-- நூ.த.லோக சுந்தரம்
வேம்பற்றூர் பிறந்த தமிழ்ப் புலவர்களின் தனித்தன்மை பற்றி:-
இவர் உலக வரலாற்றில் குறிக்கப்பட வேண்டியவர்கள் என்றால் மிகையாகாது
யாது ? எங்ஙனம்??
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தமிழ் நாட்டு மதிரையில்* நடந்த மூன்றாம் தமிழ் சங்கம் சார்ந்த நூல்களாம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலியன வற்றில் ஒன்றான குறுந்தொகை பாடல் 362 தனை இயற்றியவர் இந்நாள் மதுரை அருகமைந்த வேம்பற்றூர் சேர்ந்தவராகும் எனக் காட்டுகின்றது தமிழ் இலக்கிய வரலாறு
குறிஞ்சி - தோழி கூற்று
முருகயர்ந்து (உ)வந்த முதுவாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவது (உ)டையேன்
பல்வேறு(உ)ருவில் சில்அவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே
[ வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் ] குறுந்தொகை 362
உலக வரலாற்றிலேயே வேறெங்குமே காணமுடியாத ஓர் (தமிழ்) மொழியின் இலக்கியநூல் ஆகும். சிராமலை அந்தாதி 100+ கட்டளைக்க கலித்துறைப் பாடல்களும் (416 வரிகள் ஏறக்குறைய 6600 எழுத்துக்கள் ) திருச்சிராமலை மலை மேல் கோயில் கல்வெட்டுகளாகவே பொளிக்கப்பட்டுள்ளன .
ஆயிரம் ஆண்டுகள் பழமை பெற்ற இந்தச் செயல் (ஆவணம்) மதம் நிறம் நாடு காலம் ஒருவர் தான் சாராத ஓர் துறை என வேறுபாடுகள் பாராது மிக அரி ய உலக மனித முயற்சிகளில் ஒன்றே எனும் கருத்தில் உலக நாடுகள் அவையில் குறிக்கப்பட வேண்டிய தே ஆகும் இதற்கு இணையானவை வேறெங்கும் காணவும் இயலாது எனலாம் இந்தக் கல்வெட்டு இன்றைக்கு (2017) 135 ஆண்டுகளுக்கு முன்பே படியெடுக்கப் பட்டுதான் நூலாக வெளிவந்துள்ளது.
என்மதுரைத் திட்ட பதிவினில் இதனின் மேலும் பல விவரங்களை வைத்துள்ளேன் படித்துணரலாம்
நூல் அறிமுகம்:
திருச்சிராப்பள்ளி நகர்க்குன்றுப் பாறைகளின்மேல் கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் படிவழியில் காணப்படும் பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் அமைத்த குடைவரைக் கோயிலின் பின்புறச்சுவர் தனில் பொளித்துள்ள கல்வெட்டாகக் காண்பது இந்நூல். தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி IV எண் 167, பக்கங்கள் 21-27(A R 62 of 1888). இஃது 102 கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. பலபாடல் வரிகள் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளதால் பொருளறி இடர்பாட்டுடன், கல்வெட்டுகளுக்கே இயல்பான எழுத்துப் பொறி வினைஞரால் வரும் சொற் பிழைகளுடன் படியின் பதிப்பினில் கண்டவாறே ஈங்கு படைக்கப் பட்டுள்ளது.. சிதைந்த பகுதி [. . .] எனவும் () என உடுக்குறிக்குள் காண்பவை படி எடுத்தோரோ பிறரோ ஐயமுடன் சேர்த்த பகுதி ஆகலாம். இக்கல்வெட்டின் காலம் 900-950 ஆகலாம் எனக் கணித்துள்ளனர்.
இதன் ஆசிரியர் மணியன்மகன் வேம்பையர்க்கோன் தமிழ்நாராயணன் என இதன் 90 வது மற்றும் 103, 104 பாயிரப் பாடல்களால் அறியலாகும். மாடமதிரை-மணலூர், மதில் வேம்பை சேய்ஞலூர், குண்டூர் எனும் நான்கு ஊர்களுக்குத் தலைவராக சொல்லப்பட்ட இவர் சைவ சமயப் பற்றுடையவரென்பது தேற்றம். 34, 35 பாடல் வரிகள் பரிசில் வாழ்க்கையரோ என ஐயம் தோற்றுவிக்கிறது.
'பாட்டியல்' மரபிலேயே 'உலகமடந்தை' என மங்கலச் சொல்லால் தொடங்கி, அந்தாதித் தொடையமைந்து, 'உலகத்துளே' என 102 பாடலில் மண்டிலத்து, கட்டளைக்கலித்துறை யாப்பும் உள்ளமையால் இந்நூல் ஓர் அந்தாதியாம். அக்காலத்துக் கல்வெட்டு பொளிக்கும் மரபினிலேயே 'ஸ்வஸ்தி ஸ்ரீ' எனத் தொடக்க எழுத்து பொறிக்கப்பட்து போலும்.
பாடல்களில் பல கோவைத் துறைகள் பொருந்தக் காண்கின்றன. இயற்கை வருணனை, மற்றும் சொல்-பொருள் அணிகள் பலவற்றினில் பயின்று வந்துள்ளன. சிவன்தன் வீரச் செயல் போற்றும் பாடல்கள் சைவத்திருமுறை வரிகளை நினைவு கூர்கின்றன. பாடல் பெற்ற 'சிராப்பள்ளி'க் குன்றினில் அமர்ந்த சிவபெருமானை போற்ற எழுந்த இந்நூல் சிறிதே மேற்கினில் ஓர் அறைமேல் உள்ள 'கற்குடி' எனும் மூவர் தேவாரப் பாடல்பெற்ற தலம் மற்றும் 'மருதாடு' எனும் தலப் பெருமானையும் 75 வது பாடலில் குறிக்கின்றது. 67 ஆம் பாடலில் தில்லைநகரில் சோழ மன்னர்மாளிகை, 'முடிகட்டிய' மூவாயிரவர் என்பன குறிக்கப்படுகின்றன.
