Monday, April 21, 2014

"நமசிவாயா" வுக்கு ஒரு தத்துவ விளக்கம்











ஐந்தொழில் வல்லான் நிலை - 'நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்
(நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம்)
_________________________________________

நடராசர் சிலை - ஆடல்வல்லான் சிலை - கூத்தர்பெருமான்சிலை - பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும்.

பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை.

இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடல் வல்லான் சிலை உருவாக்கப்பட்டது.

1.வலக்கையில் உள்ள உடுக்கை ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது

2.இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.

3.மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = அழித்தலைக் குறிக்கிறது.

4.கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.

குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.

அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.

5. இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால் “தூக்கிய திருவடி” அல்லது “குஞ்சிதபாதம்” எனப்படும். வலக்கால் ‘அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற் ‘ஆடியபாதம்’ எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம் ‘அடக்கிய பாதம்’ ஒடுக்கிய பாதம்’ அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லது ‘அழித்த பாதம்’ எனப்படும்.

6. இப்படி 1.ஆக்கல், 2. காத்தல், 3. அழித்தல், 4. ஒடுக்குதல் அல்லது மறைத்தல் 5. அருளல், என்று ஐந்தொழில்களை செய்யும் இறைவனின் நிலையை விளக்கும் இந்த நடராசர்சிலை ‘ஐந்தொழில் வல்லான் சிலை’ அல்லது ‘ஐந்தொழில் வல்லான் நிலை’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம்

இதே நடராசர் சிலையினை ‘நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள்.

ந – ஆக்கல் – வலது மேல் கை

ம – காத்தல் – வலது கீழ்க் கை

சி – அழித்தல் – மேல் இடக்கை

வா – மறைத்தல் – கீழ் இடக்கை

ய - அருளுதல் – தூக்கிய இடக்கால்

ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால்

இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

குறிப்பு:- இதைத்தான் பதினெண்சித்தர்கள் ஐந்தும் ஆறும் அறியாதவன், ஐந்தை ஆறாக்கத் தெரியாதவன், ஐந்தும் ஆறும் ஒன்றென உணரத் தெரியாதவன் .. என்று குறிக்கிறார்கள்.

ஆடல் வல்லான், கூத்தர் பெருமான், தாண்டவ மூர்த்தி, நடராசர், ஆடும்பெருமான், மன்றாடியார்,.., என்று பல பெயர்கள் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியத்தில் உள்ளன.

---------------------------------------------------------
உங்களுக்குத் தெரியுமா!

நடராசர் சிலையும், ஆயிரத்தெட்டு சிவாலயங்களும்

நடராசர் சிலை ஆயிரத்தெட்டு வடிவ வேறுபாடுகளைக்கொண்டு வடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயங்களே ஆயிரத்தெட்டு சிவாலயங்கள்.


பகிர்ந்தவர் திரு கெளரிசங்கர் முருகேசன்






2 comments:

  1. பரிக்ஷைக்கு அச்சு. நன்றி. நமச்சிவாய.

    ReplyDelete
  2. நன்றி "இ" சார்.

    ReplyDelete