Saturday, November 21, 2015

ஏரிகளில் கல் ஆவணங்கள்

- சேசாத்திரி சிறீதரன் 



இரண்டு வருடத்திற்கு மேலாக ஒரு கல்வெட்டை தேடி கிடைக்காமல் இருந்தது. ஓமலூர் - தாசசமுத்திரம் ஊர் மக்களிடம் விசாரித்தபோதும் கிடைக்கவில்லை, யாரோ எடுத்து சென்று விட்டதாக கூறினார்கள். ஆனால் இன்று நண்பர் மூலம் கிடைத்துவிட்டது.

கல்வெட்டு வாசகம்:-
"ஸ்வஸ்தி ஸ்ரீ  இராஜ ராஜ சோழ தேவற்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு பதிநொன்றாவது வடபூவாணிய நாட்டு 'கச்சிப் பள்ளி காமிண்டந்' பொங்கிலந் அமன்தாத் களியும் எந்தம்பி..ம்,

"இவ்விருவே மெங்கள் கைய்யால் மணலொழிக்கி இவ்வேரி கட்டினோம் இந்த அழிவு படாமற் காத்தாந் காலெந் தலை மேலென".

காலம்: கி.பி. 996

தாச சமுத்திரம் எரி , பேரரசன் ராசராசனின் பதினொன்றாம் ஆட்சி ஆண்டில் இந்த ஏரி கட்டப்பட்டது . கி.பி .996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஏ ரி தற்போது ஆயிரம் ஆண்டைக் கடந்து விட்டது .
ஏரியை அமைத்தவர் கச்சிப் பள்ளி காமிண்டன் பெங்கிலன் அமைந்தான் களி . அவனும் அவன் தம்பியும் கூட இருந்து வேலை செய்துள்ளனர் . இந்த ஏரியை அழியாமல் காப்பவர்களில் “கால் என் தலைமேல் ” என்கிறான் . இதற்க்கு அவர்களும் பாதம் பணிவேன் என்று பொருள்படும் .

- முனைவர் . கொடுமுடி சண்முகன்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “தமிழில் ஆவணங்கள் ” என்ற நூலில் முனைவர் .கொடுமுடி சண்முகன் அவர்கள் எழுதிய “ஏரிகளில் கல்  ஆவணங்கள் “ என்ற கட்டுரையில் (பக்கம் 37) வெளியிடப்பட்டுள்ளது.












 
சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
 





No comments:

Post a Comment