________________________________________________________
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com

வேம்பையர்க்கோன் தமிழ்நாராயணன் இயற்றிய
"சிராமலை அந்தாதி"

ஸ்வஸ்தி ஸ்ரீ
1
உலக மடந்தை நுதலுறைந் தைப்பதி யந்நுதற்குத்
திலதம் பரமனமருஞ் சிராமலை யம்மலைவா
யலகின் னிறைந்த கதிர்மணி பாய . . மேல் வந்ததந்தாதி
. . ப் பொன்னி பரன்கழுத்திற் கொண்ட வெள்வடமே
2
வடகயி லாயமுந் தென்மான் மலயப் பொருப்புமென்னுந்
தடவரை தாமிதன் றன்மைய வாவது தாம் உணர்ந்துங்
கடவரை மேக முழக்குஞ் சிராமலை கண்ட (கண்)
முடவரை ய(க்கு மறுசான்) றெண்ணி மொழிகின்றதே
3
மொழிந்திடு மெய்மை முனிந்திடும் பொய்மை முயன்றிடுமின்
கழிந்திடும் யாக்கையைக் கைப்பணி கோடல் கருமுகில்வான்
பொழிந்திடு மெல்லருவிச் சிராமலை புகுந்திடுமி
னிழிந்திடு நும்வினை யீசனங் கேவந் தெதிர்ப்படுமே
4
படும்பொழு தாயிற்று வெங்கதிர் கூற்றுவன் பற்றிநம்மை
யடும் பொழு தாவஞ் சலென்பான் சிராமலையர் ஏரிவந்
திடும்பொழு தாயிற் றெதிர்கண் டிடிலெ மருங்கொடியர்
நெடும்பொழு தாலென்கலோ அந்பர் நீர்வந்து நிற்கின்றதே
5
நிற்குந் துயர்கொண் டிருக்கும் பொழுதின்றி நெஞ்சனுங்கி
தெற்கும் வடக்குந் திரித்தே வருந்திச் சிராமலைமேற்
பொற்குன் றனைக்கண்டு கொண்டே னினிப்புறம் போகலொட்டேன்
கற்குன் றனையநெஞ் சிற்செல்வ ராலில்லை காரியமே
6
காரி(க் குதவார்) கடவுட் கிறைச்சியுங் கள்ளுநல்கு
மோரிக் குரற்பெண்க ளன்றறி யீரொரு பால்குறவர்
சேரிக் கொடுமுடித் தெய்வச் சிராமலைத் தெண்மணிநீர்
வாரிக் குளிக்க வொளிக்கு மெய்(ந்நோ)யி மடவரற்கே
7
மடக்கோல் வளையிடத் தான்றன் சிராமலை வாழ்த்திலர்போல்
படக் கோ நிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார்
விடக்கோ கிடந்த(ன) வேளர் (வரையார்) கொள் வாள்¨ணைந்தார்
தடக்கோ வெள்ளிப்படுத் தார்மற வீர்நுங்கள் சுற்றத்தையே
8
சுற்றத்தை நீயத்திநின்ற சூள்புணை யாகச் சுரம்படர்ந்த
நற்றத்தை பெரலிக்கு நல்குகண் டாய்பண்டு நாடறியப்
பெற்றத்தை யேறும் பெருமான் சிராமலை மேலோர்சேர்
குற்றத்தை நீக்குங் குணத்துர வோர்தங்கள் கோளரியேய்
9
கோளரி யேறு போலக்கொல் யானையைக் கொன்றுதிங்கள்
வாளரி யேறு கண்ணா யிருந்தவன் மால்கடல்வா
யாளரி யோறிடத் தாண்டான் சிராமலை ஐவனமாந்
தோளரி யேறு (தஞ்சம)¡ ரிதற்கு தலைமகளே
10
தலைமக . . பரனொரு வன்னவன் தம்பி கொம்பார்
குலைமுக யானைத் தலையின் னவர்தா யலைமலையாள்
முலைமுக நீயமயங்கி மயங்கிற்றுன் முன்மையென்னோ
சிலைமுக நீடு திருமலை மேய திகம்பரனே
11
பரந்தெரி . . . . ன்றுக ளாகிப் பகையுறனச்
சரந்தெரி கானவர் தம்யை . . . க தடமலரோன்
சிரந்தொயா வொள்வலி சதித்த வீரன் சிராமலைபோலுந்
. . . . . . . . வானுடன் போன வொள்வளைக்கே
12
வளைவர . . ய வந்து காணமணி நாளில்வந்த
முளைவா யெயிற்று முதவச் சிராமலை முடியிலவிள்
களைவாய் சொரிந்த பெருந்தேன் சுடர்தோய் நறுங்கமலத்
தளைவாய்த் தேனருந் தச்சுரும் பார்க்கின்ற தண்பரணியே
13
பரணித் தலையா வலவர்கள் பெறுகுரு ரம்பைக் கிளைமல்லழுத்தங்
கரணத் தடங்கண் மலர்கா தளவும்முன் காரதிருந்
திரணைத் தடஞ் சாரற் பரமன் சிராமலை சூழ்சுளை
திரணைத் தாங்கப் பிடித்துடி யறுகேநின்ற பாயமயிற்கே
14
மயிலார் . . க . . மென்று பேரகில் வஞ்சி யென்று
பயிலாக் கிளியும் மயிலும் படைக்குணகன் பார்த்துழைமா
னயிலா தொழிகி லவைவளங் காவலெவ் வாறமைந்தார்
வெயிலார் மழுவன் சிராமலை வாழ்நர்தம் மெல்லியற்கே
15
மெல்லிய . . க . . மலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச்
சொல்லிய கோவிற் கருள்செய் தவன்சூ ழலும்முகிலை
வல்லிய மால்களி றென்றுதன் வாளுகி ராற்கதுவச்
செல்லிழிச் சாரற் சிராமலை மேய திருவடியே
16
வடிக்குங் கருங்குழல் மேலுமைத் தாள்மொய்த்த வண்டகற்றிக்
