சீன உணவகங்களின் வரலாறு
- செல்வன்
அமெரிக்காவில் உள்ள சீன உணவகங்களின் வரலாறு குறித்த டாக்குமெண்டரி பார்த்தேன். சீன- அமெரிக்கர்கள் வாழ்க்கையை போலவே அதுவும் இங்கே பல போராட்டஙக்ளை சந்தித்துள்ளது
1850ல் கலிபோர்னியாவில் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கே மக்கள் குடியேறினார்கள். இதே சமயம் சீனர்கள் கூலி வேலைக்கு அமெரிக்காவுக்கு பெருமளவில் வந்தார்கள். 1850 சமயம் கலிபோர்னியா, சான்பிரான்ஸிஸ்கோ நகரில் சீன குடியேற்றம் நிகழ்ந்தது
ஆனால் சீனர்கள் மேல் இனவெறுப்பு காட்டபட்டு வேலைகள் மறுக்கபட்டன. வீடுகள் வாடகைக்கு கொடுக்கப்டவில்லை வேலை கிடைக்காது. இதனால் சைனாடவுன்களை உருவாக்கி அங்கே குடியேறினார்கள். வேலை கிடைக்காததால் சுயதொழில் செய்ய ஆரம்பித்தார்கள். லாண்டரி, உணவகம் ஆகிய இரு தொழில்களையும் இப்படி துவக்கினார்கள்.
சாப் ஸூயி என்பது இக்காலக்ட்டத்தில் உருவான சீன அமெரிக்க உணவு. அமெரிக்கர்களுக்கு ஏற்ற விதத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்காப்ட்டது சாப் சூயி. பன்றி, மாடு, சிக்கன் இறைச்சியை வாணலியில் போட்டு, சுவை இல்லாத பிளான்ட் ஆன மூங்கில் கொழுந்து மாதிரி காய்களைபோட்டு, சீன சாஸ் ஊற்றி வணக்கினால் சாப் ஸூயி ரெடி
1950களில் மிசவுரி மாநிலம், ஸ்ப்ரிங்பீல்ட் நகரில் கேஷ்யு சிக்கன் ரெசிபி உருவானது. அந்நகர மக்கள் சீனர்கள் தம் ஊருக்கு வந்து உணவகம் திறப்பதை விரும்பவில்லை. முதல்நாளே கடைமுன் "சீனனே வெளியேறு" என கோஷம். கடைக்கு குண்டும் வைக்கபட்டது. அதன்பின் மிகுந்த போராட்டத்துக்கு பின் உணவகம் திறக்கபட்டது. மிசவுரி மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக காஷ்யு சிக்கன் ரெசிபி உருவாக்கபட்டது. மிசவுரியில் எண்ணெயில் பொறித்த சிக்கன் பிரபலம். அதனால் சிக்கனை எண்ணெயில் போட்டு, சாஸ் ஊற்றி மேலே சில முந்திரிகளை போடால் காஷ்யு சிக்கன் ரெடி
சாஸில் சர்க்கரையும், தேனும் கலக்கப்ட்டதால் அதன் இனிப்பு சுவை மக்களுக்கு மிகபிடித்துபோய்விட்டது. போராட்டம் நடந்த கதை எல்லாம் மறந்துபோய் மக்கள் சீன உணவகத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த சூழலில் 1955ல் தைவானில் டெங் எனப்படும் செப் ஜெனெரல் சோஸ் சிக்கன் (general Tsos chicken) எனும் ரெசிபுயை உருவாக்கினார். அவர் சீனாவின் ஹ்யூனான் மாநிலத்தில் மிக பிரபலமானவர். டெங்கின் ரெசிப்யை காப்பி அடித்து வாங்க் எனும் சீனர் நியூயார்க்கில் 1972ல் சீன உணவகம் துவக்கினார்
அவரது நல்லநேரம் நிக்சன் அப்போது சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். நிக்சனுக்கு பரிமாறபப்ட்ட சீன உணவுகள் பத்திரிக்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. பலரும் சீன உணவகஙக்ளுக்கு போன் செய்து "நிக்சன் சாப்பிட்ட சீன உணவுகள் வேண்டும்" என கேட்க ஆரம்பித்தார்கள். அந்த சூழலில் வாங்கின் உணவகம் பெரும்புகழை அடைந்தது
அதன்பின் ஜெனெரல் சோஸ் சிக்கன் மிக பிரபலம் அடைந்தது. ஆனால் அதன் ஒரிஜினல் ரெசிபியை இப்ப யாரும் பின்பற்றுவதில்லை. பலவிதங்களில் மாற்றம் அடைந்தது ரெசிபி. ஆனால் இன்றூ ஜெனெரல் சோஸ் சிக்கன் இல்லாத சீன அமெரிக்க உணவகம் கிடையாது. ஜெனெரல் சோஸ் பெயரை கேள்விப்படாத அமெரிகக்ரும் கிடையாது. ஆனால் அவர் யார் என யாருக்கும் தெரியாது
ஜெனெரல் சோஸ் சிக்கன் இப்படி பிராபல்யம் அடைந்ததும் நியூயார் டைம்ஸ் ஜெனெரல் சோவின் மாநிலமான ஹூனான் மாநிலம் சென்றது. அங்கே விசாரிக்கையில் யாருக்கும் இப்படி ஒரு உணவு இருப்பதே தெரியவில்லை. ஜெனெரல் ட்சோவின் வம்சாவளியினர் ஹூனானில் இருந்தார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு உணவு இருப்பதே தெரியவில்லை. அதை அவர்கள் இதுநாள் வரை சாபிட்டதும் இல்லை
அமெரிக்காவில் ஐம்பதாயிரம் சீன உணவகங்கள் உள்ளன. சீன உணவகங்களை ஆதரிப்பவர்களில் முதன்மையானோர் யூதர்கள். காரணம் கிறிஸ்துமஸ் அன்று திறந்திருக்கும் ஒரே உணவகம் சீன உணவகம் தான். விடுமுறை என்பதால் அன்று சமைக்க மாட்டார்கள். கிறிஸ்துமஸை கொண்டாடுவதும் இல்லை. ஆக சீன உணவகத்தில் அன்று யூதர் கூட்டம் நிரம்பி வழியும்
இது குறித்த ஜோக் ஒன்று
யூதர்கள் தோன்றி 5000 வருடம் ஆகிறது
சீனர்கள் தோன்றி 4000 வருடம் ஆகிறது
ஆயிரம் ஆண்டுகள் சீன உணவு இல்லாமல் எப்படி சமாளித்தாரக்ள் யூதர்கள் என்பதுதான் வியப்புக்குரியது!!!!
(புகைப்படத்தில்: ஜெனெரல் சோஸ் சிக்கன்)
No comments:
Post a Comment