Monday, April 21, 2014

குடியம் குகை குறித்த சில தகவல்கள்!

கடந்த மாதம் ஒரு சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஒரு அழைப்பு, காலை குடியம் போறோம், வந்துவிடு என்று ரீச் பவுண்டேசனின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யா கூறினார். குடியம் குகையா எங்கேயோ கேள்வி பட்ட பெயராக இருக்கிறதே என ரீச் பவுண்டேசன் சந்திரா அய்யாக்கு அழைத்தேன், ஆம் போகிறோம் காலையில் 5.30க்கு வந்துவிடு என்றார்.
அங்கே என்ன இருக்கும் என்ன பார்க்க போகிறோம் என எதுவும் அறியாது மறுநாள் கிளம்பினேன்.

ரீச் பவுண்டேசனின் தலைவர் / தொல்லியலதுறையின் முன்னால் அதிகார் சத்தியமூர்த்தி அய்யா மற்றும் இந்திய புவியியல் ஆய்வு துறையில் இருந்து பத்ரிநாதன் அவர்கள் தலைமையில் கல்வெட்டு மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என 30 பேர் கிளம்பினோம். போகும் வழி எங்கும் பத்ரி அய்யா அவர் தம் வேலை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

சென்னைக்கு இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ல குடியம் என்ற ஊருக்கு சென்றோம், 10 வீடுகள் கொண்ட குக்கிராமத்தை அது. எல்லோரும் இறங்கி கொஞ்சம் இளைப்பாறினோம்.

அருகில் மலையே தெரியவில்லையே எங்கே இருக்கிறது குகை என அருகே இருந்தவரிடம் கேட்டேன் கையை மேலே தூக்கி வடக்கு பக்கம் பார்த்தவாறு மனிதர்கள் போன வழித்தடம் இருக்கும் அதைப் பின்பற்றி 7 கிமீ  நடக்க வேண்டியதுதான் என்றார்.

எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம், கூழாங்கல் பாதை எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றது. மிகவும் அடர்த்தியான காடு அல்ல. ஆனால் சில இடங்களில் 6 அடி தொலைவிற்கு அப்பால் இருப்பது தெரியாத அளவு புதர்கள் மண்டிகிடந்தன.

இனி படங்களுடன் பயணிப்போம்


வட்டவடிவக் குடிசை

Inline image 1


கார் போன தடங்கள்

Inline image 2


ஒற்றையடிப்பாதை

Inline image 5

மாறிய மண்ணின் வண்ணம்

Inline image 3


வண்ணக்கல்

Inline image 4



குடியம் குகைக்கு ஆய்வுக்காகச் சென்று வந்து பகிர்ந்தது உதயன்



No comments:

Post a Comment