கொடிக்குங் குமக்கொங்கை மேலுங்கொண் டாள்கொண் டலந்திமந்தி
பிடிக்குஞ் சிராமலை யாதிதன் பேரருள் போல நன்றுந்
தடிக்குங் கலையல்கு லாள்லின்ப நீதந்த தண்ட¨ழுயே
17
தழைகொண்ட கையர் கதிர்கொண்ட மெய்யர் தளர்வுகண்டு
பிழைகொண்டு மெய்யென்று பேசிவிட் டோற்கவர் பேரருளான்
மழைகொண்ட கண்டர்தம் மானீர்ச் சிராமலை வந்து நின்றா
ருழைகொண்ட நோக்கியின் றென்னுரைக் கேனவ ருற்றுடிலே
18
உற்றார் தலையிட வொன்னார் முகந்த உண்டுமிக்க
துற்றா ரிடுவ ரெனத்தொழு தோங்குந் தெழார்புரங்கள்
செற்றார் சிராமலை சேரவல் லார்திரு நாமமெல்லாங்
கற்றார் கனைகழல் கண்டிறைஞ் சாதவர் கைத்தலமே
19
கைத்தலை கராமலை நெல்லிக் கனிபோல் கலைகளெல்லா
மெத்தலைப் பாடு விதியுணர்ந் தோர்தங்கள் வீதியெங்குஞ்
செய்த்தலை நீல மலருஞ் செழுநீர் சிராமலையான்
பைத்தலைப் பாம்புகண் டீரரை மேற்கொண்ட பட்டிகையே
20
பட்டிப் பசுமுன் படரத் துடர்ந்துநின் பாடுசொல்லின்
முட்டித் திரியு முகில்போ லதிரு முரட்கயிற்றாற்
கட்டிக்கொ டாளுங் கருமஞ்சொன் னோங்கண்ணி காரமெங்குங்
மட்டிக் கமழுஞ் சிராமலை யீர்நும் மதவிடையே
21
மதவிடைப் பாகன் மதியிடைப்பாகன் மழைநிறத்தோர்க்
குதவிடப் பாக னுமையிட பாக னுயர்கலிங்கு
கவிடப் பாகு கமுகெழக் காமர் கடிநகர்வாய்ப்
புதமடப் பாய்புனற் பொன்னிச் சிராமலைப் பொன்வண்ணனே
22
பொன்வண்ண மாளிகைப் பூந்தண் சிராமலைப் பள்ளிகொண்ட
மன்வண்ண மால்கட னஞ்சம் மிருந்த மறைமிடற்றான்தன்
வண்ணந்தி வண்ணங் கண்டு தளிர்வண்ணம் வாடிச்சென்றான்
மின்வண்ண நுண்ணிடை யாளெங்ங னேசெயு மெய்ப்பணியே
23
பணியா வதுநஞ் சிராமலை மேய பரமற்கென்று
துணியா டையு மணிவாய் நன்றுந்துவ ரூட்டிக்கொங்கை
பிணியா தொழிந்தனை §உ¡ர்மனத் தேய்ப்பிணிப் பான்றுடையா
யணியா ரடிகள் பழந்தவஞ் சால வயிர்ப்புடைத்தேய்
24
அயிர்ப்புடை யாய்நெஞ்ச மேயினித் தேறர மங்கையல்லள்
செயிர்ப்புடை யார்தந் திரிபுரஞ் செற்றான் சிராமலைவாய்
பயிர்ப்புடை யா ளடிப் பார்தோய்ந் தனபடைக் கண்ணிமைக்கு
முயிர்ப்புடை யாளிவ் வுலகுடை யார்பெற்ற வொல்கிடையே
25
கிடைவாய் மடந்தையும் மைந்தனுங் கேட்கிற் சிராமலையா
ளடைவா யவரை யணையார் கிளைபோ லழிந்துபட்டார்
கடைவாய் நிணந்தன்ற பாவிதன் காதற் கரும்பொடையின்
முடைவாய் புகச்சொரி முண்மாக் களத்து முன்பினரே
26
முன்வந்து நின்றனை யென்னுரைக் கேன்முகிழ் மென்முலைக்கீழ்
மின்வந்து நின்றனன் நுண்ணிடை யாய்விதி யேவலிந்த
பொன்வந்த கொன்றையார் பூந்தண் சிராமலை போற்றலர்போல்
பின்வந்து வன்கா னவர்கைய்ப் பாடும் பெருஞ்சுரத்தே
27
பெரஞ்சிலை யாற்புர மூன்றெரித் தோன்பிறைக் கோட்டுக்கைம்மா
வுரிஞ்சிலை தேங்கமழ் பாங்கற் சிராமலை யுள்ளலர்போல்
வருஞ்சிலை யோர்நும ராகின் மறைவன்வன் கானவரேற்
கருஞ்சிலை யாலழிப் பன்கலங் காதுநிற் காரிகையே
28
காரிகத் தாழ்பொழிற் கண்ணார் சிராமலைக் காமர்கொன்றைக்
தாரிகத் தாழ்சடைச் சங்கர னேசதி ரொப்பனகோ
பாரிகத் தாழுநின் பாதம் பணிந்தவ ரேமதஞ்ச
வோரிகத் தாவருங் கானகத் தாடி யுறைகின்றதே
29
உறைவாய் சிராமலை யுள்ளுமென் சிந்தையி னுள்ளுமென்றும்
பிறைவாய் மழுவாட் பெரியவ னேநுன் பியற்கணிந்த
கறைவா யரவங் கடியா வகையடி யேனறியே
னறைவா யழலுமி ழும்புரிந் தாடி யலருமே
30
அலமரு வெஞ்சத் தரிவைகண் டாற்றுங்கொல் போற்றலர்தங்
கலமரு முப்புரங் கொன்றவன் கோலச் சிராமலைசூழ்
நிலமரு தென்றுளி நித்திலங் கோப்ப நெடும்பொழில்கள்
சலமரு வெள்வடம் பூணத்தண் கானெடுந் தாழ்பனியே
31
புனிப்படம் போர்த்னள் பார்மகள் யானும் பசலையென்னுந்
துணிப்படம் போர்த்திங்குத் தேனங்குத் தாரன்பர் துங்கக்கைம்மா
முனிப்படம் போர்த்த பிரான்சிராப் பள்ளியு மூரிக்கொண்மூத்
தனிப்படம் போர்க்கும் பரவமன் றோவந்து சந்தித்ததே
32
வந்துசந் தித்திலர் காதலர் பேதையை வாதைசெய்வா
