Wednesday, January 15, 2020

மதுரை திரௌபதி அம்மன் கோயில்

மதுரை திரௌபதி அம்மன் கோயில்

——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


            கிபி 1884இல் வாலா.பா. ராம கிருஷ்ண பாகவதர் அவர்களால் மதுரை தெற்கு மார்ட் வீதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மதுரை சௌராஷ்டிர தருமராஜர் சபைக்குப் பாத்தியமான கோயில்.  இக்கோயிலின் கும்பாபிஷேகம் 24. 1. 2016 அன்று நடத்தப்பட்டது.


கோயில் அமைப்பு:
            இரண்டு கருவறைகள், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

கருவறை:
            இரட்டை கருவறைகளில் ஒன்றில் இரண்டு அடி உயரம் உடைய நின்றகோலத்தில் திரௌபதி அம்மனும் மற்றொரு கருவறையில் தர்மராஜனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

அர்த்தமண்டபம்:
            அர்த்தமண்டபத்தில் பஞ்சலோகத்தால் ஆன பஞ்ச மூர்த்தியும், காளியம்மன்,கமல கன்னி, சந்தோஷிமாதா மற்றும் விநாயகர் இறை உருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.

மகாமண்டபம்:
            மகாமண்டபமானது சதுரம், எட்டு பட்டை, சதுரம், தரங்க போதிகை மற்றும் செவ்வகம், எட்டு பட்டை, செவ்வகம் தரங்கப் போதிகைகளுடன் கூடிய 25 எளிமையான தூண்களுடன்  காணப்படுகிறது.

            மகாமண்டபத்தில் கோயிலைக் கட்டிய ஸ்தாபகர் வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதர், உபதேச கிருஷ்ணன், முத்தாலு ராவுத்தர் சுவாமி (குதிரை வாகனத்தில்), ஸ்ரீ நல்லமுடி அரவாண் (ஐந்தடி உயரத்தில் முகம் மட்டும் கொண்ட சுதைச் சிற்பமாக), ஸ்ரீ சத்திய நாராயணன், ஸ்ரீ சுப்பிரமணியர்,  சித்திரகுப்தர் (பஞ்சலோகத்தில்), குரு (யானை வாகனத்தில்), சனீஸ்வரர் என்று அனைத்து உருவங்களும் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

            கோயிலின் வெளியே மகா முனீஸ்வரர் மற்றும் சூலக்கல் ஒன்றும் தனித்தனியாகச் சன்னிதியில் அமைக்கப்பட்டுள்ளன.


தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
devipharm@yahoo.in
https://www.facebook.com/devipharm






2 comments: