Monday, October 3, 2016

விளக்குத் தூண் மதுரை பழம் புகைப் படம் ஓர் ஆய்வு

-- நூ.த.லோக சுந்தரம்


மதுரையில் இன்றும் "விளக்குத்தூண்" எனும் பெயரில் ஓர் பேருந்து நிறுத்தம் உண்டு என நான் என் மதுரை மீனாட்சிக்கோயில் வழிபாட்டில் பேருந்தில் செல்லும் பொது கேட்ட நினைவு.   ஆனால், அதற்கு அப்பெயர் எப்படி வந்தது  என சிலரை கேட்டபோது அவர்கள் விளக்கம் தர அறியாமலிருந்தனர்.

மதுரையின் மிகப்பழமையான புகைப்படம் ஒன்றில் "விளக்குத்தூண்" எனும் தலைப்புடனேயே ஒன்று  காணப்பட்டது இங்கு காண்க:



(1)
மேற்கு கிழக்காக தொடரும்  தெற்கு மாசி தெருவும்,
வடக்குத்தெற்காகச் சென்று முடியும் கிழக்கு மாசித் தெருவும்,
சந்திக்கும் இடம் ஆகின்றது.

(2)
இந்தத் தூண் சந்திப்பின் தெற்கில் வடம்போக்கித்தெரு என உள்ளதால்
கிழக்கு மாசி தெருவில் வந்த தேரோட்டம் தெற்கு மாசி தெருவிற்கு
திரும்பும் இடம் எனல் வேண்டும்.
அதாவது தேரோடும் தெருவினுக்குத் தென் கிழக்கு மூலை வலப்பக்கத் திருப்பமாகும்.

(3)
தூணின் சதுரவடிவ பீடத்தில் படும்  ஞாயிற்று ஒளியின் வழி அதன்  முகம் மேற்கல்லாது 
கிழக்கு நோக்கியதே  ஆகும். ஏனெனில் வரைபடம் வழி தூணின் பின்புலம் உள்ள 10 பில்லர் தெரு தூணிற்கு வலப்புறம் உள்ளது.

(4)
பின்புல கட்டிடத்தை சுவர் மீது காணாத ஞாயிறு ஒளி   தூணின் அடிப்பகுதியில் காணும் பிதுங்கிய வட்ட வடிவம் மேல் படும் ஞாயிற்றின் ஒளி தூணின் அரைப்  பகுதி வரை விழாததால் ஞாயிறு தனது தெற்கோட்டத்தின் கடைக்காலம் ஆகும் (தட்சிணாயனம்)

(5)
அதாவது புகைப்படம் எடுத்த திங்கள் டிசம்பருக்கு ஏறக்குறைய இருக்க வேண்டும்

(6)
புகைப்படம் எடுத்தவரின் நிலை கிழக்குமாசித்தெருவின் சந்திப்பிலிருந்து சற்றே   வடக்கின் கண் நின்று படம் எடுத்திருக்க வேண்டும்

(7)
படத்தின் பின்புலத்தில் காணும் திருமலை நாயக்கர் மகாலின் மிகுத்த உயர்நிலை மாடங்கள் புகைப்படம் எடுத்தகாலத்து அழிந்து படவில்லை

விளக்குத்தூணிண் வரலாற்றுக் குறிப்பு:

மதுரை நகரின் பத்துத் தூண் தெரு அருகே, கீழமாசி வீதியும்  தெற்கு மாசி வீதியும் இணையும் இடத்தில், வீதியின் நடுவே அமைந்துள்ள அழகிய வேலைப்பாடுகள் மிக்க இரும்பு  விளக்குத்தூண்  ஓர் நினைவுச்சின்னம்.  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மதுரையின் ஆட்சித் தலைவராக (Collector of Madurai) 1835 ஆண்டு  முதல்  1848 ஆண்டு வரைப்   பணியாற்றியவர் "ஜான் பிளாக்பர்ன்"  (John Blackburne) என்ற ஆங்கிலேயர்.  இவர் அன்றைய மதுரை மாநகரின் குறுகிய  சாலைகளை, பல எதிர்ப்புகளுக்கிடையே  விரிவாக்கம் செய்து நகரப் போக்குவரத்தையும்,  நகரின் தோற்றத்தையும் செம்மைப்படுத்தப்   பல நடவடிக்கைகள் எடுத்து மதுரை நகரை மேம்படுத்தினார்.  அவர் செய்த பணிகளைப் போற்றும் விதமாக,  அவருக்காக இந்த  வேலைப்பாடமைந்த அழகிய இரும்பு விளக்குத்தூண் ஓர் நினைவுச் சின்னமாக எழுப்பப்பட்டது.  இக்காலத்தில் இச்சாலையின்  வழியே பேருந்துகள் செல்ல அனுமதியில்லை.






இந்தப் படத்தை "லின்னேயஸ் ட்ரிப்பி"  (Linnaeus Tripe) என்ற புகைப்படக் கலைஞர்  1858 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள இடைப்பட்ட  காலகட்டத்தில்  எடுத்தார் எனவும்,   1860 ஆம் ஆண்டு இப்படம்  வெளியிடப்பட்டது எனவும் தெரிகிறது.  இந்த நிழற்படம் 'பிரிட்டிஷ் நூலகத்துத் தொகுப்பில் ' 'பிளாக்பர்ன் டெஸ்ட்டிமோனியல்'  (The British Library Collection - The Blackburne Testimonial [Madurai]) என்ற குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
(தொகுப்பு: தேமொழி)

தகவல் பெற்ற இடங்கள்:
The British Library Collection
http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/t/019pho0000953s2u00009000.html

http://collections.vam.ac.uk/item/O130643/the-blackburne-testimonial-photograph-tripe-linnaeus/

Wikipedia:
https://ta.wikipedia.org/s/4bhi



________________________________________________________ 









நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  








No comments:

Post a Comment