னந்திசந் திப்பவெழுந்த தரன்றன் சிராமலைவாய்க்
கொந்துசந் தித்தசெங் காந்தண் முகைகொண்டு கொண்டிடுவான்
மந்திசந் திப்பவர் வென்றுள வாடு மதிப்பகையே
33
மதியும் பகைமுன்னை வாயும் பகைமனை யும்மனைசூழ்
பதியும் பகைபகை யன்றில்என் றும்பகை பான்மைதந்த
விதியும் பகையெனி லும்மன்ப தன்பினர் வெள்ளக்கங்கை
பொதஒயுஞ் சடையன் சிராமலை போலுமெம் பூங்குழற்கே
34
குழனெறி காட்டிய கொம்பனை யாரொடுங் கொண்டசுற்ற
மழனெறி காட்டு மிடத்தெனக் குத்தனக் கன்பர்சென்ற
பழநெறி காட்டும் பரன்சிராப் பள்ளி பரவக்கற்றேன்
முழுநெறி யாகிலுஞ் செல்லே னினிச்செல்வர் முன்கடைக்கே
35
இனிச்செல்வர் முன்கடைக் கென்செயக் சேறு மினையனெஞ்சேய்
கனிச்செல்வ மாம்பொழிற் காவிரித் தென்கரைப் பூவிரிக்கும்
முனிச்செல்வர் சேருஞ் சிராப்பள்ளி மேய முக்கட்சுடரை
தனிச்செல் வனைப்பணிந் துள்ளமிர் தூரித் தடித்தனமே
36
தடித்தசுற தங்கமழ் சாரற் சிராமலைச் சங்கரன்தன்
கொடிக்கண்ட வள்ளேறென்ன வெற்றிணைக் கரங்கொடி ழைத்தரண்சூழ்
படிக்கண்விட் டார்த்தன ராயர் தளைப் பருவலியாற்
பிடித்தமொய்ம் பர்க்கின் றெளியளன் றோஎங்கள் பெண்ணமிர்தே
37
பெண்ணமிர் தைப்பார் பெருந்தே னமிர்தைப் பிறைநுதலை
வண்ணப் பயலை தணிவித் திரேல்வம்மின் செம்மனத்துக்
கண்ணப் பனுக்கருள் செய்த சிராமலை யானைக்கண்டு
விண்ணப் பமுஞ்செய்து வேட்கையுங் கூறுமின் வேறிடத்தே
38
வேறுகண் டாய்நெஞ் சமேதள ரேல்விளை மாங்கனியின்
சேறுகண் டாருண் சிராமலை யாதிதன் செல்வஞ்சென்னால்
யாறுகண் டாயவன் றேவியல் லம்பல மேற்பதைய்ய
மேறுகண் டாயவ னேறிப் பல் காலம் இயங்குவதே
39
காலால் வலஞ்செய்து கையால் தொழுதுகண் ணாரக்கண்டு
மேலா னவருடன் வீற்றிருப் பாலெண்ணில் மெய்ப்பலவீர்
சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப்
பாலா னறுநெய்யோ டாடியைப் பாடிப் பணிமின்களே
40
பணிமின்கள் பாதம் பகர்மின்க ணாமங்கள் பாரகத்தீர்
தணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் மொய்ம்மை தவம்புகுநாள்
கணிமின்க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த
மணிமின்கள் போலொளிர் வான்றோய் சிராப்பள்ளி வள்ளலுக்கே
41
வள்ளலுக் கும்மலை மாதர்தங் கோனுக்கு வாட்சடைமேல்
வெள்ளெருக் கும்மதி யும்பொதிந் தானுக்கு வெண்பளிங்கு
தெள்ளலைக் கும்மரு விச்சிராப் பள்ளிச் சிவனுக்கன்பா
யுள்ளலுக்கு நன்று நோற்றதன் றோவென் றுணர்நெஞ்சமே
42
நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு
தஞ்சப் பெருக்குள தானஞ் சிராமலைச் சாரலுண்டு
துஞ்சுந் துணையுஞ் சிவனைத் தொழுது துறக்கமெய்தார்
பஞ்சந் நலியப் பலிதிரி வார்சிலர் பாவியரே
43
பாவிய ராக புரத்திற்பட் டார்பசுஞ் சந்தனத்தி
னாவிய ராவு சிராமலை யா¨னையு நல்லனென்னோ
மோவிய ராலு மெழுதப் படாஉரு வத்தசுரர்
தேவிய ராயுங் கொண்டதன் றோவவன் செஞ்சுரமே
44
சரங்கலந் தோரைப் புணர்விக்க வேயார்வமென் றார்க்கணவன்
னிரங்கலந் தோடெரி சேர்கின்ற வாறென் சிராமலையா
யிரங்கலந் தோவிலை யால்வினை யேற்கென் றிரதிமண்மேற்
கரங்கலந் தோலிடக் கண்டதன் றோநின்றன் கண்மலரே
45
கண்மலர் நீலங் கனிவாய் பவழங் கருங்குழல்கார்
எண்மலர் மூக்கிளங் கொங்கைகள் கோங்கிடை யென்வடிவென்
உண்மல ராசையி னொப்புடைத் தல்கிலொண் பொன்மலையான்
றண்மலர் சேர்தனிச் சங்கிடு வாளரு பெண்கொடிக்கேய்
46
பெண்கொடி யாரிற் பிறர்கொடி யாரில்லை பேரிடவத்
திண்கொடி யாரைச் சிராமலை யாரைத் திருநுதன்மேற்
கண்கொடி யாரைக் கனவினிற் கண்டு கலைகொடுத்த
வொண்கொடி யாரை வுணர்வழிந் தாரென் றுரைப்பார்களேய்
47
கள்ளும் முருகுந் தருமல ரான்மிக்க சந்திறைஞ்சி
யுள்ளும் புறமும் மொருக்கவல் லார்கட் குலகறியக்
கொள்ளும் மடிமை கொடுக்குந் துறக்கம் பிறப்பறுக்குந்
தெள்ளும் மருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே
