பேரா.டாக்டர்.நாகராசன்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் தலைசிறந்த சில முற்போக்குச் சிந்தனையாளர்கள் பொருளாதார சமய அடிப்படையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும் இடைவெளியைக் குறைக்கவும் புதிய சமதர்மச் சிந்தனைகளை முன்னெடுத்தனர். தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களின் அவலநிலை உரிமையின்மை உற்பத்தி செய்பவனுக்கு பொருளீட்டில் பங்கில்லை, உழுபவனுக்கு நிலம் சொந்தம் இல்லை, என்ற மேட்டிமைக்குடி, கீழ்க்குடி என்ற பிரிவு புதுயுகத்தில் முற்றும் களையப்படவேண்டும் என்ற சிந்தனையை முன்னெடுத்தவர்களில் சிங்காரவேல் செட்டியார் சர்க்கரைச் செட்டியார் திரு.வி.க வரதராஜுலு நாயுடு மற்றும் மதுரை ரோசாப்பூத் துரை என்றழைக்கப்பட்ட ஜோசப் ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகும்.

தொழிற்சாலைகளிலும் வயல்வெளிகளிலும் வேலைகள் சாதி அடிப்படையில் அமைந்திருப்பதையும் எல்லாருக்கும் பொதுவான தமிழ்நாட்டு ஆலயங்களுக்குள் கீழ்ச் சாதியினருக்கு உள்ளே நுழைந்து வழிபட உரிமை இல்லை என்ற நிலையில் மேலைநாட்டில் புதிதாக அடக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஒன்று சேர்ந்து உழைப்பாளர்களின் உரிமைக்குக் குரல்கொடுப்பதை அறிந்த ஈ வெ ரா மேற்கில் உருவான இந்தப் புதிய இயக்கங்களை நேரில் சென்று அறிந்துவந்து ஒரு புதிய இயக்கம் உருவாக்க எண்ணி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ராமனாதன் ஈரோடு ராமு ஆகியோருடன் ஐரோப்பிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1931 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை வழியாக லண்டனை அடைந்தவர் ரஷ்யாவில் மூன்று மாதங்கள் பயணம் செய்துவிட்டு 1932 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை வழியாகச் சென்னை வந்து சேர்ந்தார்
இங்கிலாந்தில் பொது உடமைக் கட்சியின் செயல்பாடு பற்றியும் அங்கே தொழிலாளர்கள் இன அடிப்படையில் அடக்கவும் கீழ்மைப்படுத்துவதையும் களத்தில் கண்டு பல தொழிலாளர் உரிமையை வலியுறுத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டும் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளிலும் விவசாயத்திலும் இறைவழிபாட்டு ஆலயங்களிலும் சாதி அடிப்படையிலான அடக்குமுறைக் காடவிழ்த்துக் கீழ்மைப் படுத்துவதையும் கலந்தாய்வுகளில் வெளிப்படுத்தினார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட எல்லா ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களின் தலைவர்களை நேரில் சந்தித்து அந்த இயக்கங்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார்
ரஷ்யாவில் மூன்று மாத காலம் பல தொழிலாளர் அமைப்புகளில் பேசி கார்ல் மார்க்சின் சோசலிஷச் சிந்தனை செயல்பட்ட முறையை தீவிரமாக அலசி ஆராய்ந்து கார்ல் மார்க்சின் சிந்தனை தமிழகத்தில் ஒரு புதிய சோசலிசமாக உருவாக வேண்டும் என்று விரும்பி தொழிலாளர் இயக்கத்தின் தலைமகனான சிங்கார வேலரை ஈரோட்டுக்கு அழைத்துவந்து ஈரோட்டுச் சோசலிசம் என்று சிங்காரவேலரை ஒரு புதிய கொள்கையை வடிவமைக்கச் செய்தார்
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் சமய அடிப்படையில் பொருளாதார அடிப்படையிலான இடைவெளியைக் குறைத்து பொருளாதார அடிப்படையில் பிற்பட்டவர்களும் சமய அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் சமம் என்று நிறுவ ஈரோட்டுச் சோசலிசம் வழிகோலும் என்று கருதி சமய வெறியால் ஏற்பட்ட இடைவெளியைக் குறைக்கவும் ஒரு புதிய இயக்கம் அமைக்கவும் எண்ணிய பெரியார் அந்த முயற்சியில் வெற்றி பெறாமல் போனது வருத்தற்குறிதது என்றாலும் தன் சொந்தச் செலவில் மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் செய்து கண்டு கேட்டறிந்தவற்றைத் தொகுத்து ஈரோட்டுச் சோசலிசம் என்று தமிழகத்துக்கு ஏற்ற சமதர்மச் சிந்தனையைப் பெரியார் வகுத்துத் தந்தார் என்ற செய்தியே இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் இருட்டடிப்புச் செய்யப்படும் நிலையை அகற்றப்பட வேண்டும். ஈரோட்டுச் சோசலிசமான நாட்டார் மரபியலும் மார்க்சியச் சிந்தனையும் இணைந்த கொள்கையைப் பரப்ப இந்த மேதினத்தில் முடிவெடுக்கவேண்டியது அவசியம்
