Friday, March 24, 2017

கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செய்தி


நூ த லோ சு, மயிலை:
இணைய உலாவினில் கண்ட கொல்லி மலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றின்  படம் கருப்புவெள்ளைப் படமாக  மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனில் உள்ள வரிகளின் செய்தி என்ன சொல்கிறது? இக்கல்வெட்டு  எந்தக் காலகட்டம் சார்ந்தது ?

 



 
ref: http://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/arapaleeswarar-temple-kolli-hills.html
image: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFUCeCqewCMXebUVTB-SkLdDD1u6je5aNutmHSMlrLWeegClrmg2_jxeoczzRvuJJrUXXRAORehbub9X5q2ppvjqTz6HK359Vsf-5MRbR65OdC711rua2gQmDkSGO6fm2AevCmqt9Nbz0/s640/IMG_0662.jpg



கல்வெட்டு அறிஞர் திரு துரை  சுந்தரம், கோவை: 


கல்வெட்டுப் பாடம் :

1  மாஹேச்வரருமாய் ஆராய்ந்து தண்டமுங் கொண்டு முட்...
2  (த)ந்மம் இறக்குவான் வழி ஏழச்சமறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீ பா(தம்)
3  (ள்)வது மழபெருமாள் மருமகள் கண(லை?)  தாதியார் (அணிமக்க/    அணிமுரி ?) 
4  நாளுக்குத் திருவி(ள)க்குக்கும் தகணிக்கும்   கொல்லிமலை  நாட்டார்............
5  யேழச்சம் மறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீபாதமென் தலை மேல(ன)
6  ந்திக்கு  திரு .................க்கும் ..........

 
மாகேசுவரர்  என்போர் கோயில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.
முதலிலேயே, ஒரு நிவந்த தன்மததைத் தடுப்பவன் ஏழு பிறவிகளிலும் 
எச்சம் (மக்கள் பரம்பரை) இல்லாமல் போவான் என்றும், தன்மத்தைக் 
காப்பவன் பாதத்தைத் தலைமேல் வைத்து வணங்குவேன் என்றும் குறிப்பிட்டுவிட்டுப் பின் பகுதியில் கோயிலுக்கு அளிக்கும் விளக்குக் கொடை பற்றிக் கல்வெட்டு  கூறுகிறது. கொல்லிமலை நாட்டார் பொறுப்பில் கொடை தரப்படுகிறது போலும்.  கொடை,  திருவிழா நாள்களுக்கும் சேர்த்தே தரப்படுவதாகத் தெரிகிறது. கொடையாளி ஒரு பெண்மணி என்பது 
குறிப்பிடத்தக்கது. அவள், மழபெருமாள் என்பவரின் மருமகள் என்று 
கருதலாம். அணிமக்க/ அணிமுரி   என்று படிக்கும் வண்ணம் உள்ள 
எழுத்துகளின் பாடம் ஐயமாக உள்ளது. காலம் சோழர் காலமாக இருக்கலாம்.
எனில், 11-13  நூ.ஆ. எனக்கொள்ளலாம்.
குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகளும் “ஸ்ரீ”  யும் கிரந்த எழுத்துகள். 
 

No comments:

Post a Comment