48
கொழுந்தார் துழாய்முடிக் கொற்ற கருடக் கொடித்தேவுஞ்
செழுந்தா மரையிற் றிசைமுகத் தாதியுஞ் சேவடிக்கீழ்த்
தொழுந்தா ரியர்தந் துணிவைப் பணியச் சுடர்பிழம்பா
யெழுந்தான் சிராமலைக் கேறநம் பாவம் மிழிந்தனவே
49
இழியுந் நரகமு மேறுந் துறக்கமு மிவ்விரண்டும்
பழியும் புகழும் தரவந் தனவினைப் பற்றறுத்துக்
கழியும் முடம்பும் கழித்தவர் காணுங் கழலன்கண்டீர்
பொழியுங் கருமுகில் போர்க்குந் திருமலைப் புண்ணியனேய்
50
புண்ணியன் வேதம் முதல்வன் புரமூன் றெரித்தவன்று
திண்ணியன் றேவர் பிரானென்ன நின்றான் சிராமலைவாய்க்
கண்ணியன் றண்ணந் தழையன் கனைபொற் கழலம்பாற்
றண்ணியன் இன்றும் வரும்மன்று போன தனிவில்லியே
51
வில்லிபின் செல்லமுன் செல்லா அரிவையு மென்கிளிப்போல்
சொல்லிபின் சொல்லமுன் செல்லா விடைலையுட் சொல்லிம்மான்
வல்லிபின் செல்லமுன் செல்லா திடங்கொண்ட மாதவர்போ
லெல்லிபின் செல்லமுன் செல்லார் சிராப்பள்ளி யெய்துவரேய்
52
எய்துவ ராயமுந் தாமும் இரும்பொழி லென்னைமையல்
செய்தவர் வாழ்வுஞ் சிராமலை யென்பது சென்றுகண்டால்
மெய்தவர் மான்விழி மென்முலை தண்ணிய வம்முலைக்கீ
ழைய்தவர் நுண்ணிடை யல்கிலுஞ் சால வளவுடைத்தேய்
53
உடைத்தேய் வருதுன்ப வெம்பகை நீக்கி உலகளிக்குஞ்
சடைத்தே வர்முடித் தேவருந் தாடொழத் தானவரைப்
படைத்தேய் கெடுத்த பரமன் சிராமலைப் பாடிருந்துங்
கடைத்தே வனைத்தொழு மோவினை யேயென் கரதலமேய்
54
கரம்பற் றியவில்லி கைபற் றியவில்லி காலலைக்குஞ்
சுரம்பற் றியசெழு மம்பொன் சுடர்கம லயத்தயன்றன்
சிரம்பற் றியமழு வாளிதன் சாரற் சிராமலைசேர்
வரம்பற் றியபெரி யோரிற்சென் றேகினி வாழ்பதியே
55
பதியிலந் நாடிலம் பைம்பொற் குடைபெறப் பண்டுசெய்த
விதியிலம் . . . . இலம்வியன் கங்கையென்னு
நதியிலங் குஞ்சடை நாதன் சிராமலை நண்ணவென்னும்
மதியிலம் வாழ்வா னிருந்துமென் னோநம் மனக்கருத்தேய்
56
மனக்கருத் தாகிய . ரவலை கண்சே . பற்றின
. . க் கருத்து . . இருந்தென் . . . . . .
. . . . கெலாம் . . . . . . . . . .
. . . கொட்டிற் றளைக்கு . . . சிராமலையே
57
மலையாள் மடந்தையோர் பாகத்தன் மாகத் துமானதஞ்
சிலையா லழிவித்த நாதன் சிராமலை தேவர் . வ
முலையா யருவர் . . . குயிர்க்க . . . .
மிலையா . ழிருணர்ந் தெமைவி னாவி யியங்குவரேய்
58
இயங்கிய காலு நிலனும் எரியு மிருவிசும்பும்
மயங்கிய நீரும் மறையும் பிறவு மருவியரந்
தயங்கிய சோதியுந் தானாந் திருமலைத் தத்துவன்றாள்
முயங்கிய சிந்தை யினார்களெந் நாளு முடிவிலரே
59
முடியரை சாளுமுந் நீரகல் ஞாலந்தன் முன்னணிந்த
வடியரை யாள்விடு வான்சிரா மலை ஐயநிலயிற்
பிடியரை சாளி பிடிப்ப நடுக்குறும் பெய்புனத்தேய்
குடியரை சாளுங் குறவருஞ் சாலக் கொடுமையரே
60
கொடும்பற் றுயங்கிக் குழிகண் ணிடுங்கிக் குரனடுங்கி
இடும்பைக் கொதுங்கி யிறுமற் பகைகொல்ல இல்லிபட்ட
நெடும்பற் களைய நிலையா உடலை நிலையுமென்னார்
திடும்பற் கலுழிச் சிராமலை யாளியைச் சேர்ந்தனரேய்
61
ஆளியைச் சேர்ந்த வகலத் தவனுக் கிளையவம்மென்
றோளியைச் சேர்ந்த பிரான்றன் சிராமலை துன்னலர்போல்
மீளியைச் சேர்நாதனம் செய்தளை யெய்வினை யேன்பயந்த
வாளியைச் சேர்ந்த சிலைபோல் லுருவத்து வாணுதலே
62
நுதன்மிசைச் செங்கண் மலர்ந்தனங் கோடையின் மன்மதவேள்
மதனுகப் போந்தழற் சிந்துவித் தான்வண் சிராமலைவெற்
பிதன்மிசை சாரலில் யாமா டிடமிள வண்டுறங்கும்
புதன்மிசைத் தோன்றியும் காந்தளும் பூக்கும் பொழிலிடமே
63
பொழிலுடை யார்பணி பொன்னடி வானவர் முன்முடிசேர்
கழலுடை யானது காமர் சிராமலைக் காரனைய
குழலுடை யாணசைய ராற்குறவர் கொல்லியானைக் கொள்ளித்
தழலுடை யாநெறி யம்பொறி போர்க்குந் தயங்கிருளே
64
இருளின் படலம் மிவைகார் முகிலில் லைவென்னின்
மருளு மயர்வும் பெரிதுடை யாரில் லைவல்லி .