காசியில் பிராமணர்களுக்கு மட்டும் என்றிருந்த மடத்தில் வேலையிலிருந்து துரத்தப்பட்ட பெரியார் 1932 தொடக்கத்தில் பொதுவுடமைச் சிந்தனையாளர்களுடன் செயல்பட்டதற்காக காவல்துறையால் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்டு ரசியாவில் பொதுவுடமைக் கட்சியின் தலைமையைச் சந்திக்கும் நிலையில் ரசியாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டாவர்களின் நலனுக்குக் காங்கிரச் தீர்மானம் போட வலியுறுத்திக் காங்கிசரில் இருந்தும் வெளியேற்றப்பட்டாலும் தன் இறுதி மூச்சுவரை தமிழ்நாட்டு இறையாண்மையில் சமய அரசியல் பொருளாதார ஆதிக்கச் சக்திகளின் அடக்குமுறையை எதிர்த்துச் சமூக நீதிக்குக் குரல்கொடுத்தவர் என்ற உண்மை அவரின் பிராமண எதிர்ப்பால் வெளி உலகுக்குத் தெரியாமல் முடங்கிக் கிடப்பதும் அவரின் பெயரால் ஆட்சிக்குவந்த திராவிடக் கட்சிகள் ஈரோட்டு சோசலிசத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதும் வேதனைக்குரியதாகும்.
ஆய்வு செய்வோரின் கவனத்திற்கு!
http://singaravelar.blogspot. in/2008/02/blog-post.html
பெரியாரின் குடியர சுப் பத்திரிகையில் தொடர்ச்சியாக சமூக சீர்திருத்த கருத்துக்களை அறி வியல் பார்வையோடு எழுதி வந்தவர். ஈரோட்டு திட்டமென பொதுவுடை மையை மையப் படுத்திய திட்டம் பெரியார் தந்தார். அதன் பின்னணியில் செயல்பட்டவர்களில் சிங்கார வேலர் முதல் இடத்தை பெறுவார். பெரியார் சமூக விடுதலையை மட்டுமே முன் னிலைப்படுத்த துவங்கினார். இந்நிலையில் பெரியாரோடு மாறுபட்டு ‘சுயமரியாதை இயக்கமா? அவமரி யாதை இயக்கமா?’ என சீறியவர் சிங்கார வேலர். ஆயினும், சிங்கார வேலரின் அளவற்ற புலமை கண்டு அவரை தன் ஏட்டில் தொடர்ந்து எழுத பெரியார் அனுமதித்தார். சிங்காரவேலர் தன் வீட்டில் அர சியல் மானிடவியல், உளவியல், தத்து வம், பொருளியல், பொது அறிவியல் என பல்வேறு தலைப்புகளில் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேக ரித்து வைத்திருந்தார். அந்த நூலகத் தை குறித்து அமீர் ஹைதர்கான் கூறு வார், ‘தென் இந்தியாவிலேயே தனி ஒருவர் நூலகங்களில் மிகப்பெரிய நூலகம் சிங்கார வேலர் இல்லத்து நூலகமே’ அது மட்டுமல்ல. சிங்கார வேலர் சேகரித்த நூல்களில் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள பெரிய நூலகமான லெனின் நூலகத்தில் ‘சிங்கார வேலர் நூலகம்’ என்ற பிரிவில் இன்றும் உள்ளது.
In the following discussion, we try and elucidate how for this Marxist science and religious beliefs were dialectical opposites. For him, politically, rationality was scientific where the method of science would provide the epistemic resources to dispel ignorance and superstitions. Interestingly, models of scientific change were espoused to legitimise models of social change and progress. Sources for legitimacy were sought in this case, from within the very structures of science. Naturally, this would entail a particular understanding of the nature of science which we try and elucidate below.
For Singaravelar, there could only be two kinds of beliefs in the world – “right beliefs and wrong beliefs” [Singaravelar 1973:3]. Since the latter was seen to be all pervasive in indigenous society, science as the embodiment of the former was to be disseminated to the people to demonstrate to them ‘how non-scientific their beliefs were’.2 Why was science the only correct knowledge? Such a question for Singaravelar was to be answered out of a serious engagement with the local traditions and cultural practices prevalent among the people, albeit only in the light of a philosophy of materialism, which for him was quite clearly embodied in the nature of science that he perceived it to be. In other words, indigenous traditions of knowledge were selected, located in a materialist reading of history, measured against science, to be invalidated. Then, reasons for the ‘non-development of science’ in indigenous society were squarely located in such chosen traditions and forms of authority associated with them, say institutionalised religious practices.

No comments:
Post a Comment