-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.
நம் இந்தியத் துணைக் கண்டத்தில் மிகப் புகழ் வாய்ந்த தர்கா , ஆஜ்மீரிலுள்ள “ஷரிஃப்” தர்காதான். என் பேகத்துடன் அங்கே சென்றிருந்தேன். உள்ளே போனதும் இரு பக்கங்களிலும் பெரிய பெரிய தேக்சாக்கள் . இரண்டுமே கிங் சைஸ். ஒன்று சின்ன கிங் .....மற்றொன்று பெரிய கிங்.
சின்ன தேக்சாவை பேரரசர் அக்பர் (1556-1605) , தர்காவிற்கு அளித்திருக்கிறார், இதில் ஒரே சமயத்தில் 2400 கிலோ உணவு சமைக்கலாம். பெரிய தேக்சா , அக்பரின் மகன் பேரரசர் ஜஹாங்கீர் (1606-1927) அளித்திருக்கிறார். இதில் 4800 கிலோ உணவு சமைக்கலாம். சமையல் கலை அறிந்த பக்தர்கள் மட்டுமே சமைக்கிறார்கள்.
பேரரசர் ஜஹாங்கீர் ஆட்சி செய்தபோது TOMES CORYAT எனும் ஆங்கிலேய யாத்திரிகர் ஆஜ்மீர் வந்திருக்கிறார். பெரிய தேக்சாவில் செய்த கிச்சடியை , 5000 மக்களுக்கு விநியோகம் செய்திருக்கிறார்கள். மகாராஜா , மகாராணி நூர் ஜெஹான் , அந்தப்புர அழகியர் துவக்கி வைக்க , கிச்சடி விநியோகம் சிறப்பாக நடந்ததாம்.
முகலாயர்களுக்குப் பின் மராத்தியரும், ராஜ புத்திரர்களும் ஆட்சி செய்தபோது நம் சர்க்கரைப் பொங்கல் போல “கேசரியா பாத்” (‘பாத்’ என்றால் சோறு/ சாதம் என்று பொருள். உதாரணம் ‘பிசிபேளா பாத்” ) என்று ஒரு உணவு தயாரித்து வழங்கப்பட்டிருக்கிறது. நிறைய இனிப்பும், குங்குமப் பூவும் கலந்து உருவாகும் உணவு இது. (கேசர் என்றால் குங்குமப் பூ ). “ கேசரியா பாத்”தயாரித்து விநியோகிக்கும் முறை இன்றும் தொடர்கிறதாம். ஆனால் நாங்கள் போன போது தேக்சா வில் காணிக்கை பொருட்கள்தான் கண்டோம்.
சில நல்லன அல்லாத செய்திகள்.
இந்தியாவிலேயே பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள இடம் அஜ்மீர் தர்கா தெருதான்.
சமாதியில் முழங்காலிட்டு தலை வணங்கித் தொழும்போது, நாலா புறமிருந்தும் “பைசா டாலோ” “பைசா டாலோ” எனும் குரல் காதுகளுக்கு இனிமை தரவில்லை
( தர்காவின் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.....தகவலும் படங்களும் இணையத்திலிருந்து.)

________________________________________________________
Singanenjam
singanenjam@gmail.com
singanenjam@gmail.com
________________________________________________________
No comments:
Post a Comment