. ருணோய் தெரும் மனத்தார்க் கருளும் பிரான்றன் சிராமலைபோல்
பொருளும் மவிரும் பொன்னகர் வீதி புகுந்தாரேய்
65
வீதிவந் தாருடன் வெள்களந் தான்னிள ராலிவடன்
சோதிசேர்ந் தான்சிந் தை . ரல்லி . வுண்ணா . ரதருவின்
. . சிந்தா மந்தியா டுஞ்சிரா மலைப்போ
லாதிசெந் தாமரை வண்ணங்கண் டானங் கள்இழையே
66
இழையிடங் கொண்ட தடமுரண் . . திளங் கோமதலை
விழைவிடங் கொண்ட வெண் . ரனாறி . ர்தன்றி . ன்னி . ழவி
மழையிடங் கொண்ட சிராமலை யாரளி மிறந்தவர்போல்
பிழையிடங் கண்டது . . . . . ன் பெண்கொடிக்கே
67
கொடிகட் டியமணி மாளிகைத் தில்லையுட் கொற்ற மன்னர்
முடிகட்டி யமுகைசேர்கழல் மூவாயிரவர் முன்னின்
றடிகட் டியகழ லார்க்கநின் றம்பலத் தாடுமைய்யர்
வடிகட் டியபொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே
68
வான்தோய் சிராமலை வந்திறைஞ் சாதவர் மையல்வைகுந்
தேன்றோய் மொழியவர் செவ்வாய் நினைந்துவெள் வாய்புலர்ந்து
மீன்றோய் கடலன்ன வேட்கைய ராகத்தம் மெய்ம்மைகுன்றி
ஊன்றோய் உடகிங் கொழித்துயிர் போக்கும் உறைப்பினரே
69
உறைப்புடைக் கூற்றை யுதைத்துயிர் மாற்றி யுலகறிய
மறைப்புடை மார்கண் டயற்கருள் செய்தவன் வானெரிவாய்க்
கறைப்புடைப் பாம்புறை திங்கட் கரைக்கங்கை நீரலைக்குஞ்
சிறப்புடைச் செஞ்சடை யான்உறை கோயில் சிராப்பள்ளியே
70
பள்ளியம் மாதுயி லெற்கின் றிலை பாவிப் பிழைத்தாய்
வள்ளிதம் . . சிலைவேடன் உட்கா . . . . . . .
வெள்ளியம் மாமலை யாளன் சிராமலை மேல்மலையன்
உள்ளியம் மாவிரந் தாலுகந் தியபத முன்மத்தமே
71
மத்தமைத் தான்சென்னிப் பொன்னிம வான்பெற் றமாதுதன்
. . . . . . . . . . . . . முழுதும்
பித்தமைத் தாய்சிந்தை நொந்து குலமந்து பேரமர்க்கண்
முத்தமைத் தாய்கங்கை . ¡கில் . நின் முதிர்ச்சியையே
72
முதிரும் பரவை முகந்தகொண் மூமுக டேறிமுன்னி
யதிரும் மா . . . ப்பது . . . . . வ்வமுங்
கதிருன் மலந்த சிராமலை யாளி கழனோம்பு
கதிர்த்திரு வருள்போ லினியா னையின் றெய்துவனே
73
யானையின் றெய்த பிடியா மட . . . . . .
. . யன் பர்தம் வாழ்நா ளை . . றென்றுவிட் டார்சிந்தை
. . னெறுங் கொன்ற வீரன் சிராமலை யேவினப்பாற்
பூனை நின்றெங்கும் பொரியதிர் தினம்பு குந்தனரே
74
தினம்புகு கின்றது தண்பணை யாகத் தன் . . மா
வினம்புகு தேர்நின் றிழிந்துபுக் காரன் பரென்று . வுஞ்
சினம்புகு திண்விடைப் பாகன் சிராமலைத் தெய்வமன்னான்
மனம்புகு வெம்பணிக் கோ . . ணந்திட் டமாமருந்தேய்
75
மருந்தேய் சிராமலை மாமணி யேமரு தாடமர்ந்தாய்
கருந்தெய் நறும்பொழிற் கற்குடி மேய கொழுஞ்சுடரேய்
முருந்தேய் முறுவ லுமைகண வாமுதல் வாவெனநின்
றிருந்தேய் நிறையழிந் தேன்வினை யேன்பட்ட வேழைமையே
76
ஏழைப் புதல்வ னெனக்குத் துணையுமக் கெங்கையுங்
கோழைக் குரற்பெரும் பாணனை யுங்கொளக் குன்றர்கொன்ற
வாழைக் குலைமண நாறுஞ் சிராமலை வாழ்த்தலர்போல்
மோழைப் பெரும்பேய் சொல்லேலு நில்லெனுமென் முன்கடையே
77
கடையகத் துச்சென்று கானிமித்து நின்று கைவிரித்து
நடையகத் துப்பெரி தென்னத் திரிவர் நகுமதிசேர்
சடையகத் துக்கங்கை வைத்தான் சிராமலை சார்வொழிந்து
படையகத் துச்செல் வராய்நல் லாரான . . . . ரே
78
களகன் னிவனெனப் பாரோர் நகப்பனை யின்மடன்மே
லகளந் நுதலி பொருவந் நாட லியானைக்கன்று
மிளகு மடமையின் முளையும் மிளகமென் றேன்பருகி
குளகுந் நுகருஞ் சிராமலை சூழ்ந்த குலப்பதிக்கேய்
79
பதியற் றிடராற் படுதலை யிற்பலி கொள்வதெங்குங்
கதியற்றி ஊர்வது காசின மால்விடை காதலியுந்
நதியற்றி யூர்நகர் நஞ்சுண் பனதந் தலை . . ஞ்ச
மதியற்றி யூருஞ் சிராமலை மாதவர் வாழ்வகையே
80
மாதவர் வாழுஞ் சிராமலை மாமணி கண்டாங்கேய்
போதுவ ராகிலும் போமடவா யென்ன நிலநடுவே
யீதவர் விதியன் றென்பர் போலிருந் தோங்குணத்தோய்
. . யா விசொல் லாயவர் பாற்சென்று சொல்லுதற்கேய்
81
சொல்லும் பொருளும் சுவையும் பயனு மிலவெனினும்
அல்லும் பகலும் மிகதா மெனக்குப் புரமெரிப்பான்
வில்லுங் கணையுந் தெரிந்த பிரான்தன் சிராமலைமே
லெல்லுங் கனைகழ லின்குணம் பாரித்த வென்கவியே
82
கவியலைத் துண்ணுங் கலைஞர்தங் காமரறு கார்களிற்றின்
