அமைவிடம்
தியாகனூர் கிராமம் (ஆத்தூர் அருகில்), தலைவாசல் தாலுக்க, சேலம் மாவட்டம்.
தியாகனூரில் இரு புத்தர் சிலைகள் உள்ளது.
01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை (மேலே குறிப்பிட்டுள்ள சிலை)
02. திறந்த வெளியில் உள்ள புத்தர் சிலை
தியாகனூர் பெயர் காரணம்
இப்புத்தரை தியாகன் என்றே அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்டு வந்தனர். அதற்கு காரணம் புத்தர் பெருமானின் துறவு வாழ்க்கை. ஞானம் பெறுவதற்காக தம்முடைய மனைவி, மக்கள், உறவினர்கள், அரச வாழ்க்கை ஆகிய அனைத்தையும் தியாகம் செய்ததால் தியாகன் என அழைக்கப்பட்டார். எனவே இவ்வூர் தியாகன் + ஊர் = தியகனூர் எனப் பெயர் பெற்றது.
01. தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலை
சிலையமைப்பு
கை - சிந்தனை கை
கால் - அரை தாமரை அமர்வு
ஞான முடி தீப்பிழம்பாக இல்லாமல் ஞான முடி சற்று புடைப்புடன் இருக்கிறது
தலைமுடி - சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள் -மூன்று
உயரம் 8 அடி
அகலம் 4 ½ அடி
நூற்றாண்டு 5 ஆம் நூற்றாண்டு
இச்சிலையின் மூக்கு மற்றும் வலது கையில் உள்ள பெருவிரல் சிதைவுற்று காணப்படுகிறது. இப்புத்தர் சிலை புகைபடத்தை தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி தமிழும் பௌத்தமும் என்ற நூலில் குறிபிட்டுள்ளார். பக்கம் 325
இச்சிலை கோவிலில் உள்ளது. இக்கோயிலின் முன் பெரிய அரசமரம் உள்ளது. இக்கோவில் 100 வருடத்திற்கு முன்பாக அவ்வூர் மக்களால் கட்டப்பட்டது. இது 30 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது. கோயிலின் மேலுள்ள கோபுரத்தில் நான்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு (அ) கோயிலின் முன் பக்கத்தில்: புத்தர் உருவம்
தெற்கு : கண்ணனின் உருவம்
மேற்கு : திருமாலின் நரசிம்ம அவதாரம்
வடக்கு :கிருஷ்ண அவதாரம்
புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது
02. திறந்த வெளியில் உள்ள சிலை
தியாகனூரின் தென்பகுதியில் உள்ள வயல்பகுதியில் உள்ள வேப்பமரத்தடியில் ஒரு புத்தர் சிலை உள்ளது.
சிலையமைப்பு
கை - சிந்தனை கை
கால் - அரை தாமரை அமர்வு
ஞான முடி தீப்பிழம்பாக
தலைமுடி சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள் மூன்று
பீடத்தின் உயரம் மிக சிறியது
உயரம் 5 அடி
அகலம் 3 அடி
நூற்றாண்டு 5 ஆம் நூற்றாண்டு
~*~மூக்கு சிதைந்து காணப்படுகிறது
நிலத்த்தின் உரிமையாளர் இச்சிலையை பாதிக்காத வண்ணம், இச்சிலையை சுற்றி உள்ள நிலத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்து இருக்கின்றார். விவசாயி கே துரைசாமி புத்த விகார் அமைக்க 1955 இல் 20 சென்ட் நிலம் தனமாக வழங்கினார்.
பெங்களூரில் உள்ள பௌத்த பிக்குகள் இக்கிராம மக்களுக்கு முறையான வழிமுறையை பயிற்சி அளிக்க விரும்பினர். இதற்கு ஆகும் செலவினங்கள் அனைத்தும் அவர்கள் ஏற்பதாக உறுதியளித்தும் மக்கள் விருப்பம் இல்லாததால் தமக்கு தெரிந்த முறையில் இன்றும் வணங்கி வருகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக திறந்த வெளியில் இருந்த இச்சிலைக்கு 50 இலட்சம் ரூபாயில் ஒரு தியான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இத்தியான மண்டபத்தை சேலம் மாவட்ட ஆட்சியாளர் மகரபூஷணம் போதி கன்று ஒன்றை நட்டு 28 ஜூன் 2013ல் திறந்து வைத்தார்.100 பேர் அமரும் அளவிற்கு இத்தியான மண்டபம் உள்ளது. - தினமலர் நாளிதழ் 28/06/2013
தியாகனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள புத்தர் சிலைக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=MsJXY8D7uEY&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
http://www.youtube.com/watch?v=-Hba3p2Pd_c&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
தியாகனூர் திறந்த வெளியில் இருந்த புத்தர் சிலைக்கான காணொளி
http://www.youtube.com/watch?v=ovn2BfjBq_8&list=UUppaK1uqALtjRqhta8L0EKw
http://www.youtube.com/watch?v=t9ctlkVo8Xk
தகவல் பெற்ற இணைய பக்கம்
http://elambodhi.blogspot.
தகவல்கள் அளித்தவர் ஆறகழூர் திரு பொன்.வெங்கடேசன் அவர்கள்
நன்நிமித்தம் என்பது வாழ்வியலை சீரமைக்கும் கடவுள் துணை என்பதை அன்றாடம் கண்டு வருகிறேன். அடுத்த விழியம் புத்தரை பற்றி இருக்கட்டும் என்று உள்மன்ம் கூறிய க்ஷணமே, சுபாஷிணியின் கம்போடிய புத்தர் வந்தார். ஆயத்தங்களை துவக்கம் போது 'தியாகனின்' தரிசனம். கருவி ஆ.பொ.வெ. & கீதா.
ReplyDeleteவாழ்க!
நன்றி "இ"சார்.
Deleteஐந்தாம் நூற்றாண்டா... அட!
ReplyDeleteஅட, ஶ்ரீராம், இங்கே???? நல்வரவு. இன்னொரு வலைப்பக்கமும் இருக்கு. http://thfreferencelibrary.blogspot.in என்று. நேரம் இருக்கையில் அதையும் பார்வையிட்டுக் கருத்தைப் பதியுங்கள். நன்றி.
Delete.........."புத்தர் திருமாலின் அவதாரம் என்ற தவறான கருத்தினால் கண்ணன், நரசிம்மன் மற்றும் கிருஷ்ணன் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது",,,,,,,,,,இவ்வாறாக கட்டுரையின் உள்ளே குறிப்பிட பட்டுள்ளதால் தான் 'புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என குறிப்பிடும் இவ்விளக்கத்தையும் ஆதaரத்துக்காக u -tube லிங்கையும் கொடுத்துள்ளேன்.ஹரி அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteBuddha an avatar of Vishnu or Not? It is in ones own thoughts. Buddha simply says do not accept any thing just because of it is handed down from generations. The following link on Buddha in U tube will help understand whether Buddha is an Avatar of Vishnu..
https://www.youtube.com/watch?v=9Xt4HyhJMhQ
Thanks Mr.Ram Chandrasekaran.
ReplyDeleteஆறகழூர்-தியாகனூர் பற்றி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteபுத்தர் தியான மண்டபம் பற்றி மேலதிக படங்களுக்கான தொடுப்பு
https://www.facebook.com/venkatesanpon/media_set?set=a.355509167886192.1073741826.100002813356056&type=3
https://www.facebook.com/venkatesanpon/media_set?set=a.355509167886192.1073741826.100002813356056&type=3
ReplyDelete