- நா.கண்ணன்
நீண்ட நாட்களாக மதுராந்தகம் பெருமாளை சேவிக்க வேண்டுமென ஆசை. என் மாமனார் வாரிசுகள் அக்கோயிலில் திருவாராதணைக் கைங்கரியம் செய்துள்ளனர். அவர் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். சீதையுடன் கைகோர்த்த வண்ணம் இராமன். கண்கொள்ளா அழகு. சோழர் காலத்து விக்ரகமாக இருக்க வேண்டும். தீர்க்கமான அங்க லட்சணம். இராமானுஜருக்கு இங்குதான் அவர் மாமா திருமலை நம்பிகள் பஞ்சசம்ஸ்காரம் செய்வித்தாராம்.
கோயில் எவ்வளவு பழமை என்பதில் சில சந்தேகங்கள். இராமானுஜர் சம்பவம் உண்மையெனில் 1000 ஆண்டுகள். ஏதோ கலெக்டருக்கு இராமன் காட்சி கொடுத்த கல்வெட்டு உண்டு என்று தாயார் சந்நிதி அறிவிப்பு சொல்கிறது. படம் எடுத்தேன். நான் பார்த்தவரை அங்குள்ள ஒரே கல்வெட்டு. துரை ஐயா வாசித்துத் தெளிவு படுத்த வேண்டும்.
- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
[doraisundaram18@gmail.com]
கல்வெட்டு முழுமையாக இல்லை. துண்டுக்கல்வெட்டு.
படித்த அளவில் கல்வெட்டின் பாடம் :
1 ...................... இருபத்து (நால்)
2 ... செம்பொன் எண்ப (த்/து?)
3 கழஞ்சே முக்காலே இரண்டு
4 (ம)ஹா ஸபையாரும் வீரசிகர
5 சரி ஸபையாருஞ் சார்த்துவித்த
6 ண .........................................
கருத்து :
நிவந்தம் ஒன்றுக்குச் செம்பொன் (எண்பதுகளில் ஒரு எண்ணிக்கை ) கொடையளிக்கப்படுகிறது.
தவிர ஒன்றே முக்கால் கழஞ்சுப் பொன் கொடையும் இருக்கலாம்.
இரு ஊர்களின் மகா சபையார் குறிக்கப்படுகின்றனர்.
வீரசிகர என்பது ஒருவரைக் குறிக்கிறது. அரசரா அல்லது வேறொருவரா என்பது தெளிவாகவில்லை.
சார்த்துவித்த என்பது கொடை பற்றிய யூகத்துக்கு இடமளிக்கிறது. ஆடை, அணிகலன் போன்றவற்றைச்
சார்த்தும் நிவந்தம் ஆகலாம். உறுதியில்லை.
கிரந்த எழுத்துகள் உள்ளன. எழுத்து நேர்த்தியாகச் செதுக்கப்படவில்லை என்றாலும் எழுத்தமைதியைக்
கருத்தில்கொண்டால், கல்வெட்டு 16-17 நூற்றாண்டைச் சேர்ந்ததாகலாம். இதையடுத்துப் பிற்காலத்துக்கும் சிலர் கொண்டுபோகலாம். காலக்குறிப்பு கல்வெட்டில் இருந்திருப்பின் ஐயம் ஏற்படாது.

கல்வெட்டு தரும் செய்தி

___________________________________________________________
முனைவர் நா.கண்ணன்
navannakana@gmail.com
navannakana@gmail.com
___________________________________________________________
What do you mean by this? இராமானுஜர் சம்பவம் உண்மையெனில்
ReplyDelete