - சிவப்பிராமணன் பெயராகவும் இருக்கக் கூடும்.
உறுதியில்லை. ”நாராயணனான” என்னும் ஒரு பெயர், கொடையாளியின் பெயராக இருக்கலாம் என்னும் ஐயத்தையும்
ஏற்படுத்துகிறது. கல்வெட்டின் பெரும்பகுதி, எழுத்துகள் மறைந்து
கல்வெட்டில் உள்ள யாண்டு 5 என்பது இராசராசனின் ஐந்தாம்
ஆட்சியாண்டைக் குறிக்கும். ஆட்சிக்காலம் கி.பி. 985-1014 என்பதால்
கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 990. ஆனால், இன்னொரு கல்வெட்டில் ஆட்சியாண்டு 25 என்று காணப்படுகிறது. (கி.பி. 1010) எனவே, இக்கோயிலுக்கு இராசராசனின் ஆட்சிக்காலத்திலேயே, இருபது ஆண்டுகள் இடைவெளியில் இருமுறை கொடை அளிக்கப்பட்டதும், இரண்டு கொடைச் செய்திகளும் ஒரே கற்றூணில் இடம் பெற்றிருப்பதும் சிறப்பானது.கல்வெட்டில் எழுத்துகளைப் பார்த்ததும், ஏதோ ஒரு சிறப்பு அந்தத்தூணில் இருப்பதை உணர்ந்து தனியே எடுத்துவைத்த அந்த உணர்வான மக்கள் பாராட்டுக்குரியவர்கள். ஏனெனில் உணர்வின்றி உதறியெறியும் சூழ்நிலையைப் பல இடங்களில் காண்கிறோம்.
__________________________________________________________
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com
kalairajan26@gmail.com
__________________________________________________________
No comments:
Post a Comment