Thursday, October 27, 2016

மணிமங்கலம் பலகைக்கல் கல்வெட்டு


--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


         மணிமங்கலம்  தாம்பரத்திலிருந்து  10 அல்லது 12 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமம். இங்கு தர்மேசுவரர் சிவன் கோயிலும், இராசகோபாலசாமி  பெருமாள் கோயிலும் உள்ளன. கூகுள்+  பகுதியில் வைத்தியநாதன் இராமமூர்த்தி என்பவர்  இரு கோயில்களின் ஒளிப்படங்களுடன் செய்திகளை நேற்றுப் பகிர்ந்திருந்தார் . அதில் பருத்த பலகைக்கல் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டின் படமும் ஒன்று. மேற்குறித்த இரு கோயில்களில்  ஒன்றில் அது அமைந்துள்ளது. குறிப்பாக எந்தக்கோயிலில் என்பது தெரியவில்லை. கல்வெட்டில் பத்து வரிகளே பார்வைக்குப் புலப்பட்டன. மீதி வரிகள் மண்ணில் புதைந்த கல்லுக்குள். விசய நகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு அது. அவர் பதவிக்கு வந்த அடுத்த ஆண்டைச் சேர்ந்தது. அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். மீதிப்பகுதியை யாரேனும் வெளிக்கொணரச் செய்தால் புதையுண்ட கல்வெட்டுப்பகுதியின்  செய்தியும் தெரியவரும்.

 


கல்வெட்டின் பாடம் :

1    ஸ்வஸ்திஸ்ரீ மந்
2    க்ருஷ்ண தேவ மஹா
3   இராயர் பிறிதி
4   வி ராச்சியம்
5   ண்ணி  அருளா
6   நின்ற சகர
7   வர்ஷம்  143
8   2  மேல் செ
  ல்லா நின்ற
10 (ப்ரமோதூத)

 

குறிப்பு :
சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.
பிறிதிவி=பூமி
சக வருடம் 1432 என்பது கி.பி. 1510-ஆண்டுக்கு இணையானது. பிரமோதூத
என்னும் தமிழ் ஆண்டும் 1510-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. தெளிவான
வரலாற்றுக்காலத்தைக் கொண்டுள்ள இக்கல்வெட்டு சொல்லும் மற்ற செய்திகள் என்ன?  உதவி தேவை.



___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

No comments:

Post a Comment