-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
கோயில்களுக்கு அரசர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அதிகாரிகள் அளித்த கொடை நிலங்களின் எல்லைகளின் அளவை குறிப்பதற்காகவும், எல்லைகளை நிர்ணயிப்பதற்காகவும் முத்தலைச் சூலம் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட எல்லைக்கல் ஒன்று நிலத்தில் ஊன்றப் பட்டிருக்கும். இதனைச் சூலக்கல் என்பர்.
இந்த சூலக்கற்களை இறை உருவங்களாகக் கருதப்பட்டு அவ்வப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருவதையும் அவற்றுக்கான பூசை மற்றும் சடங்குகள் நடத்துவதையும் கள ஆய்வில் அறியமுடிகின்றது.
அந்த வகையில் தானப்ப முதலி தெருவில், தானப்ப முதலி, காணாம் பசுவைக் கொன்ற பாவம் என்ற தமிழ் எழுத்துக்களுடன் கூடிய சூலக்கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூலக்கல்லின் பின்புறம் மற்றும் இடது பக்கவாட்டில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இந்த சூலக்கல்லானது பத்தரகாளியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் இருக்கிறது. மேலும் இதே போன்று நான்கு சூலக்கற்கள் மதுரையின் சப்பாணி கோயில், தெற்கு கிருஷ்ணன் கோயில், தெற்கு வாசல் போன்ற இடங்களில் சாலையோரத்தில் முத்துமாரியம்மன், தர்ம முனீஸ்வரர், மாரியம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது.
--------
No comments:
Post a Comment