செவியலைத் துண்ணுஞ் சிராமலை வாழ்நனைச் சேரகில்லார்
புவியலைத் துண்ணும் போர்வண் . . . . . வலராய்
நவியலைத் துண்ணுமங் காடுநங்கை . ராடு நண்ணுவரே
83
நண்ணு தலர்கா நற்படு மலரு நறுங்குடுமி
விண்ணுதல் போழுஞ் சிராமலை வெற்பனை வேறிருந்து
மண்ணுதல ரடிப்பணிந்த னாம மதை. . டக்காயன்
. . . வல்லார்க் கெளிதிமை யோர்த மிரும்பொழிலே
84
இரும்பிடைச் சேர்ந்ததெண் நீர்வளண்மை பெற்றிமை யோரிருக்கப்
பொரும்படைக் கூரெய்த பொன்மலை யாயை புணர்ந்தபின்னைக்
கரும்பா . . . . . . மிர்துங் கனிவளனுஞ்
சுரும்பிடைத் தேனுநன் பாலுநின் போலச் சுவையில்லையே
85
இல்லையென் பார்பொரு ளுண்டெனப் பரிவ விரதிபழஞ்
சொல்லுந் தளையா லவர்இரணங் கள்மூன்றின் சுடர்விளக்காத்
தில்லையென் பர்தென் சிராமலை யாயென்று சென்றிறைஞ்சி
வல்லையன் பர்க (நெஞ்சே) யடு . . னியின வன்பழிக்கே
86
பழிக்கும் இருட்படலம் பேரரு ளன்கையு மஞ்செழுதயு
விழிக்கும் இளமையவ ரேறும் மிடத்தெதிர் வந்தருவி
தெழிக்குஞ் சிராமலைச் சித்தரைத் தீர்த்த . . யங்
கழிக்கும் மிதுமெய்ம்மை கைகொண்ட யோகங் கடலிடத்தே
87
இடங்கொண்ட வேலையு மேழுமலை யும்திசை யானையெட்டும்
படங்கொண்ட நாகஞ் சுமந்தவிப் பாருமே படருங்கொலோ
திடங்கொண்ட சாரணற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்சேர்
நடங்கொண்ட சேவடி குஞ்சித் தருள்செய்த நானகத்தே
88
அருள்செய் வதும்படை யென்மெய்ம்மை யேயடி யேனுக்கின்மை
பொருள்செய் துதவும் புதல்வரைத் தந்தென்பொல் லாதசொல்லால்
மருள்செய்த மாலைகொண் டானைவண் டாருஞ் சிராமலைவா
யிருள்செய்த கண்டனை யேதொண்டர் காள்வந் திறைஞ்சுமினே
89
வந்திறைஞ் சித்தளர்ந் தேன்செல்லு மோசிந்தை மாதவர்மேற்
சந்திறைஞ் சிப்படர் சாரற் சிராமலைத் தாழ்பொழில்வாய்
கொந்திறைஞ் சிக்கமழ் கோதைக் குலாவி குழலவிழப்
பந்திறைஞ் சிப்பிடி பாளிடைக் கேசென்று பற்றுண்டதே
90
தேறுசொல் லாததமிழ்த் தென்வேம் பயரண்ணற் செங்குவளை
நாறுமல் லாகத்து நாராயணன் பண்டை நான்மறையும்
ஏறுமல் லோனைச் சிராமலை யாளியை யிங்கு . . த்த
னீறுமல் லோர்தம்மை நோக்கவல் லார்க்கென்று நோயில்லையே
91
நோயிலங் காதலு டையநெஞ் சேய்நுரை வெண்கடலுட்
போயிலங் காபுரமஞ் செற்றபொற் றேரவன் போந்திருந்து
வியிலங் கார்தரு மந்திரத் தால்வணங் கிப்பணிந்த
சேயிலங் கார்கழற் றீர்த்தன் சிராமலை சென்றடைந்தே
92
அடைக்குங் கதிர்மணி யாரல் முலைக்கணிந் தல்கின்மெல்லம்
புடைக்குங் கலைபுனைந் தோதியிற் போது பொதிந்துவிட்டார்
விடைக்கும் முமைக்கு நற்பாகன் சிராமலை மெல்லியலீ
ரிடைக்கும் இளையவர்க் கும்பகை யோநும்மை யீன்றவரே
93
ஈன்றாள் வருந்தவிம் மைப்பிறந் தம்மைக் கிரங்கினைய்யு
மூன்றா முடிகொண் டொப்போ மெளிப்பட் டொரிங்கிநின்றோந்
தேன்றாழ் சிராமலை வாரியின் மூரித்தெய் வக்களிறேய்
தோன்றா யெமக்கொரு நாள்வினைப் பாசத் துடரறவே
94
துடரிடை யாத்த ஞமலியைப் போலிருந் தேனிச்சுற்றத்
திடரிடை யாப்பவிழ்ந் தென்னைப் பணிகொள்பொன் னைப்புரைஞ்
சுடரிடை யாத்த பைங் கொன்றையு மத்தமுஞ் சூழ்சடையின்
படரிடை யாத்த பரமன் சிராமலைப் பால்வண்ணனே
95
பால்வண்ண நீற்றெம் பரன்சிராப் பள்ளிப் பரஞ்சுடர்தன்
பால்வண்ணங் கண்டுநம் பல்வண்ண நீங்கிப்பக் கத்திடஞ்சேர்
மால்வண்ணங் கண்டுதம் மால்வண்ணங் கொண்ட வளைச்சரிந்து
மால்வண்ணங் கொண்டுவந் தார்சென்று காண்மின்கள் மங்கையிரே
96
மங்கையம் பார்கண்ணி பெண்ணுக் கரைசி மலைமடந்தை
கொங்கையம் பாரங்கள் போல்வா னெழுந்து குவிந்தழிந்து
பங்கயம் பாதங்கள் பொன்மலர் பெறாதவர்ப் பொன்மலைமேற்
புங்கவன் பாதந் தொழுதொழிப் போமெங்கள் பொய்யுடம்பே
97
பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த
மெய்யினைக் காத்து வெறுத்தொழிந் தேன்வியன் பொன்மலைமே
லையனைத் தேவர்தங் கோனையெம் மானையெம் மான்மறிசேர்
கையனைக் காலனைக் காய்ந்த பிரானைக் கழல்பணிந்தே
98
கழலும் மருளுநஞ் சென்னிவைத் தோன்கன கச்சிலம்பிற்
கழலும் மலரும் மசோகும் பலாசுந்துட ராதெழந்திட்
டழலின் புறுத்து வெண்ணீறொத் தணநம் மணிவளையார்
குழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குராமலரே
