- கோ.செங்குட்டுவன்.
50களில் அச்சுக் கலை தொழிற்கல்விப் பாடமாக தமிழகக் கல்விக் கூடங்களில் சொல்லித் தரப்பட்டது. குறிப்பாக அவினாசி, வாலாஜாபாத் மற்றும் விழுப்புரம் போன்ற இடங்களில் இப்பாடப் பிரிவுகள் பிரபலம்.
விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலையிலும், அதன் நிர்வாகி திரு.இலஷ்மணசுவாமி அவர்களது முயற்சியில் அச்சுக் கருவிப் பொருத்தப்பட்டது.
இக்கட்டடத்திற்குக் கல்கி கூடம் என்று பெயரிடப்பட்டது.
இப்புதியக் கட்டத்தை இன்றைக்குச் சரியாக 62 ஆண்டுகளுக்கு முன்பு 2.9.1953இல் சென்னை அரசாங்க தேவஸ்தான அமைச்சர் கே.வெங்கடசாமி நாயுடு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும், அரசு தேர்வாணையக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் வி.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார்.
தகவல் மற்றும் புகைப்பட உதவி:
திரு.இல.ரவீந்திரன் அவர்கள், நிர்வாகி, மகாத்மா காந்தி பாடசாலை, விழுப்புரம்.
No comments:
Post a Comment