99
குராமலைகொண்ட உலகொளிம் மதியமுங் கோளரவும்
இராமலை வான்பகை யென்பது பொய்மெய்ம்மை யோர்க்கருளுஞ்
சிராமலை வானவன் சென்னியின் மேற்கொண்ட சீர்மையினாற்
கராமலை நீர்க்கங்கை பாலுடன் வாழ்கின்ற கண்டனரே
100
கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா
லுண்டன மோந்தன வைம்பொறி யுள்ளு முயிர்தழைப்பக்
கண்டன கேட்டன வுற்றன காம ரறுசுவையா
லுண்டன மோந்தன பொன்மலை யாளர்க் கோக்கினவே
101
ஓக்கிய கையோ டொருக்கிய யுள்ளத்தி யோகியர்தம்
வாக்குயர் மந்திரம் வானரங் கற்றுமந் திக்குரைக்குந்
தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்செம் பொற்கழல்மே
லாக்கிய சிந்தை யடியார்க்கென் னோவின் றரியனவே
102
அரியன சால வெளியகண் டீரரு வித்திரள்கள்
பரியன நேர்மணி சிந்துஞ் சிராமலைப் பால்வண்ணனைக்
கரியன செய்யன நுண்சுடர்ப் பைங்கட் கடாக்களிற்றி
னுரியனை நாழிகை யேத்தவல் லார்க்கிவ் வுலகத்துளேமுற்றிற்று
103
மற்பந்த மார்வன் மணியன் மகன் மதிள் வேம்பையர்கோ
னற்பந்த மார்தமிழ் நாரா யணனஞ் சிராமலைமேற்
கற்பந்த நீழலில் வைத்த கலித்துறை நூறுங் கற்பார்
பொற்பந்த னீழ லரன்திருப் பாதம் பொருந்துவரே
(பயன் கூறும் பாயிரம்)
வெண்பா (மேற்படி நூல் முடிவில் காண்பது)
104
மாடமதிரை மணலுர் மதிள் வேம்பை
யோடமர் சேஞலுர் குண்டூர் இந்-நீடிய
நற்ப்பதிக்கோ னாரா யணனஞ் சிராமலைமேற்
கற்பதித்தான் சொன்ன கவி

* கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் "மதுரை" என இந்நாளில் வழங்கப்படுவது "மதிரை" எனத்தான் காண்கின்றது அதாவது ஓலைச்சுவடிகள் 200 ஆண்டுகளுக்குமேல் சீர்மையாக இருக்க முடியாதாகையால் தலை முறை தலைமுறையாக தமிழின்பால் பற்றுடையோரும் தனக்கே புலமைதனைத் (கற்பிக்கும்) தொழிலாகக் கொண்டோரும் காப்பாற்றிவந்த ஓலைச் சுவடிகள் அதனை நகல் எழுது நிலையில் மாறுதலைடையும் போதெல்லாம் புதிதாக ஒன்றினை தன மனம் போன வழியில் சேர்த்துவிடுவர். அவ்வழி வடநாட்டு மதுரா சிறப்புப் பெற்றதாகையால் அதனை ஒட்டி தமிழ் நாட்டு நகரமும் இருக்கவேண்டும் எனும் கொள்கையில் மிக நன்றாகத் திட்டமிட்டு எங்கெல்லாம் மதிரை எனும் சொல் உள்ளனவோ அவற்றை மிக்கது தெரிந்தே அடுத்த முறை மாற்றி எழுது ம் நிலையில் மதுரை என மாற்றம் செய்து வந்துள்ளனர் எனத் தெரிகின்றது.
எங்ஙனம் ??
கல்வெட்டிலோ செப்புப் பட்டயத்திலோ ஒருமுறை பொளித்தால் மாற்ற முடியாது ஆகையால் பழம் கல்வெட்டுகளிலும் பழைய செப்புப்பட்டயங்களிலும் மட்டுமே மதிரை தன் பழைய பெயரை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது கொண்டு உண்மையை உணர முடிகின்றது மேலே இங்குக் கண்ட கல்வெட்டிலும் மதிரை எனத்தான் உள்ளது கண்டீர்.
ப.பாண்டியராஜா:
ஐயா! தாங்களே குறிப்பிட்டபடி, "
..... கல்வெட்டுகளுக்கே இயல்பான எழுத்துப் பொறி வினைஞரால் வரும் சொற்
பிழைகளுடன் படியின் ... " என்ற கூற்றுப்படி மதுரை என்பது பிழையாக மதிரை
என்று பொளிஞரால் எழுதப்பட்டிருக்கலாம் அல்லவா! வேம்பற்றூர் என்ற ஊரில்
பெயரே பிராமிக் கல்வெட்டில் வேம்பிற்றூர் என்றுதான் குறிக்கப்பட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். (மதுரை விக்கிரமங்கலம் அருகே பெரிய உண்டாங்கல்லு கல்வெட்டு)
நூ.த.லோக சுந்தரம்:
சோழர்கள் செப்பேடுகள் பத்தொன்பது எனும் (நடன காசிநாதன்)நூலில் இருந்து இரண்டு எடுத்துக்காட்டு படம் எடுத்து வைத்துள்ளேன் காண்க.
(1) இது முதலாம் பராந்தகன் காலத்து உதயேந்திரம் செப்பேடு ஏ டு 5 பக்கம் ௨
(2)
"திருத்தணியில்" அருகு வேலஞ்சேரியில் கிட்டிய இதுவும் முதலாம் பராந்தகனின் காலத்து செப்பேட்டுப் பக்கம்1 ஏடு 4 ஆகும். இங்கு ஊர்களின் பெயர்கள் கீழ்க்கோடிட்டு காட்டியுள்ளேன். இதனில் வரும் மதிரை பாண்டிய நாட்டு மதிரை அல்ல ஆனால் ஊர்ப்பெயர் எப்படி வழங்கியது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
________________________________________________________
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment